- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval13-11-2024 புதவார பிரதோஷ வழிபாடு

13-11-2024 புதவார பிரதோஷ வழிபாடு

- Advertisement -

நாளைய தினம் புதன்கிழமையோடு சேர்ந்து பிரதோஷமும் வரவிருக்கின்றது. புதன் பகவான் புத்திக்கு உடையவன், அது மட்டுமல்ல புதன் கிரகத்துக்குரிய கடவுள் பெருமாள். ஆக நாளைய தினம் நீங்கள் ஈசனையும் நந்தி தேவரையும் வழிபாடு செய்தால், அறிவிலும் சிறந்து விளங்கலாம். செல்வநிலையிலும் உயர்ந்த இடத்திற்கு செல்லலாம். இறைவன் நமக்காக கொடுத்த இந்த நாளில் சிவபெருமானையும் நந்தி தேவரையும் எப்படி வழிபாடு செய்வது ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம்.

புதவார பிரதோஷம் சிவ வழிபாடு

சிவபெருமானுடைய தரிசனத்தை நாம் பெற வேண்டும் என்றால், முதலில் நந்தி தேவரின் அனுமதி தேவை. முதலில் நந்தி தேவருக்கான வழிபாட்டை பார்ப்போம். கொஞ்சமாக அருகம்புல் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பச்சை நிற நூலில் இந்த அருகம்புல்லை மாலையாக கட்ட வேண்டும். பூ கட்டுவது போலவே தொடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த மாலையை கட்டும் போது உங்கள் மனதில் ஒரே ஒரு கோரிக்கையை வைக்க வேண்டும். உங்களுடைய பிள்ளைகளின் படிப்பில் தடை வரக்கூடாது, உங்கள் பிள்ளை படிப்பதில் ஆர்வம் காட்டவில்லையா, என்னுடைய பிள்ளை படிப்பில் அதிக ஆர்வம் செலுத்தி, நன்றாக படிக்க வேண்டும் என்று பிரார்த்தனை வைக்கலாம். இப்படி ஒரு கோரிக்கையை வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கே நல்ல வேலை கிடைக்க வேண்டும், உங்களுக்கே அறிவு திறன் அதிகரிக்க வேண்டும் என்றாலும், இந்த வழிபாட்டை செய்யலாம். தவறு கிடையாது. வேண்டுதலை வைத்து மாலையைக் கட்டி, அந்த கொண்டு போய் நந்தி தேவருக்கு சாத்தி விட வேண்டும்.

- Advertisement -

பச்சை நிற நூல் புதன் பகவானுக்கு உரியது, பச்சை நிறத்தில் இருக்கும் அருகம்புல் விநாயகருக்கு உரியது, இது இரண்டையும் சேர்த்து தடைகள் அகல நந்தி தேவருக்கு இந்த மாலையை நாளைய தினம் பிரதோஷ நேரத்தில் போட்டால், உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிவிடும். இதோடு சேர்த்து இந்த பிரார்த்தனையை வைத்துவிட்டு, நந்தி தேவா என்னுடைய கோரிக்கையை சிவபெருமானுக்கு எடுத்துச் செல், என்னுடைய கோரிக்கை நிறைவே நிறைவேறினால், அடுத்த மாதமே உனக்கு ஒரு மணி வாங்கி கட்டுகிறேன் என்று பிரார்த்தனை வைத்துப் பாருங்கள்.

அவ்வளவு சீக்கிரத்தில் உங்களுடைய பிரார்த்தனை நிறைவேறிவிடும். சொன்ன வாக்கு தவறாமல் அடுத்த பிரதோஷ தினத்தில் சின்னதாக பித்தளையில் மணி வாங்கி நந்தி தேவர் கழுத்தை கட்டி விடுங்கள். மிக மிக எளிமையான பரிகாரம் இது. நாளைய தினம் இந்த வேண்டுதல் உங்களுடைய கஷ்டங்களை எளிதாக போக்கக்கூடிய சக்தி கொண்ட வேண்டுதலாக இருக்கும்.

- Advertisement -

சரி, அடுத்து சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும். சிவபெருமானுக்கு உங்கள் கையால் வில்வ இலைகளை மாலையாக கட்டிப்போட்டு, புதன் பகவானையும் மனதார நினைத்து வேண்டுதல் வைத்தால், அந்த எம்பெருமான் உங்களுடைய பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நிச்சயம் தீர்த்து வைப்பான். ஜாதக கட்டத்தில் புதன் சரியில்லாமல் புத்தி தடுமாற்றத்தோடு இருப்பவர்களுக்கு இந்த பிரதோஷ வழிபாடு நிச்சயம் நல்லது செய்யும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

இதையும் படிக்கலாமே: 13-11-2024 திரயோதசி பெருமாள் வழிபாடு

இந்த வழிபாடு சேர்த்து நீங்கள் சிவபெருமானுக்கு பிரதோஷ நேரத்தில் உங்களால் முடிந்த அபிஷேக பொருட்களை வாங்கி தரலாம். உங்களால் முடிந்த பிரசாதங்களை செய்து கொண்டு போய் நெய்வேத்தியம் செய்து, பசியோடு இருக்கும் ஏழைகளுக்கு அன்னதானம் கொடுக்கலாம். நீங்கள் கேட்டதற்கும் மேல் வரங்களை வாரி கொடுக்கக் கூடிய சக்தி, இந்த பிரதோஷ நேரத்திற்கு உண்டு என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்