எவ்வளவு முயற்சி செய்தாலும் கடன் கிடைக்கவில்லையா? இந்த பொருளை எடுத்துச் சென்றால் போதும்.

pursewithcash

நம் வாழ்கையின் முன்னேற்றத்திற்காக, சில அவசியமான தேவைகளுக்கு கடன் வாங்கித்தான் ஆகவேண்டும் என்ற சூழ்நிலை இருக்கின்றது. ஒரு தொழில் செய்ய வேண்டும் என்றாலும் முதலீடாக ஒரு தொகை தேவைப்படும். அதற்காக கடன் வாங்கித்தான் ஆகவேண்டும். வீடு கட்ட வேண்டும் என்பதற்காக என்றாலும் கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. மேல்படிப்பு படிக்க வேண்டும் என்றாலும் அந்த தேவையை பூர்த்தி செய்வதற்கு கடன் வாங்கித்தான் ஆகவேண்டும். இந்தக் கடனை நாம் தெரிந்தவர்களிடம் வாங்க முயற்சி செய்தாலும் சரி, அல்லது வங்கியில் வாங்க முயற்சி செய்தாலும் சரி பலமுறை சென்று வந்தாலும் நமக்கான கடன் தொகையானது கிடைக்காமல் இழுத்துக் கொண்டே இருக்கும். கடன் பெறுவதற்கு தேவையான விதிமுறைகளும், பத்திரங்களும் சரியாக இருந்தாலும் கடன் தொகையானது நம் கைக்கு கிடைப்பதில் இழுபறி இருந்துகொண்டே இருக்கும்.

cash

சரியான நேரத்தில் கடன் தொகை கிடைக்காமல் போவதும் நம் முன்னேற்றத்திற்கு ஒரு தடைதான். கடன் தொகை கிடைக்காமல் இருக்க நேரமும் காலமும் சூழ்நிலையும் தான் காரணமாக இருக்கிறது. நாம் முயற்சி செய்யும் இடத்திலிருந்து கடன் தொகையை விரைவாக பெறுவதற்கு ஒரு சுலபமான வழி உள்ளது. அதை பற்றிதான் இந்த பதிவில் காணப் போகின்றோம்.

பொதுவாக நம் சாஸ்திரத்தில் பணத்திற்கு அதிபதியாக புதன் பகவானை கூறுவார்கள். அந்த புதன் பகவானை நம் மனதில் நினைத்துக்கொண்டு ஒரு சதுர வடிவிலான அரக்கு (டார்க் மெரூன்)நிற துணியினை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தத் துணியில் ஒரு ஸ்பூன் அளவு வெந்தயத்தை வைத்து ஒரு சிகப்பு நூலிலை கொண்டு சிறிய மூட்டையாக கட்டி கொள்ள வேண்டும். ஒரு கோலிகுண்டு அளவில் கட்டப்பட்ட முடிச்சாக தயார் செய்து கொள்ள வேண்டும்.

puthan

உங்கள் பூஜை அறையில் நெய் தீபம் ஏற்றி, அரக்கு கலர் துணியில் கட்டப்பட்ட அந்த சிறிய அளவிலான முடிச்சினை உங்கள் உள்ளங்கைகளில் வைத்து இரண்டு கைகளையும் சேர்த்து அந்த புதன் பகவானை மனதார நினைத்து, உங்களுக்கான கடன் விரைவில் கிடைக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

நீங்கள் கடன் கேட்டு செல்லும் இடத்திற்கு இந்த முடிச்சை உங்கள் மணி பர்சிலோ அல்லது பாக்கெட்டிலோ வைத்துக் கொண்டு செல்ல வேண்டும். வீடு திரும்பியதும் அந்த முடிச்சினை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்துவிடவேண்டும். நீங்கள் ஒவ்வொரு முறை செல்லும் போதும் இந்த முடிவினை கையில் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும்.

money

நீங்கள் வேண்டிய பணத்தை கடனாக பெறுவதற்கு பல முறை அலைந்து திரிந்து இருப்பீர்கள். ஆனால் இந்த பரிகாரத்தை செய்து அந்த முடிச்சினை உங்கள் கையில் எடுத்துக் கொண்டு செல்லும் போது வெகு விரைவாக உங்களது கடன் தொகையானது உங்கள் கைகளில் கிடைத்துவிட அதிக வாய்ப்பு உள்ளது. இது மட்டுமல்லாமல் நீங்கள் புதன் பகவானை வாரம்தோறும் புதன்கிழமைகளில் நவக்கிரகக் கோயிலுக்குச் சென்று நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபட்டால் நீங்கள் தொடங்கக் கூடிய எந்த ஒரு நல்ல காரியமாக இருந்தாலும், எந்த விதமான தடங்கல் இல்லாமல் முன்னேற்றப்பாதையில் செல்லும்.

money

ஆனால் நீங்கள் கடனுக்காக பெறப்படும் தொகையானது நியாயமான கோரிக்கைக்காக இருக்க வேண்டும். மற்றவர்களை ஏமாற்ற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பரிகாரமானது உபயோகமாகாது.

கடன்தொகையானது உங்களுக்கு கிடைத்துவிட்டால் அந்த முடிச்சை அவிழ்த்து அதிலுள்ள வெந்தயத்தை நீர்நிலைகளில் போட்டுவிடலாம்.

இதையும் படிக்கலாமே
உங்கள் குழந்தைகள் கல்வியில் சாதிக்க வேண்டுமா? சுலபமான வழிபாடு.

English Overview:
Here we have Kadan kidaikka Tamil. Kadan kidaikka pariharam Tamil. Kadan kidaikka valigal Tamil. Kadan kidaikka venduthal.