- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகணபதி மாலா மந்திர வரிகள்

கணபதி மாலா மந்திர வரிகள்

- Advertisement -

இன்று சனிக்கிழமை யோடு சேர்ந்து சங்கடஹர சதுர்த்தி திதி வந்திருக்கிறது. இந்த நாளில் விநாயகர் வழிபாட்டை செய்தால் நிச்சயமாக நம்முடைய சங்கடங்கள் விலகிவிடும் என்பது நம்பிக்கை.  இந்த வழிபாட்டோடு சேர்த்து ஒரு அதிசக்தி வாய்ந்த மந்திர வரிகளையும் தான் இன்றைய பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். சங்கடஹர சதுர்த்தி அன்று, மாலை நேர வழிபாடு தான் சிறப்பு.

கோவிலுக்கு சென்று மாலை வழக்கம் போல சிதறு தேங்காய் உடைத்து விநாயகருக்கு அருகம்புல் வாங்கி கொடுத்து உங்களால் முடிந்தால் கொழுக்கட்டை செய்து வைத்து, வழிபாட்டை மேற்கொள்ளலாம். முடியவில்லை என்றால் வெற்றிலை பாக்கு, பூ, பழம் கொடுத்தும் உங்களுடைய வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். இது முதல் விஷயம்.

- Advertisement -

சங்கடஹர சதுர்த்தி அன்று மாலை வேளையில் 6:00 மணி முதல் 9:00 மணிக்குள் இருக்கக்கூடிய இந்த இடைப்பட்ட நேரத்தில் இந்த பாடலை படித்தால் மட்டும் போதும். உங்களுடைய பிரச்சனைகளுக்கு உடனடியாக ஒரு தீர்வினை அந்த விநாயகப் பெருமான் காண்பித்துக் கொடுப்பார். எந்த வழிபாடாக இருந்தாலும் எந்த மந்திரமாக இருந்தாலும், அதற்கு 48 நாள் நிச்சயம் நேரத்தை நாம் கொடுக்க வேண்டும். சங்கடஹர சதுர்த்தி அன்று படிக்க துவங்கிய இந்த மந்திரத்தை தினம் தினம் படியுங்கள்.

தினமும் 1 முறை இந்த மந்திரத்தை படித்தால் போதும் காரிய தடைகள் விலகும். எதிரி தொல்லை விலகும். கடன் சுமை குறையும். குடும்ப கஷ்டம் தீரும். நீங்கள் தொட்ட காரியங்கள் எல்லாம் வெற்றி அடையும். அந்த மந்திர வரிகளையும் இப்போது பார்த்து விடுவோமா.

- Advertisement -

ஸ்ரீ சுகப்பிரம்ம மகரிஷி அருளிய மந்திரமாலா பாடல் வரிகள் இதோ. இந்த பாடல் வரிகளுக்கு கணபதிமாலா என்ற பெயர் உண்டு. இருந்தாலும் முருகப்பெருமானை போற்றி வணங்கவும் இந்த பாடல் வரிகள் நமக்கு வழிவகுக்கும்.

கணபதி மாலா.

ஸ்ரீ சுகப்பிரும்ம மகரிஷி அருளிய கணபதி மாலா, சரவண மந்திரம்.

- Advertisement -

ஓம் ஐம் க்லீம் சௌ : சக்திதராய
ஓங் நங் மங் சிங் வங் யங் லம்போதாராய
ஹரிம் ஹ்ரீம் ஸ்ரீம் சுப்ரமண்யாய
சரவணேத்பவாய ஹிரண்யோத்பவாய

க்லீம் சர்வ வச்யாய
தன ஆக்ருஷ்ய தம் பம் ஹம் ஜும்
ஷம் ஸம் அதிர்ஷ்ட தேவதாய
ஷண்முகாய சர்வதோஷ நிவாரணாய

சர்வ க்ரஹ தோஷ நிவாரணாய
சிவாய சிவதனயாய இஷ்டார்த்த ப்ரதாயகாய
கம் கணபதயே க்லௌம் ஷம்
சரவண பவாய வசி வசி

இதையும் படிக்கலாமே: வைகாசி கடைசி நாள் பரிகாரம்

முதலில் விநாயகரை கும்பிடுங்கள். பிறகு முருகப்பெருமானை நினைத்துக் கொள்ளுங்கள். பாடலை படியுங்கள். உங்கள் வாழ்க்கையின் திசை எப்படி மாறுகிறது என்பதை நீங்களே பாருங்கள். சூரிய உதயத்திற்கு முன்பு இந்த பாடலை படித்துவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு நல்ல பலனை தரும் என்ற இந்த தகவலுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்