பொதுவாக இந்த திரயோதசி வரும் நாள் பிரதோஷ நாளாக இருக்கும். சிவபெருமானுக்கு வழிபாடு செய்வதில் தான் நாம் ஆர்வம் காட்டுவோம். ஆனால் நாளை வர இருக்கக்கூடிய திரயோதசி அன்று பெருமாள் வழிபாடு செய்வதும் சிறப்பு மிக்கது. சிவன் வழிபாட்டை நிறைவு செய்துவிட்டு, பிறகு பெருமாள் வழிபாட்டையும் செய்து கொள்ளுங்கள்.
உங்களுடைய குடும்பத்தில் நிம்மதி ஒருபோதும் தொலைந்து போகாது. நாளைய தினம் எளிமையாக பெருமாள் வழிபாட்டை எப்படி செய்வது. இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும். ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
திரையோதசி பெருமாள் வழிபாடு
13/11/2024 புதன்கிழமை மாலை 6:00 மணியிலிருந்து 8:00 மணிக்குள் பெருமாள் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். உங்கள் வீட்டு பக்கத்தில் பெருமாள் கோவில் இருந்தால் அந்த பெருமாளுக்கு வெண் பொங்கல் நெய்வேதியமாக செய்து எடுத்து கொள்ளவும். துளசி இலைகளை வாங்கிக் கொள்ளவும். அர்ச்சனைக்கு துளசி இலைகள் தேவைப்படும்.
பிறகு பெருமாளை வேண்டி கோவிலில் விளக்கு போட்டுவிட்டு, உங்கள் பெயரைச் சொல்லி துளசி இலைகளால் அர்ச்சனை செய்து, அந்த வெண்பொங்கலை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தானம் செய்து, பெருமாளை 12 முறை வலம் வந்தால் உங்களுடைய குடும்பத்தில் இருக்கும் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை.
இந்த வழிபாட்டில் தாயாருக்கு மஞ்சள் கயிறு வாங்கி கொடுத்து, அந்த கயிறை சுமங்கலி பெண்கள் மீண்டும் வீட்டிற்கு வாங்கிச் செல்ல வேண்டும். உங்களுடைய தாலி சரடு மாற்றும்போது பெருமாள் தாயார் காலடியில் வைத்த இந்த மஞ்சள் கயிறில் சரடு கோர்த்து கொண்டால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.
கோவிலுக்கு செல்ல முடியாது என்பவர்கள் வீட்டிலேயே பெருமாள் படத்திற்கு முன்பு வெண்பொங்கல் செய்து வைத்து பெருமாளுக்கும், தாயாருக்கும் துளசி இலைகளால் அர்ச்சனை செய்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். இந்தத் திரயோதசி திதியில் தான் துளசி தேவி பிறந்த நாளாகவும், துளசி திருமணம் நடந்த நாளாகவும், சாஸ்திரத்தில் நமக்கு சொல்லப்பட்டுள்ளது.
இந்த நாளில் துளசி மாதாவை மனதார நினைத்து பெருமாள் வழிபாடு மகாலட்சுமி வழிபாடு செய்பவர்களுக்கு கோடான கோடி புண்ணியமும், கோடான கோடி ஐஸ்வர்யமும் நிச்சயம் கிடைக்கும். உங்களுடைய வீட்டில் துளசி செடி வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் வீட்டிற்கு புதுசாக ஒரு துளசி செடியை நாளைய தினம் வாங்கி வந்து வளருங்கள்.
இதையும் படிக்கலாமே: தலையெழுத்தை மாற்றும் பூ
மகாலட்சுமியே உங்கள் வீட்டுக்கு வந்ததாக அர்த்தம். அதோடு மட்டுமல்லாமல் (காமதேனு) கோமாதா இந்த பூமியில் அவதரித்த நாளும் இந்த நாள், தான் என்று சொல்கிறது நம்முடைய சாஸ்திரம். உங்களால் முடிந்தால் நாளைய தினம் பசு மாட்டிற்கு, உங்களால் முடிந்த பொருட்களை வாங்கி தானம் கொடுக்கலாம். நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த எளிமையான பரிகாரம் நன்மையை அபரிவிதமாக தரும் என்ற தகவலுடன் பெருமாளையும் தாயாரையும் வணங்கி இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.