12 ராசி பெயர்கள் | 12 Zodiac Signs in Tamil

astrology
- Advertisement -

12 ராசி பெயர்கள் | 12 Zodiac signs in Tamil and English

ஜோதிடம் என்பது மிகப் பழங்காலம் தொட்டே மனிதர்கள், தங்களின் எதிர்காலம் குறித்து அறிந்து கொள்ள பயன்படுத்திய ஒரு அற்புத கலையாகும். மிகப்பழமையான கீழை நாகரிகங்களான சீன மற்றும் சிந்து சமவெளி நாகரிகங்கள் மற்றும் மேலை நாகரிகங்களான சுமேரிய, எகிப்து, கிரேக்கம் மற்றும் ரோமானிய நாகரிகங்களிலும், தென் அமெரிக்க கண்டத்தில் மாய, இன்கா நாகரிகங்களிலும், ஜோதிடக்கலை சிறப்பாக கையாளப்பட்டுள்ளது.

ஜோதிடக் கலையில் தற்போது கிழக்கத்திய ஜோதிட முறையும், மேற்கத்திய ஜோதிட முறையும் ஒரு சேர ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம் உண்டு என்றால் அது 12 ராசிகள் தான். அந்த 12 ராசிகள் என்னென்ன? அந்த 12 ராசிகள் குறித்த மேலும் பல விரிவான தகவல்களை இங்கே நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

12 Zodiac Signs in Tamil and English

12 ராசி படங்கள்
12 ராசிகளின் ஆங்கில பெயர்கள் - 12 Rasi names in English12 ராசிகளின் தமிழ் பெயர்கள் - 12 rasi in Tamil
Aries zodiac signARIESமேஷம்
Taurus zodiac signTAURUSரிஷபம்
midhunamGEMINIமிதுனம்
Kadagam RasiCANCERகடகம்
simmam
LEOசிம்மம்
Kanni Rasi
VIRGOகன்னி
Thulam Rasi
LIBRAதுலாம்
virichigam
SCORPIOவிருச்சிகம்
Dhanusu Rasi
SAGITTARIUSதனுசு
Magaram rasi
CAPRICORNமகரம்
Kumbam Rasi
AQUARIUSகும்பம்
meenamPISCESமீனம்

மேற்கத்திய ஜோதிட சாஸ்திரம் அடிப்படையில் 12 ராசிகள் | 12 Zodiac Signs in Tamil
மேற்கத்திய ஜோதிட சாஸ்திரத்தின் படி 12 ராசிகள் ஒவ்வொரு மாதத்தின் அடிப்படையிலும் வருவதாக கணக்கிடப்படுகின்றன. அந்த வகையில் கீழ்க்கண்ட ஆங்கில மாதங்களில் பிறந்தவர்கள் அந்தந்த மாதங்களுக்குரிய ராசியில் பிறந்தவராக, மேலைநாட்டு ஜோதிட சாஸ்திரம் வகைப்படுத்துகிறது

12 ராசிகளுக்குரிய ஆங்கில மாத பிறப்பு 12 ராசிகள்
மார்ச் மாதம் 21 முதல் ஏப்ரல் மாதம் 20 வரைமேஷம்
ஏப்ரல் மாதம் 20 முதல் மே மாதம் 21 வரைரிஷபம்
மே மாதம் 21 முதல் ஜூன் மாதம் 21 வரைமிதுனம்
ஜூன் மாதம் 21 முதல் ஜூலை மாதம் 23 வரை கடகம்
ஜூலை மாதம் 23 முதல் ஆகஸ்ட் மாதம் 23 வரைசிம்மம்
ஆகஸ்ட் மாதம் 23 முதல் செப்டம்பர் மாதம் 23 வரைகன்னி
செப்டம்பர் மாதம் 23 முதல் அக்டோபர் மாதம் 23 வரைதுலாம்
அக்டோபர் மாதம் 23 முதல் நவம்பர் மாதம் 22 வரைவிருச்சிகம்
நவம்பர் மாதம் 22 முதல் டிசம்பர் மாதம் 22 வரைதனுசு
டிசம்பர் மாதம் 22 முதல் ஜனவரி மாதம் 20 வரைமகரம்
ஜனவரி மாதம் 20 முதல் பிப்ரவரி மாதம் 19 வரைகும்பம்
பிப்ரவரி மாதம் 19 முதல் மார்ச் மாதம் 21 வரைமீனம்

இந்திய ஜோதிட சாஸ்திர அடிப்படையில் 12 ராசிகள் | 12 Rasigal in Tamil

இந்திய ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு நபர் பிறக்கும் பொழுது, அவரது ஜாதகத்தில் 12 ராசிகளுக்குரிய கட்டங்களில் “சந்திரன்” எங்கே இருக்கின்றதோ, அதுவே அவரின் “ஜென்ம ராசி” என கணக்கிடப்படுகின்றது.. இந்திய ஜோதிட சாஸ்திரம் 12 ராசிகளையும் அதன் பாலினம், ராசிகளின் செயல்பாடு போன்ற அடிப்படையில் வகைப்படுத்துகின்றது. அந்த வகையில் 12 ராசிகளும், அதன் பாலின தன்மை குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -
ஆண் ராசிகள்பெண் ராசிகள்
மேஷம்ரிஷபம்
மிதுனம்கடகம்
சிம்மம்கன்னி
துலாம்விருச்சிகம்
தனுசுமகரம்
கும்பம்மகரம்

12 ராசிகளையும் அதன் செயல்படும் தன்மை வைத்து “சர ராசி, ஸ்திர ராசி, உபய ராசி” என மூன்று வகையாக இந்திய ஜோதிட சாஸ்திரம் வகைப்படுத்துகின்றது.

  1. “சர ராசி” என்பது ஓரிடத்தில் நில்லாது தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கும் ராசியாகும்.
  2. “ஸ்திர ராசி” என்பது எப்போதும் ஓர் இடத்திலேயே இருந்து செயல்படக்கூடிய ராசியாகும்.
  3. “உபய ராசி” என்பது சில சமயங்களில் நகர்வதும், சில சமயங்களில் ஓரிடத்திலேயே நின்று விடுவதும் என இருவேறு தன்மைகளை வெளிப்படுத்தக்கூடிய ராசியாகும்.
சர ராசிகள்ஸ்திர ராசிகள்உபய ராசிகள்
மேஷம்ரிஷபம்மிதுனம்
கடகம்சிம்மம்கன்னி
துலாம்விருச்சிகம்தனுசு
மகரம்கும்பம்மீனம்

இந்திய ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசிகளும் பஞ்ச பூதங்களில் “நீர், நெருப்பு, காற்று, நிலம்” என்கிற 4 கின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

நெருப்பு ராசிகள்நில ராசிகள்காற்று ராசிகள்நீர் ராசிகள்
மேஷம்ரிஷப ராசி மிதுனம் ராசி கடகம்
சிம்மம்கன்னி ராசிதுலாம் ராசிவிருச்சிகம்
தனுசுமகர ராசிகும்ப ராசிமீனம்
- Advertisement -