அரச வாழ்வை தரும் வெண்சாமரை யோகம்

venchamaram-yogam

எந்த ஒன்றுக்கும் நமது கடின முயற்சிகள் இல்லாமல், நமக்கு ஏற்படும் பல நன்மையான விடயங்களை தான் ஜோதிடத்தில் யோகங்கள் என்று கூறுகின்றனர். யோகங்களில் பெரும்பாலும் நன்மையான பலன்களை கொடுப்பதாகவே இருக்கின்றன. ஒரு சில யோகங்கள் சில அதிர்ஷ்டம் மிகுந்த மனிதர்களுக்கு மட்டுமே கிடைக்கூடிய புகழ், பதவி, செல்வம் போன்றவற்றை தருபவையாக இருக்கின்றன. அப்படிப்பட்ட யோகங்களில் ஒன்று தான் “வெண்சாமரை யோகம்”. இந்த யோகத்தை பற்றி விரிவாக இங்கு தெரிந்து கொள்ளலாம்.

astro wheel 1

ஒரு நபரின் ஜாதகத்தில் எந்த ஒரு ராசியிலும் சூரியன் இருக்க அந்த ராசிக்கு முன்பும், பின்பும் உள்ள ராசி வீடுகளில் குரு, சுக்கிரன், புதன் போன்ற சுப கிரகங்கள் இருக்கும் பட்சத்தில் அந்த ஜாதகருக்கு வெண்சாமரை யோகம் ஏற்படுகிறது. வெண்சாமரம் என்பது அரசர்களுக்கு பணிப்பெண்களால் காற்று வர வீசப்படும் ஒரு விசிறி போன்ற பொருளாகும். அரசர்களை போன்ற வாழ்வை தரும் யோகம் என்பதால் இதற்கு வெண்சாமரை யோகம் என்ற பெயர் உண்டானது.

வெண்சாமரை யோகம் அபூர்வமான யோகங்களில் ஒன்று. இந்த யோகத்தில் பிறப்பவர்கள் பெரும்பாலும் அதிகாரமிக்க அரச பரம்பரையை சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். தற்காலங்களில் பெரும்பாலான நாடுகளில் அரச பரம்பரையின் ஆட்சி இல்லையென்றாலும் இந்த யோகத்தில் பிறக்கும் எந்த ஒரு நபரும் ஒரு மாகாணத்தை ஆளும் முதலமைச்சர், ஆளுநர் போன்ற பதவிகளையோ, நாட்டை ஆளும் பிரதமர், அதிபர் பதவிகளையோ பெறும் யோகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

maharaja

இந்த யோகம் கொண்டவர்களுக்கு எல்லா தேவைகளும் எல்லா காலங்களிலும் பூர்த்தி செய்யப்படும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் ஆவார்கள். பண விடயங்களில் இவர்களுக்கு எப்போதும் குறைவிருக்காது. எந்த ஒரு துறையில் ஈடுபட்டாலும் தங்களின் கடின உழைப்பால் கூடிய விரைவிலேயே தலைமை பதவிகளை அடைவார்கள். சிறந்த நிர்வாக திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் வழிநடத்தும் எந்த ஒரு விடயமும் சிறப்பான வெற்றிகளை பெறும். இவர்களின் புகழ் படி ஆதாயம் பெற முயலும் கூட்டம் இவர்களுக்கு அருகில் எப்போதும் இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
செல்வச் செழிப்பான வாழ்க்கை தரும் வல்லகி யோகம்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Venchamaram yoga in Tamil. It is also called Jathaga yogangal in Tamil or Jodhida yogam in Tamil or Jodhida yogangal in Tamil.