ஜோதிடம் : 12 ராசிகள் ஒவ்வொன்றிலும் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்

Suriyan

ஜோதிடத்தில் அனைத்து கிரகங்களுக்கும் முதன்மையான கிரகமாக சூரியன் கருதப்படுகிறது. ஒரு நபரின் தந்தை, பூர்வீக சொத்து, கம்பீரம், ஆரோக்கியமான உடல் ஆகிய அனைத்திற்கும் சூரியன் காரகனாகிறார். ஜாதகத்தில் இருக்கும் 12 ராசிகளில் ஒவ்வொரு ராசியிலும் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்:

Mesham Rasi

சூரியனின் உச்ச ராசியாக மேஷம் ராசி இருக்கிறது. ஒரு நபரின் ஜாதகத்தில் மேஷத்தில் சூரியன் இருந்தால் அந்த ஜாதகர் பலம் வாய்ந்த உடலமைப்பும், மிகுந்த தைரிய குணமும் கொண்டிருப்பார். தனது கடின உழைப்பால் வாழ்வில் ஒரு உன்னதமான நிலையினை அடைவர்.

ரிஷபம்:

Rishabam Rasi

- Advertisement -

சுக்கிர பகவானின்ராசி ரிஷப ராசியாகும். ஒரு நபரின் ஜாதகத்தில் ரிஷப ராசியில் சூரியன் இருக்க பெற்றால் அந்த ஜாதகருக்கு கலைகளில் ஆர்வம் இருக்கும் குறிப்பாக இசையில் மிகுந்த ஈடுபாடு இருக்கும். மேலும் கொடுக்கல், வாங்கல் வகையிலான தொழில்களில் நல்ல லாபத்தை பெறுவார்.

மிதுனம்:

midhunam

சூரியனுக்கு ஓரளவு நட்பு தன்மை கொண்ட கிரகமான புதனின் ராசியாக மிதுன ராசி இருக்கிறது. இந்த மிதுன ராசியில் சூரியன் இருக்க பெற்றால் அந்த ஜாதகர் சிறந்த அறிவாற்றல் கொண்டவராக இருப்பார். பல விடயங்களை கற்று தேர்ந்து பண்டிதராக இருப்பார்.

கடகம்:

Kadagam Rasi

சூரிய பகவானுக்கு நட்பான கிரகம் சந்திரன். சந்திரனின் சொந்த ராசியாக கடக ராசி இருக்கிறது. இந்த கடகத்தில் ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் இருந்தால் அந்த நபர் சிறந்த தோற்ற பொலிவு கொண்டவராக இருப்பார். மனக்கவலைகள் இன்றி இருப்பார். வயது ஏற ஏற செல்வம் பெருகி கொண்டே செல்லும்.

சிம்மம்:

simmam

சூரியனின் சொந்த ராசி சிம்ம ராசி ஆகும். ஜாதகத்தில் சிம்மத்திலேயே சூரியன் இருக்க பிறந்தவர்கள் வீரம் மிக்கவர்களாக இருப்பார்கள். எதிரிகளை அடக்கி ஒடுக்கும் பராக்கிரமம் கொண்டவர்களாக இருப்பார்கள். சமுதாயத்தில் அனைவராலும் மதிக்கபடுவார்கள். அரசாங்கத்தில் உயர்ந்த பதவிகளை வகிப்பார்கள்.

கன்னி:

Kanni Rasi

அறிவாற்றலுக்கு காரகனான புதன் பகவானின் ராசியாக கன்னி ராசி இருக்கிறது. ஜாதகத்தில் இந்த கன்னி ராசியில் சூரியன் இருக்க பிறந்தவர்கள் சிறந்த எழுத்தாற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள். கவிதை இயற்றுதல், ஓவியம் வரைதல் போன்றவற்றில் நிபுணர்களாக இருப்பார்கள். பலம் வாய்ந்த உடல், மனம் பெற்றிருப்பார்கள்.

துலாம்:

Thulam Rasi

போகங்களுக்கு அதிபதியான சுக்கிரன் பகவானின் ராசியாக துலாம் ராசி இருக்கிறது. பொதுவாக சுக்கிரன் கிரகம்
என்பது சூரியனுக்கு பகை கிரகம் ஆகும். இந்த ராசியில் ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் இருக்க பெற்றால் அந்த ஜாதகருக்கு சிறப்பான பலன்கள் ஏதும் ஏற்படாது. எனவே இந்த ராசியில் சூரியன் இல்லாமல் இருப்பதே நல்லது.
விருச்சிகம்:

virichigam

எளிதில் கோபம் கொள்ளும் ராசியினராக விருச்சிக ராசியில் பிறக்கும் நபர்கள் இருக்கிறார்கள். எதையும் தைரியமாக எடுத்து கூறும் குணம் கொண்டவர்கள்.சிறந்த கல்விமானாக இருப்பார்கள். கணித திறன் இருக்கும். ஆனாலும் இந்த ஜாதகர் சராசரியான செல்வ நிலை பெற்றவர்களாக இருப்பார்கள்.

தனுசு:

Dhanusu Rasi

குரு பகவானின் ஆதிக்கத்திற்குரிய ராசியாக தனுசு ராசி இருக்கிறது. ஒரு நபரின் ஜாதகத்தில் தனுசு ராசியில் சூரியன் இருக்க பெற்றால் அந்த நபர் இறை பக்தி மிகுந்த நபராக இருப்பார். அரசாங்கத்தில் பலரை நிர்வகிக்க கூடிய பதவிகளை பெறுவார். கலைகளில் சிறந்த ஞானம் கொண்டிருப்பார்.

மகரம்:

Magaram rasi

சனி பகவானின் ராசியாகவும், செவ்வாய் பகவான் உச்சமடையும் ராசியாகவும் வரும் மகர ராசியில் சூரியன் இருக்க பிறந்த ஜாதகர்கள் சாதாரண நிலையில் வாழும் சூழலே ஏற்படும். மிக சிறந்த நன்மைகளை இந்த ராசியில் சூரியன் இருப்பதால் பெற முடியாது. பல வகையான தொழில்களை செய்ய கூடியவராக ஜாதகர் இருப்பார்.

கும்பம்:

Kumbam Rasi

கும்ப ராசியும் சனி பகவானின் ஆதிக்கத்திற்குரிய ராசியாகும். நவகிரகங்களில் சனி கிரகம் சூரியனுக்கு பகை கிரகம் ஆவதால் இந்த ராசியில் சூரியன் இருப்பதால் அதிர்ஷ்டங்களோ, யோகங்களோ ஏதும் ஏற்படாது. ஆனால் கும்ப ராசியில் இருக்கும் சூரியனால் ஜாதகருக்கு ஆரோக்கியமான உடல் நலம் எப்போதும் இருக்கும்.

மீனம்:

meenam

ஞானத்தை அதிகம் விரும்பும் ராசியினர் மீன ராசியினர் ஆவார்கள். ஒரு நபரின் ஜாதகத்தில் இந்த மீன ராசியில் சூரியன் இருப்பதால் அந்த ஜாதகருக்கு மக்கள் செல்வாக்கு உண்டாகும். நற்குணங்கள் நிரம்ப பெற்றவர்களாக இருப்பார்கள். சிறந்த அறிவாற்றலும், செல்வ செழிப்பான வாழ்க்கையையும் பெறுவார்கள்.

இதையும் படிக்கலாமே:
வெண்சாமர யோகம்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have 12 Rasi Sooriyan palan in Tamil. It is also called Jothidam suriyan palangal in Tamil or Rasikal palangal in Tamil or Suriyan jathagam in Tamil or Jathagathil suriyan in Tamil.