உங்கள் ராசிக்கு இந்த திதியில் நல்ல காரியங்களை தவிர்த்தால் வாழ்க்கையில் எங்கோ சென்று விடுவீர்கள்! உங்கள் ராசிக்கு உரிய சூன்ய திதி எது?

murugan-astro

நாட்காட்டியில் திதி என்று இருக்கும் ஒரு விஷயம் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். வளர்பிறை திதி, தேய்பிறை திதி என்று இரண்டு வகையாக திதிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் எந்த வகையான திதியாக இருந்தாலும், உங்களுடைய ராசிக்கு நற்பலன்களை கொடுக்கக்கூடிய திதிகளும், கெடு வினைகளை கொடுக்கக்கூடிய திதிகளும் உண்டு. அவற்றைத் தெரிந்து கொண்டு அன்றைய நாளில் நீங்கள் நல்ல காரியங்களை தொடங்குவது அதிர்ஷ்டத்தை தரும். உங்கள் ராசிக்குரிய சூன்ய திதி எது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

astrology

சில திதிகள் சில ராசிகளுக்கு கெடு பலன்களை கொடுக்கும் அன்றைய நாளில் அவர்கள் தொடங்கும் செயல்கள் தோல்வியை தழுவுவதாக அமைந்துவிடும். ஆக இவர்கள் நாள், நட்சத்திரம் போன்று திதியையும் பார்த்து நல்ல காரியங்களை செய்யும் பொழுது எதிர்பாராத அதிசயங்கள் நிச்சயமாக நிகழும் என்பது ஜோதிட வாக்கு.

மேஷ ராசிக்காரர்கள் சஷ்டி திதி வரும் நாட்களில் சற்று எச்சரிக்கையுடன் இருந்து கொள்வது நல்லது. மேஷ லக்னக்காரர்களுக்கு இதே விதி தான். ஒருவருடைய ராசி அல்லது லக்னம் மேஷம் ஆக இருந்தால் அவர்கள் சஷ்டி திதி தவிர்க்க வேண்டும். ரிஷப ராசிக்காரர்கள் சதுர்த்தி மற்றும் திரயோதசி ஆகிய திதிகளில் சுபகாரியங்களையும், நல்ல விஷயங்களையும் செய்வதை தவிர்க்க வேண்டும். ரிஷப லக்னக்காரர்கள் இந்நாளில் வெற்றியை நோக்கிய பயணங்களை தொடங்காமல் இருப்பது நல்லது.

Astrology

மிதுன ராசிக்காரர்கள் பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி ஆகிய மூன்று திதிகள் வரும் நாட்களை தவிர்ப்பது உத்தமம். இந்தத் திதிகளை அல்லாமல் மற்ற திதிகளில் சுபகாரியங்களையும், நல்ல விஷயங்களையும் தொடங்குவது அதிர்ஷ்டத்தை கொடுக்கும். கடக ராசியில் பிறந்தவர்கள் சப்தமி திதியில் நல்ல காரியங்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் சப்தமி வரும் நாட்களில் சுப காரியங்களை செய்வது பிற்காலத்தில் துன்பங்களை கொடுப்பதாக அமைந்துவிடும். கடக லக்னக்காரர்கள் சப்தமி திதியில் புதிய தொழில்களை துவங்குவதை தவிர்ப்பது உத்தமம்.

- Advertisement -

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் திருதியை, சஷ்டி, திரயோதசி, நவமி ஆகிய நான்கு திதிகளை முற்றிலுமாக நல்ல விஷயங்கள் செய்வதற்கு தவிர்க்க வேண்டும். இவைகள் அல்லாமல் மற்ற திதிகளில் அவர்கள் தொழில் அல்லது நல்ல விஷயங்களை துவங்கும் பொழுது அதில் அமோகமான வெற்றியைக் காண்பார்கள். சிம்ம லக்னகாரர்கள் வேலை தேடி செல்லும் பொழுது இந்த நான்கு திதிகள் அல்லாத நாட்களில் செல்வது அதிர்ஷ்டத்தை தரும்.

Nakshatra

கன்னி ராசிக்காரர்கள் பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி ஆகிய 3 திதிகளில் நல்ல விஷயங்களை துவங்குவதை தவிர்ப்பது உத்தமம். துலாம் ராசிக்காரர்கள் பிரதமை, துவாதசி ஆகிய திதிகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. இந்த திதிகளில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கூட தள்ளிப் போடுவது நல்லது. விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் தசமி திதியில் முக்கியமான விஷயங்களையும் ஒப்பந்தங்களையும் செய்வதை தவிர்க்க வேண்டும் சுபகாரிய முயற்சிகள் அந்தத் திதியில் செய்வதை முற்றிலுமாக தவிர்த்துவிட வேண்டும். விருச்சிக லக்னகாரர்கள் தசமி திதியை தவிர்த்த மற்ற திதிகளில் காரியங்களை துவங்கினால் வெற்றி கிடைக்கும்.

Astrology

தனுசு ராசியில் பிறந்தவர்கள் துவிதியை, சப்தமி, ஏகாதசி, சதுர்த்தசி ஆகிய நான்கு திதிகளை தவிர்ப்பது உத்தமம். மகர ராசிகாரர்கள் பிரதமை, திருதியை, துவாதசி ஆகிய மூன்று திதிகளில் சுபகாரியங்களையும், நல்ல விஷயங்களையும் துவங்குவதை தவிர்ப்பது உத்தமம். கும்பத்தில் பிறந்தவர்கள் சதுர்த்தி திதியை தவிர்ப்பது மிகவும் நல்லது. இறுதியாக மீன ராசிக்காரர்கள் துவிதியை, ஏகாதசி, சதுர்த்தி ஆகிய மூன்று திதிகளை புறக்கணித்து விடுவது நல்லது.