உங்கள் மணி பிளான்ட் எந்த வடிவத்தில் இருப்பது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்? மணி பிளான்ட் செடியை இந்த இடத்தில் வைத்தால் செல்வம் மேலும் மேலும் பெருகி கொண்டே இருக்குமாம் தெரியுமா?

money-plant-vastu
- Advertisement -

மணிபிளான்ட் செடி என்று சொன்னாலே அதிர்ஷ்டத்தை தரக்கூடிய மற்றும் செல்வ வளத்தை வாரி வழங்கக்கூடிய செடி என்று தான் எல்லோருக்கும் தெரியும். அதை முறையாக எந்த நேரத்தில்? எந்த வடிவத்தில்? எங்கு வைக்க வேண்டும்? என்பதையும் தெரிந்து கொண்டு பராமரித்து வருவது மேலும் அதிர்ஷ்டத்தை உண்டாக்கும். மணிபிளான்ட் செடி வளர்ப்பதற்கு கூட வாஸ்து உண்டு. வாஸ்து முறைப்படி மணிபிளான்ட் செடியை வளர விட்டால் வீட்டில் தேவையற்ற பிரச்சனைகளும் நீங்குவதற்கு வாய்ப்புகள் உண்டு. அதைப் பற்றிய ஒரு அலசல் இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

அனைவரது வீட்டிலும் மணி பிளாண்ட் செடியை தாராளமாக வளர்க்கலாம். வீட்டின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் மணி பிளான்ட் செடியை நீங்கள் வளர்க்கும் பொழுது அதன் தினசரி பராமரிப்பு மட்டும் கவனித்துக் கொண்டால் போதுமானது. மணிபிளான்ட் செடி வைக்கும் திசையும், அதை வைக்க வேண்டிய பொருளும் மிகவும் முக்கியம். அவ்வகையில் நீங்கள் மணிபிளான்ட் செடியை எந்த பாத்திரத்தில் வைத்திருக்கிறீர்கள்? என்பதைப் பாருங்கள்!

- Advertisement -

மணி பிளாண்ட் செடியை கண்ணாடி குடுவையில் மட்டுமே அடைக்க வேண்டும். அந்த கண்ணாடி குடுவையில் இருக்கும் மண் வளமானதாக இருக்கிறதா? என்பதையும் பார்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் கண்ணாடி குடுவையின் நிறமானது கண்டிப்பாக சிவப்பு நிறத்தில் இருக்கக் கூடாது. மேலும் நீங்கள் மணி பிளான்ட் வைத்திருக்கும் இடத்தை சுற்றிலும் சிவப்பு நிறம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சிகப்பு நிறம் அருகில் மணி பிளான்ட் இருந்தால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துமாம். விதவிதமான வடிவங்களில் இருக்கும் மணிபிளான்ட்டில் இதய வடிவிலான மணிபிளான்ட் வளர்த்து வந்தால் கூடுதல் பலன்களும் கிடைக்கப் பெறும்.

கண்ணாடி குடுவையின் நிறம் வெண்மை, பச்சை அல்லது நீல நிறத்தில் இருப்பது மேலும் மேலும் அதிர்ஷ்டத்தை பெருக செய்யுமாம். பச்சை நிற குடுவையில் மணி பிளான்ட் வைத்து சிறிய அளவிலேயே அடிக்கடி கத்தரித்து உங்களுடைய சமையலறையில் அழகாக வைத்துக் கொண்டால் பணவரவு சிறப்பாக இருக்குமாம். குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்து இருக்குமாம். மணிபிளான்ட் வளர்ப்பவர்கள் மிகச்சிறிய கண்ணாடி குடுவையை பயன்படுத்தக் கூடாது. ஓரளவிற்கு வேர் பகுதிக்குள் காற்று போகுமாறு தளர்வாக மண்ணை வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

மணி பிளாண்ட்டை பராமரிக்கும் பொழுது அடிக்கடி பழைய தளிர்களை கத்தரித்துக் கொண்டு வர வேண்டும். நன்றாக படர விட்டு காடு போல் வளர்க்கக் கூடாது. சிக்குன்னு சிக்கனமாக சிறப்பாக இருக்கும்படி நீல நிறத்தில் இருக்கும் மணிபிளான்ட் வளர்த்தால் வீட்டில் செல்வ வளத்திற்கு குறைவிருக்காது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. பச்சை வண்ணம் பசுமையான எண்ணங்களை கொடுப்பதால் பச்சை நிற பாட்டிலில் மணி பிளான்ட் வளர்த்து வந்தால் நேர்மறை அதிர்வலைகள் பெருகும். மணி பிளாண்ட் செடியை ஒரு பொழுதும் வாட விடக்கூடாது. வாடிய மணிபிளான்ட் செடியை அகற்றி விடுவது நல்லது. இலைகள் மஞ்சள் நிறத்தில் மாறினால் கட்டாயம் அதனை கத்தரித்து, சூரிய ஒளியிலிருந்து பராமரித்து வளர்க்க வேண்டும்.

வட கிழக்கு திசையில் வாசல் வைத்திருப்பவர்கள் வடகிழக்கு திசையிலேயே மணி பிளான்ட் செடியை வளர்த்து வரலாம். அவர்களுக்கு நல்ல ஒரு அதிர்ஷ்டத்தை, அதிர்வலைகளை அந்த வீட்டிற்கு மணிபிளான்ட் செடி கொடுக்கும். மற்ற திசைகளில் வாசல் வைத்திருப்பவர்கள் தென்கிழக்கு திசையில் மணி பிளான்ட் செடியை வளர்ப்பது தான் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். தென்கிழக்கு திசையில் விநாயகப் பெருமானுடைய அருளும், சுக்கிர பகவான் உடைய அருளும் ஒருசேர கிடைப்பதால் வீட்டில் செல்வ வளத்திற்கும், வருமானத்திற்கும் பஞ்சமே இருக்காது என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டின் இந்த பகுதியில் மட்டும் இதெல்லாம் இருந்தால் இது தான் நடக்கும்! இதை யாராலும் தடுக்க முடியாது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான வாஸ்து சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -