எந்த ராசிக்காரர்கள் எந்த திசை வீட்டில் குடியிருந்தால் வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு செல்லலாம் தெரியுமா?

astrology
- Advertisement -

திசைகள் என்றால் அவை “கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு” என மொத்தம் 4 தான் என பொதுவாக கருத்தில் கொண்டாலும், கட்டிடங்களை கட்ட வகுக்கப்பட்ட வாஸ்து சாஸ்திரத்தில் “வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு” என்கிற திசைகளும் சேர்ந்து மொத்தம், 8 திசைகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன. இங்கு நாம் 12 ராசியினருக்கும், அவர்கள் குடியிருக்கும் வீடு எந்த திசையை நோக்கி இருந்தால் மிகுந்த அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்பதை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டம் தரக்கூடிய திசையாக கிழக்கு மற்றும் தெற்கு திசைகள் திகழ்கின்றன. எனவே மேஷ ராசியில் பிறந்தவர்கள் தாங்கள் வாடகை வீட்டில் குடியேறும் பட்சத்தில், கிழக்கு அல்லது தெற்கு நோக்கி வாயிற்கதவு இருக்கும் வீட்டில் வாடகைக்கு குடி இருப்பதால் பாதகமான பலன்கள் ஏதும் ஏற்படாமல், அதிர்ஷ்டம் பெருகும். சொந்த வீடு கட்டி குடியேறும் முயற்சியில் இருக்கும் மேஷ ராசிக்காரர்கள் தங்களின் வீட்டின் வாயிலை கிழக்கு அல்லது தெற்கு என ஏதேனும் ஒரு திசை நோக்கி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டம் தரக்கூடிய திசை கிழக்கு திசையாகும். ரிஷப ராசியில் பிறந்தவர்கள் தாங்கள் புதிதாக குடி செல்லும் வீடு வாடகை வீடாக இருந்தாலும், கிழக்கு திசையை பார்த்த தலைவாயில் கொண்ட வீட்டில் குடியேறுவது சிறப்பு. தங்களுக்கென சொந்தமாக வீடு கட்ட துவங்கும் ரிஷப ராசிக்காரர்கள் கிழக்கு திசையில் தங்கள் வீட்டின் தலைவாயில் இருக்குமாறு அமைத்து கட்ட வேண்டும். கிழக்கு திசை வாயில் அமைந்துள்ள வீடுகளில் ரிஷப ராசியினர் குடியிருப்பதால் அவர்களின் வாழ்வில் அனைத்தும் வெற்றி பெறும் யோகம் ஏற்படும்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டகரமான திசையாக மேற்கு திசையை திகழ்கிறது. மேற்குத் திசையில் தலைவாயில் இருக்கின்ற வாடகை வீட்டில் மிதுன ராசியினர் குடியேறி வசிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தீமையான பலன்கள் குறைந்து நன்மையான பலன்கள் அதிகம் ஏற்படும். தங்களுக்கென சொந்தமாக வீடு கட்டும் மிதுன ராசியினர் தங்கள் ராசிக்குரிய மேற்குத் திசையில் புதிய வீட்டின் தலை வாயில் இருக்குமாறு வைத்து கட்டுவது அவர்களின் வாழ்வில் யோகங்களை பெற்றுத்தரும் ஒரு வாஸ்து நிவர்த்தி பரிகாரமாக மாறுகிறது.

- Advertisement -

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் தரும் திசையாக கிழக்குத் திசை திகழ்கிறது. கிழக்குத் திசை என்பது சூரிய பகவானுக்குரிய திசையாகும். எனவே கடக ராசியில் பிறந்தவர்கள் கிழக்குத் திசையில் வீட்டின் தலைவாயில் அமைந்திருக்கும் வாடகை வீட்டில் குடியேறுவது சாலச் சிறந்ததாகும். மேலும் தங்களுக்கென சொந்த வீடு கட்டும் கடக ராசிக்காரர்கள், தங்கள் வீட்டின் தலைவாயில் கிழக்கு திசை நோக்கி இருக்குமாறு அமைத்து வீடு கட்டுவதால் சூரிய பகவானின் அருள் கிடைத்து, அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கும், அவர்களின் சந்ததியினருக்கும் சிறப்பான வாழ்க்கை அமையும்.

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் தரும் திசையாக வடக்கு திசை திகழ்வதாக வாஸ்து சாஸ்திரம். கூறுகிறது எனவே சிம்ம ராசியில் பிறந்தவர்கள் வடக்கு திசையில் தலைவாயில் இருக்கும் வாடகை வீட்டில் குடியேறி வாசிப்பது நல்லது. மேலும் தங்களுக்கு என சொந்த வீடு கட்டிக் கொள்ளும் சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் புதிய வீட்டின் தலை வாயில் பகுதி வடக்கு திசையை நோக்கி இருக்குமாறு அமைத்து கட்டுவதால் வடக்கு திசைக்கு அதிபதியான குபேரன் அருள் கிடைத்து, அவ்வீட்டில் வசிப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த வாழ்க்கை உண்டாகும்.

- Advertisement -

கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் தரும் திசைகள் வடக்கு மற்றும் கிழக்கு திசைகளாக திகழ்கின்றன. கன்னி ராசியில் பிறந்தவர்கள் தாங்கள் புதிதாக வேறு வாடகை வீட்டிற்கு குடியேறுவதாக இருந்தாலும், சொந்த வீடு கட்டி கொள்வதாக இருந்தாலும் அந்த வீட்டின் தலைவாயில் வடக்கு அல்லது கிழக்கு என ஏதேனும் ஒரு திசையில் இருக்குமாறு அமைத்துக் கொள்வதால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து பாக்கியங்களும் கிடைத்து, சிறப்பான வாழ்க்கையை வாழ்வார்கள்.

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் தரும் திசையாக கிழக்குத் திசை திகழ்கிறது. துலாம் ராசியில் பிறந்தவர்கள் தாங்கள் புதிதாக வாடகை வீட்டிற்கு குடிபெயர்வதாக இருந்தாலும் சரி, தங்களுக்கென சொந்த வீடு கட்டி கொள்வதாக இருந்தாலும் சரி, அந்த வீட்டின் தலைவாயில் கிழக்கு திசையில் இருக்குமாறு அமைத்துக் கொள்வதால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து பாக்கியங்களும் கிடைத்து சிறப்பான வாழ்க்கையை வாழ்வார்கள்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு கிழக்கு மற்றும் தெற்கு திசைகள் அதிர்ஷ்டம் தருபவை என வாஸ்து சாஸ்திரம் கூறுகின்றது. அந்த வகையில் விருச்சிக ராசியினர் வாடகை வீட்டில் குடியேறுவதாக இருந்தாலும் சரி, தங்களுக்கென சொந்த வீடு கட்டிக் கொள்வதாக இருந்தாலும் சரி, அந்த வீடுகளில் கிழக்கு அல்லது தெற்கு என ஏதேனும் ஒரு திசைகளில் வீட்டின் தலைவாயில் இருக்குமாறு அமைத்துக் கொள்வதால் அவர்களின் வாழ்க்கையில் பல சிறப்பான மாற்றங்கள் ஏற்படும்.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டம் தரும் திசையாக வடக்கு திசையை திகழ்கிறது. தனுசு ராசியில் பிறந்தவர்கள் தங்களுக்கென சொந்த வீடு கட்டிக் கொள்ளும் பொழுதோ அல்லது வேறு ஒரு புதிய வாடகை வீட்டில் குடியேறும் பட்சத்திலும், அந்த வீடுகளின் தலைவாயில் வடக்கு திசையில் இருக்குமாறு பார்த்து குடியேறுவதால் அவர்களுக்கு குரு பகவானின் அருள் கிடைத்து வாழ்வில் யோகங்கள் கூடும்.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டம் தரும் திசைகளாக கிழக்கு மற்றும் மேற்கு திசைகளில் திகழ்கின்றன. மகர ராசியில் பிறந்தவர்கள் தாங்கள் புதிதாக வேறு ஒரு வாடகைக்கு வீட்டிற்கு குடி செல்லும் பொழுதோ அல்லது தங்களுக்கென சொந்த வீடு கட்டிக் கொள்ளும் போதோ, அந்த வீடுகளின் தலைவாயில் கிழக்கு அல்லது மேற்கு என ஏதேனும் ஒரு திசையில் இருக்குமாறு பார்த்து குடியேறுவதால் சிறப்பான வாழ்க்கை அமையப்பெறுவார்கள்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டம் தரும் திசையாக கிழக்குத் திசை திகழ்கிறது. எனவே புதிதாக வேறு ஒரு வாடகை வீட்டில் குடியேறும் பொழுதும், தங்களுக்கென சொந்தமாக புதிய வீடு கட்டும் பொழுதும் அந்த வீடுகளின் தலைவாயில் கிழக்கு திசை நோக்கி அமைந்தவாறு பார்த்து குடியேறுதால் கும்ப ராசிக்காரர்களுக்கு யோகமான வாழ்க்கை உண்டாகும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டம் தரும் திசைகள் வடக்கு மற்றும் கிழக்கு திசைகள் என வாஸ்து சாஸ்திரம் கூறுகின்றது. எனவே மீன ராசியில் பிறந்தவர்கள் புதிதாக வேறு ஒரு வாடகை வீட்டுக்கு குடி செல்லும் பொழுதும் அல்லது தங்களுக்கென புதிதாக சொந்த வீடு கட்டிக் கொள்ளும் பொழுதும் அந்த வீடுகளின் தலைவாயில் கிழக்கு அல்லது வடக்கு என இந்த இரண்டு திசைகளில் ஏதேனும் ஒரு திசையை நோக்கி இருக்குமாறு அமைத்துக் அந்த வீட்டில் குடியேறுவதால் மிகச் சிறப்பான வாழ்க்கையை மீன ராசியினர் வாழ பெறுவார்கள்.

- Advertisement -