- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். வாரா கடன் வசூல் ஆகும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கு உண்டான வழி பிறக்கும். உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத பொருட்களை அதிக அளவில் பணம் கொடுத்து வாங்க வேண்டாம். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனம் செலுத்த வேண்டும். முன்பின் தெரியாத நபருக்கு கடன் கொடுக்காதீங்க. தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டு பெயர் புகழ் அந்தஸ்து கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுடைய கை ஓங்கி நிற்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த வாக்குவாதம் சரியாகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எதிர்பார்த்ததை விட நல்ல லாபம் கிடைக்கும்.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். உங்களுடைய முயற்சிகள் வெற்றி அடையும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்லது நடக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். உடன் வேலை செய்பவர்களுக்கு துணையாக நிற்பீர்கள். உதவி செய்யும் மனப்பக்குவம் வெளிப்படும் நாள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன அமைதி இருக்கும். தேவையற்ற மன சஞ்சலங்கள் விளக்கும். இறைவழிபாடு செய்வது மனதிற்கு நிம்மதியை தரும். நீண்ட தூர பயணங்களால் நல்லது நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் அவசரம் வேண்டாம். அனுபவ சாலைகளின் பேச்சைக் கேட்டு நடப்பது நல்லது.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். தேவையான உதவிகள், தேவையான நேரத்தில் உடனடியாக கிடைக்கும். நண்பர்கள் உறவுகளுடைய சப்போர்ட்டோடு இந்த நாள் இனிய நாளாக நிறைவடையும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம் நல்லதே நடக்கும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று கவனமாக செயல்பட வேண்டும். புது மனிதர்களை முழுசாக நம்ப வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்களுடைய பொறுப்புகளை அடுத்தவர்கள் கையில் ஒப்படைக்காதீர்கள். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்யக்கூடாது. புதிய முதலீட்டின் போது கூடுதல் கவனம் இருக்க வேண்டும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். நலமான நாளாக இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். வீண் விரைய செலவுகள் குறையும். நீண்ட தூர பயணங்களை கூடுமானவரை குறைத்துக் கொள்ளுங்கள். வண்டி வாகனம் ஓட்டும் போது கூடுதல் கவனம் இருக்கட்டும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட இன்று நிச்சயம் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். வேலையில் நிதானதோடு நடந்து கொள்ள வேண்டும். உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். உங்களுடைய சோம்பேறித்தனத்திலிருந்து விடுபடுவீர்கள். கடமைகளை சரியாக செய்வீர்கள். சொன்ன வாக்கை காப்பாற்றி தருவீர்கள். வருமானம் பெருகுவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். காரிய தடை விலகும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் டென்ஷன் குறையும். பிள்ளைகளால் சந்தோஷமிரட்டிப்பாகும். சுப செலவுகள் ஏற்படும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் உங்களுடைய பிரமோஷன், நல்லபடியாக அடுத்த கட்டத்தை நோக்கி நகரும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று வேகத்தை விட விவேகம் தான் அதிகமாக இருக்கும். திறமைசாலிகளாக செயல்படுவீர்கள். உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்வீர்கள். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் உண்டாகும். சுப செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

சற்று முன்