நாளைய தினம் நிறைந்த வெள்ளிக்கிழமை. போர்க்களமாக இருக்கக்கூடிய உங்களுடைய வாழ்க்கையில் இருந்து விடுபட்டு, அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள், உங்களாலேயே தீர்க்க முடியாத பலவிதமான பிரச்சனைகளுக்கு தீர்வை பெற வேண்டும் என்றால், நாளைய தினம் செய்ய வேண்டிய ஒரு அம்மன் வழிபாட்டை பற்றியும், நாளைய தினம் அம்மன் கோவிலுக்கு வாங்கி கொடுக்க வேண்டிய ஒரு சக்தி வாய்ந்த பொருளைப் பற்றியும் தான், இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
நாளைய தினம் காலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, வீட்டில் இருக்கும் பெண்களின் கையால் தாழம்பு குங்குமத்தை வாங்கி, வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு தானமாக கொடுக்க வேண்டும். போகும்போதே மூன்று எலுமிச்சம் பழங்களை உங்கள் கையில் வாங்கிச் செல்லுங்கள்.
அந்த பழத்தை உங்கள் தலையை மூன்று முறை சுற்றி உங்களுடைய துன்பங்கள் எல்லாம் இன்றோடு உங்களை விட்டு விலக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து, அம்மன் கோவிலில் இருக்கும் திருசூலத்தில் அந்த எலுமிச்சம் பழத்தை குத்திவிட்டு, திரும்பி பார்க்காமல் வீட்டிற்கு வர வேண்டும்.
வெள்ளிக்கிழமை இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள், வீட்டில் பூஜையறையில் தீபம் ஏற்றி வையுங்கள். இரண்டு செவ்வாழை பழங்களை அம்மனுக்கு நெய்வேத்தியமாக வைத்துவிட்டு, வெள்ளிக்கிழமை பூஜை போல மிக மிக சுலபமான முறையில் பூஜையை செய்துவிட்டு, உங்களுடைய கஷ்டம் என்னவோ அதை அம்மனிடம் முறையிட்டு சொல்லி, தீப தூப ஆராதனை காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். வழிபாட்டை முடித்துவிட்டு அம்மனுக்கு பிரசாதமாக வைத்த வாழைப்பழத்தை வீட்டில் இருப்பவர்கள் பகிர்ந்து உண்ண வேண்டும். இவ்வளவுதான் வழிபாடு.
இதையும் படிக்கலாமே: இன்று 12-6-2025 பிரபஞ்ச வசிய நாள்
இந்த வழிபாட்டை செய்து முடித்துவிட்டு இரவு 8 டு 9 மணிக்குள் “ஓம் சக்தி பராசக்தி” என்ற மந்திரத்தை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து 108 முறை உச்சரிக்கவும். நாளையோடு போராட்டமான வாழ்க்கைக்கு நிச்சயம் ஒரு தீர்வு கிடைக்கும். ஆன்மீகம் சொல்லும் இந்த எளிய பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பல அடையாளம்.