சனிப்பெயர்ச்சிக்கு பிறகு 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன? இதை செய்வதால் நடக்கும் அற்புதங்களை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.

sani-astro
- Advertisement -

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 2020ஆம் ஆண்டின் சனிப்பெயர்ச்சி இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜனவரி மாதத்திலேயே முடிவடைந்து விட்டது. ஆனால் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆனது இன்றுடன் முடிவடைய இருக்கிறது. எந்த பஞ்சாங்கமாக இருந்தாலும், சனி பெயர்ச்சியின் பொழுது வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படுவது வழக்கம். 12 ராசிக்காரர்களுக்கும் அவரவர்களின் சுய ஜாதகத்தின் பலனுக்கு ஏற்ப சனியின் தாக்கம் தொடங்க இருக்கும் அல்லது முடிவடைய இருக்கும். இந்த வகையில் 12 ராசிக்காரர்களும் என்னென்ன பரிகாரங்கள் செய்தால் நல்லது நடக்கும்? என்பதை தெரிந்து கொள்ள தான் இந்த பதிவு. வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

மேஷம்
முதலாவதாக மேஷ ராசிக்காரர்கள் சனிப் பெயர்ச்சி பரிகாரமாக உங்கள் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று உங்களால் முடிந்த அளவிற்கு சுத்தமான நல்லெண்ணெய் வாங்கி கொடுங்கள். நீங்கள் தானமாக கொடுக்கப்படும் நல்லெண்ணெய் மூலம் கோவிலில் விளக்கு ஏற்றும் பொழுது உங்களுக்கு ஏற்பட இருக்கும் பாதிப்புகளும் குறையுமாம்.

- Advertisement -

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி பரிகாரம் செய்வதற்கு உங்களால் முடிந்த அளவிற்கு அருகில் இருக்கும் ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு செல்லலாம். பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்களுக்கு பிள்ளையாக இருந்து நீங்கள் ஒரு சிறு பொருளை வாங்கி கொடுத்தாலும் உங்களுடைய வாழ்க்கையில் நல்ல விதமான மாற்றங்கள் உருவாகும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சனி பகவானுடைய தாக்கத்திலிருந்து மீள்வதற்கு வீட்டில் அல்லது கோவில்களில் ஒரு வேளை உணவிற்குக் கூட கஷ்டப்படும் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்யலாம். அப்படி செய்யும் அன்னதானத்தில், கருப்பு எள்ளு சேர்த்து செய்யுங்கள். இவ்வாறு பரிகாரம் செய்ய நல்ல விதமான மாற்றங்கள் நிகழும்.

- Advertisement -

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சனியின் அருள் கிடைக்க அவருடைய வாகனமாக விளங்கும் எருமை மாட்டிற்கு தீவனம் கொடுக்க வேண்டும். எள்ளும், புண்ணாக்கும் தானம் செய்யுங்கள். சனி தாக்கம் குறைந்து நல்ல விஷயத்தில் சாதகமான பலன்கள் எல்லாம் கிடைக்கப்பெறும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி பகவானுடைய தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள இந்த பரிகாரத்தை செய்யலாம். காசு இல்லாமல் அடிப்படை ஊட்டச்சத்து கூட கிடைக்காமல் தவிக்கும் ஏழை பிஞ்சுக் குழந்தைகளுக்கு ஊட்டசத்து மிக்க மாவு போன்ற ஆரோக்கிய பொருட்களை வாங்கி கொடுக்கலாம்.

- Advertisement -

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சனிப் பெயர்ச்சி பரிகாரமாக, உங்களால் முடிந்த அளவிற்கு குளிரினால் அவதிப்படும் தெருவோர மக்களுக்கு போர்வை வாங்கிக் கொடுத்தால் சிறந்த பரிகாரமாக இருக்கும். போர்வை கூட வாங்கி கொடுக்க முடியாத அளவிற்கு நாம் ஒன்றும் கஷ்டப்பட போவதில்லை. இப்படி செய்து பாருங்கள் உங்களுடைய வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை நீங்களே காணலாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி நிலவுவதால் உடல் ரீதியான பிரச்சனைகளை சந்திப்பீர்கள். உடல் எப்பொழுதும் சோர்வுடன் காணப்படும். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிட முடியாத நிலைக்கு தள்ளப்படுவீர்கள். ஆகவே நீங்கள் உடல் ஊனமுற்றவர்களுக்கு வேண்டிய உதவிகளை உங்களால் முடிந்த அளவிற்கு செய்தாலே போதும். நிச்சயம் நல்ல மாற்றங்கள் நிகழும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியில் இருந்து விடுபட்டு சனி பகவானுடைய தாக்கம் குறைந்தாலும், இறுதியாக அவருக்கு ஒரு அர்ச்சனை செய்து விடுங்கள். இதுவரை பட்ட கஷ்டத்திற்கு பரிகாரம் தேடிக் கொள்ளுங்கள். சனிப்ரீத்தி செய்ய ரத்த தானம் செய்யுங்கள். உங்களால் ஒரு உயிர் காப்பாற்றப்படும் பொழுது உங்களுடைய வாழ்க்கையில் நிச்சயம் நல்ல மாற்றங்கள் நிகழ்வதை நீங்களே காணலாம்.

தனுசு
தனுசு ராசிகாரர்களுக்கு ஏழரை சனியின் இறுதி பகுதியாக பாத சனி வருகிறது. சனி பகவானுடைய கெடுதல்களிலிருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள, ஈசனை சரணடைய வேண்டும். ஈசனை வணங்கும் அடியார்களுக்கு அல்லது சாதுக்களுக்கு உங்களால் முடிந்த உதவி செய்தால் போதும். ஏழரை சனியின் தாக்கம் குறைந்த, பாதிப்புகளும் நீங்கி நிம்மதியை தேடிக் கொள்ளலாம்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு தனுசு ராசியிலிருந்து உங்கள் ராசிக்கு வந்து ஜம்மென அமர்ந்திருக்கும் சனி பகவானை திருப்திபடுத்த மகாபாரதத்தின் துணைக் கதையாக இருக்கும் நள-தமயந்தி பற்றிய கதை புத்தகத்தை வாங்கி மற்றவர்களுக்கு தானம் செய்யலாம். சனி பகவானால் படாதபாடுபட்டு மீண்டும் தமயந்தியை இணைந்த அற்புதமான கதை ஆகும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு விரய சனி தொடங்குவதால் திருநங்கைகளுக்கு பொருளுதவி அல்லது பண உதவி செய்யலாம். முடிந்தால் அவர்களுக்கு தேவையான வெள்ளி பொருட்கள் வாங்கிக் கொடுத்தால் மிகவும் நல்ல பலன்களை உங்களுக்கு கொடுக்கும். சனியினுடைய பாதிப்புகள் ஒரு சிலருக்கு தீராத வேதனையை கொடுக்கும். அவர்கள் எல்லாம் இது போல் பரிகாரம் செய்தால் நிச்சயமாக அதிலிருந்து விமோசனம் பெறலாம்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு பகவானுடைய தாக்குதல் பாதிக்காமல் இருக்க மேலும் நல்ல விஷயங்கள் எல்லாம் உங்களுடைய வாழ்க்கையில் நடைபெறுவதற்கு உண்மையிலேயே மன அளவில் பாதிக்கப்பட்ட மனநோயாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்து வரலாம்.

இதையும் படிக்கலாமே
நாளை(26/12/2020) அன்று நடைபெற இருக்கும் சனிப்பெயர்ச்சி எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தரும் தெரியுமா? ஏழரை சனி எப்படி கண்டுபிடிப்பது?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -