- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 25 நவம்பர் 2026

இன்றைய ராசிபலன் – 25 நவம்பர் 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இளைஞர்கள் மாணவர்கள் இன்று கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். காரிய தடை விலகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். சந்தோஷம் அதிகரிக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம், பதட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. புது முயற்சிகளை நாளை தள்ளி வையுங்கள். இறை வழிபாடு செய்யுங்கள். அன்றாட வேளையில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தினால் போதும். மனதிற்கு பிடிக்காத மனிதர்களிடமிருந்து விலகியே இருங்கள்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் இன்று பக்குவமாக நடந்து கொள்வீர்கள். பிரச்சனைகளை சுலபமாக தீர்த்து வைப்பீர்கள். நல்ல அனுபவம் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். கோர்ட்டு கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். எதிர்பாராத நன்மைகள் நடக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். எதிர்பாராத அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீச காத்துக்கொண்டிருக்கிறது. காலை நேரம் கொஞ்சம் சோம்பேறித்தனத்தோடு துவங்கினாலும், போகப்போக இன்று நீங்கள் எதிர்பாராத நன்மைகளை அடைவீர்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் மன கவலையாக தான் இருப்பீர்கள். உங்களுடைய வேலைகள் எல்லாம் சுறுசுறுப்பாக ஓடாது. மந்தமான சூழ்நிலை இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன பிரச்சனைகளை எதிர்கொள்ள கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமையும். மனதை தளர விடக்கூடாது. இறை நம்பிக்கை உங்களை நல்வழிப்படுத்தும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கம் நிறைந்த நாளாக தான் இருக்கும். எந்த விஷயத்திலும் பெருசாக பாதிப்புகள் வராது. உங்களுடைய சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வைத்து விடுங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள். எந்த இடத்திலும் நேர்மைக்கு புறம்பாக நடக்காதீர்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். நிம்மதி கிடைக்கும். எதிரி தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்திருந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும்.தேவைகள் பூர்த்தியாகும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று கொஞ்சம் சின்ன சின்ன சிரமங்கள் வரும். உயர் அதிகாரிகளோடு வாக்குவாதம் வர வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம். உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். இறை வழிபாடு செய்யுங்கள். நல்லது நடக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று உஷாராக இருக்க வேண்டும். உங்களுடைய உடைமைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். நீண்ட தூர பயணங்களை தவிர்த்து விடுங்கள். அன்றாட வேலையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உங்களுடைய வேலையை நீங்களே செய்ய வேண்டும். உங்களுடைய கடமைகளை அடுத்தவர்கள் என் நம்பி ஒப்படைக்க கூடாது. குடும்ப விஷயங்களை பொது இடங்களில் பேச வேண்டாம்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று வீன் நிறைய செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை.‌புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். யாருக்கும் அனாவசியமாக கடன் கொடுக்க வேண்டாம். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ளுங்கள். உயர் அதிகாரிகளோடு வாக்குவாதம் செய்யாதீர்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். வேலையில் நீங்கள் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு நடக்க வேண்டும். உங்களுடைய நேரத்தை வீணடிக்காதீர்கள். இறை வழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் பொறுப்புகள் வந்து தலை மேல் விழும். வேலை செய்வதற்கு நேரமே இருக்காது. 24 மணி நேரம் போதாது, பம்பரமாக சுற்றி திரிந்து உங்களுடைய வேலையை செய்வீர்கள். வியாபாரத்தை பொருத்தவரை சுமூகமான போக்கு இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.

சற்று முன்