146 ஆண்டுகளுக்கு பிறகு பூமியில் இருந்து வெளிப்பட்ட அதிசய சிவலிங்கம்

Sivan temple

சிற்பக்கலைக்கு புகழ்பெற்ற சித்தன்ன வாசல் கோயில் இருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல கோயில்கள் இருக்கும் மலை தான் “நார்த்தாமலை”. இங்கிருக்கும் மேலமலையில் மிகப்பழமையான விஜயாலீஸ்வரர் கோயில் மற்றும் அதனை சார்ந்த குடைவரை கோயில்களும் இருக்கின்றன. இந்த கோயிலுக்கு போகும் வழியில் தலவிரி சிங்கம் என்கிற பெயரில் ஒரு நீர் சுனை இருக்கிறது. அதற்கு அருகில் பழமையான கல்வெட்டு ஒன்றை இப்பகுதியை சார்ந்த சில சிவபக்தர்கள் கண்டுபிடித்தனர்.

narthamalai

நூற்றாண்டு பழமையான அந்த கல்வெட்டில் 1872 ஆம் ஆண்டு புதுக்கோட்டை பகுதியை ஆட்சி புரிந்த தொண்டைமான் அரசி அந்த சுனையை தூர்வாரி அங்கிருக்கும் சிவலிங்கத்தை வழிபட்டதாக தகவல் இடம்பெற்றுள்ளது. இதை அறிந்ததும் அந்த சுனையை தூர்வாரி, சிவலிங்க வழிபாடு செய்ய இப்பகுதியை சார்ந்த பக்தர்கள் முடிவெடுத்தனர். 1950 ஆம் ஆண்டுகள் வாக்கில் இந்த சுனையை சிலர் தூர்வாரி அப்பணியை பாதியிலேயே நிறுத்தி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இம்முறை சுனையை தூர்வாரியே தீருவது என்று முடிவெடுத்த பக்தர்கள், தங்களின் ஊக்கமான முயற்சியால் 146 ஆண்டுகளுக்கு பிறகு சுனையை தூர்வாரி அதிலிருக்கும் சிவலிங்கத்திற்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். இச்செய்தியை அறிந்ததும் புதுக்கோட்டை பகுதியை சார்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து சுனை லிங்கத்தை வழிபடுகின்றனர்.

sunai lingam

மிக சிறந்த பணியை செய்த சிவபக்தர்கள் குழுவை சார்ந்த நபர் கூறும் போது “இரண்டு மாதங்களுக்கு முன்பு சித்தனவாசல் கோயிலில் சுனையை தூர்வாரி அதில் மூழ்கியிருந்த லிங்கத்தை வெளிக்கொணர்ந்து பூஜைகள் செய்ததாகவும். இங்கும் அத்தகைய சுனை லிங்கம் இருப்பதை அறிந்து ஆங்கில புத்தாண்டு தினத்தில் சிவலிங்கத்திற்கு பூஜை செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தோடு, தொல்லியல் துறையின் அனுமதி பெற்று டிசம்பர் 31 அன்று காலை தூர்வார தொடங்கி ஜனவரி 1 ஆம் தேதி மதியம் முழுவதும் தூர்வாரி லிங்கத்தை வெளிக்கொணர்ந்ததாக கூறுகிறார்.

- Advertisement -

sunai lingam

சுனையில் 7 அடி உயரத்திற்கு சேறு இருந்ததாகவும், மோட்டார் மூலம் சேற்றை வெளியேற்ற இயலாமல் போனதால் இந்த கிராம மக்கள், சிவனடியார்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்று சேர்ந்து சேற்றை முழுவதுமாக தூற்றி சுனை லிங்கத்தை வெளிப்படுத்தியதோடு, அச்சுனையை நன்கு சுத்தம் செய்து கடந்த 04.01.2019 அன்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டதாக கூறுகிறார். மீண்டும் மழைநீர் சுனையில் நிரம்பி லிங்கம் மறையும் காலத்திற்குள் லிங்கத்தை தரிசிக்க ஏராளனமான பக்தர்கள் வரவுதாகவும் கூறுகிறார்.

இதையும் படிக்கலாமே:
நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் சிறப்புக்கள்

இது போன்று மேலும் பல ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have 146 year sunai lingam poojai in Tamil. It is also called Sunai lingam in Tamil or Narthamalai lingam in Tamil or Pudukkottai narthamalai temple in Tamil.