பதிமூன்று வகையான சாபங்கள்

sabam

சாஸ்திரத்தில் 13 வகையான சாபங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. சாபம் என்பது உண்மையில் பலிக்குமா? நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற 21ஆம் நூற்றாண்டிலும் இதுபோன்ற சாபங்கள் மற்றும் அதற்கான பலன்கள் உண்டாகின்றனவா என்கிற சந்தேகம் நம்மில் பலருக்கும் இருப்பதுதான். சாதாரணமாக அந்த நேரத்தில் ஏற்படும் கோபத்தினால் ஒருவர் கொடுக்கின்ற சாபமானது பலிப்பதில்லை. அதை அவரே சிறிது நேரத்தில் மறந்தே போய் விடுவார். ஆனால் மனம் நொந்து, வயிறு எரிந்து, ஆழமான உணர்விலிருந்து கொடுக்கப்படும் சபமானது பலிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

sabam

ஒருவர் அதிகப்படியான துன்பத்தில் உழன்று மன இறுக்கத்திற்கு ஆளாகி தனக்கு ஒருவர் செய்த துரோகத்தை நினைத்து நினைத்து தினமும் செத்து பிழைத்து அதை பற்றிய முழு சிந்தனையிலேயே எந்நேரமும் இருப்பதால் அவர்களின் மனம் ஒருநிலைபடுகிறது. தனக்குத் துன்பம் இழைத்தவரை எதுவும் செய்ய முடியாமல் மனமானது விரக்தியின் எல்லைக்கே செல்கிறது. அச்சமயத்தில் மனமானது இறைவனை நோக்கி நேர்கோட்டில் சென்றடைகிறது. இறைவனை மனம் ஏற்கின்றது. தொண்டை குழியில் துயரமானது சிக்கி தவிக்கும். அந்நேரத்தில் தெய்வ சக்தியை அறிவு உணர்ந்து மனம் அதில் லயிக்கிறது. அவ்வாறு ஒருநிலைப்பட்ட மனதுடன் நாம் எந்த வார்த்தைகளை பிரயோகித்தாலும் அதில் ஒரு சக்தி ஏற்படுகிறது. அதனால் அந்த வார்த்தைகள் பலிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. அப்படியான 13 வகையான சாபங்களை பற்றி இப்பதிவில் காணலாம்.

குலதெய்வ சாபம்:
குலதெய்வ சாபம் குலதெய்வம் என்பது நம் குலதெய்வம் சார்ந்த பூஜைகளை நாம் முறையாக நிறைவேற்றாமல் இருப்பதால் உண்டாகின்றது. நம் குல தெய்வத்தை மறப்பது பாவமாகும். இதனால் குடும்பத்தில் அமைதி இன்மை உண்டாகும். எப்போதும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்துகொண்டே இருக்கும். ஒருவிதமான துக்கம் சூழ்ந்திருக்கும். அதற்குரிய பரிகாரத்தை நிறைவேற்றி சாப விமோசனம் அடையலாம்..

muni

முனி சாபம்:
முனி சாபம் உண்டானால் இல்லத்தில் யாரேனும் ஒருவருக்கு செய்வினை கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. நம் ஊரின் எல்லை தெய்வங்கள், காவல் தெய்வங்கள் போன்ற சிறு தெய்வங்களுக்கு உரிய பூஜையை, மரியாதையை செலுத்த தவறுவதால் உண்டாகின்றன. அதைப்பற்றி தகுந்த நபரிடம் விசாரித்து பரிகார பூஜை மேற்கொண்டால் நிவர்த்தி உண்டாகும்.

- Advertisement -

ரிஷி சாபம்:
ரிஷி சாபம் பழங்காலத்தில் ரிஷிகளையும், முனிவர்களையும், சித்தர்களையும் அவமதிப்பதால் உண்டான சாபமாகும். இக்காலத்தில் உண்மையான பக்தி மார்க்கத்தில் ஈடுபடுகின்றவர்களையும், அந்தணர்களையும் அவமதிப்பதால் உண்டாகக்கூடும். அதனால் வம்சம் தழைக்காது.

தேவ சாபம்:
தேவ சாபம் என்பது தெய்வங்களை நிந்திப்பது, பூஜை, புனஸ்காரங்களை பாதியிலேயே நிறுத்துவது போன்ற பாவங்களால் உண்டாவது. இதனால் உற்றார் உறவினர்கள் பிரிந்து செல்லக்கூடும்.

tree cutting

விருட்ச சாபம்:
விருட்ச சாபம் என்பது கனி தரும் விருட்சத்தை பட்டுப்போக செய்வது, பச்சை மரத்தை வெட்டுவது அல்லது எரிப்பது, வனாந்திரத்தை வீட்டுமனை ஆக்குவது போன்ற செயல்களால் உண்டாக கூடியது. இந்த விருட்ச சாபத்தினால் தீரா நோய்கள் உண்டாகக்கூடும். குலதெய்வ வழிபாட்டால் இச்சாபத்திலிருந்து விமோசனம் பெறலாம்.

கங்கா சாபம்:
கங்கா சாபம் என்பது ஓடும் ஆற்றை அசுத்தம் செய்வதானாலும், பலர் அருந்தக் கூடிய நீரை பாழாக்குவதனாலும் உண்டாகக் கூடியது. இச்சாபத்தால் பூமியில் நீர் தோண்டும்போது கிடைக்கப்பெறாமல் போகும். கங்கா தேவியை வணங்குவதால் சாப விமோசனம் பெறலாம்.

பூமி சாபம்:
பூமி சாபம் என்பது பூமாதேவியை காலால் உதைப்பது, பாழ்ப்படுத்துவது, தேவையற்ற இடத்தில் அனாவசியமாக பள்ளம் தோண்டுவது, அடுத்தவர் நிலத்தை அபகரிப்பது, பூமிக்கு கேடு விளைவிக்கக்கூடிய மட்காத பொருட்களை புதைப்பது போற்ற செயல்களால் உண்டாக கூடியது. இதனால் நரக வேதனையை அனுபவிக்க கூடும் என்கிறது சாஸ்திரம்.

 ko-sabam

கோ சாபம்:
கோ சாபம் என்பது பசுவதை செய்வது, பசுவிடமிருந்து அதன் கன்றினை பிரிப்பது, பசுவிற்கு தண்ணீர் கொடுக்காதது, பால் நின்ற பசுவை வெட்டுவது போன்ற காரணங்களால் இந்த சாபம் உண்டாகிறது. இதனால் உங்கள் குடும்பத்தில் வளர்ச்சி இல்லாமல் எப்போதும் கஷ்ட நிலை உருவாகலாம்.

பித்ரு சாபம்:
பித்ரு சாபம் என்பது இறந்து போன நம் முன்னோர்களினால் உண்டாகக்கூடியதாகும். நாம் முறையாக செய்ய வேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை மறப்பதும், நம்முடைய பெற்றோர் மற்றும் அவர்களுடைய பெற்றோரை அவமதிப்பது, பாதுகாக்காமல் விடுவது போன்ற காரணங்களால் உண்டாகிறது. இச்சாபத்தால் வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் மரணிப்பது போன்ற கொடூரங்கள் உண்டாகலாம். முறையான பரிகாரம் மேற்கொண்டு சாபவிமோசனம் பெறலாம்.

snake firing

சர்ப்ப சாபம்:
சர்ப்ப சாபம் என்பது நாகங்களால் உண்டாகக்கூடியது. நாகங்களை கொல்வதாலும், தீ வைத்து எரிப்பதாலும், அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும் உண்டாகிறது. இந்த சாபத்தால் காலசர்ப்ப தோஷம் ஏற்பட்டு திருமண தடை ஏற்படுகிறது. இதற்கென பிரத்யேக பரிகாரங்கள் இருக்கின்றன. அவற்றை முறையாக மேற்கொண்டு சாபவிமோசனம் பெறலாம்.

பிரம்ம சாபம்:
பிரம்ம சாபம் என்பது நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது அல்லது அவமதிப்பது, கற்ற வித்தையை தவறாக பிரயோகிப்பது, அடுத்தவர்களுக்கு அதை கற்றுக் கொடுக்காமல் மறைப்பது போன்ற காரணங்களால் ஏற்படுகின்றன. இதனால் வம்சத்தில் கல்வியில் சிறந்து விளங்க முடியாமல் போகலாம்.

soul hand

பிரேத சாபம்:
பிரேத சாபம் என்பது இறந்த மனித உடலின் பிரேதமானது கொடுக்கின்ற சாபமாகும். இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரைப்பற்றி இழிவாக பேசுவது, பிரேத உடலை தாண்டுவது, இறுதி காரியங்களை செய்ய விடாமல் தடுப்பது, இறந்தவருக்கு வேண்டியவர்களை பார்க்க அனுமதி மறுப்பது போன்ற காரணங்களால் உண்டாகக்கூடிய சாபமாகும், இந்த சாபத்தால் உங்களது ஆயுள் குறையும்.

பெண் சாபம்:
பெண் சாபம் என்பது பெண்களை ஏமாற்றுவது, தாயை பழிப்பது, சகோதரிகளை ஆதரிக்காமல் கைவிடுவதும், மனைவியைக் கைவிட்டு பிரிந்து செல்வதாலும் உண்டாகக் கூடியது. சாபத்தில் பெண் சாபம் கொடிய சாபமாக கருதப்படுகிறது. இதனால் உங்கள் வம்சமே அழியும் நிலை உண்டாகும். பெண்களால் ஏற்பட கூடிய இந்த சாபத்திற்கு பைரவரை வழிபடலாம்.

pen saabam

அறிவியல் ரீதியாக பார்த்தால் சாபம் பெற்ற மனிதனின் மூளையில் தான் ஒருவருக்கு செய்த பாவத்தை அல்லது துரோகத்தை நினைத்து தன்னை அறியாமல் வருத்திக் கொண்டிருக்கும் நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும். அந்த நிகழ்வு சிறுகச் சிறுக அவர்களை அழிவின் பாதையில் கொண்டு சென்றுவிடும் என்பதில் சந்தேகமில்லை. எனவே ஒருவர் மனம் புண்படும் படி நடந்து கொள்ளாமல் சிறப்பான வாழ்க்கையை மேற்கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
எவ்வளவு முயற்சி செய்தாலும் கடன் கிடைக்கவில்லையா? இந்த பொருளை எடுத்துச் சென்றால் போதும்.

English Overview:
Here we have 13 types of curses. Sabathin vagaigal in Tamil. Sabam palangal in Tamil. Sabam neenga in Tamil.