சாதாரண நாட்களிலேயே முருகா முருகா என்று உள்ளம் உருகி, முருக பக்தர்கள் அந்த எம்பெருமானை கூப்பிட்டால் நிச்சயம் ஓடோடி வந்து விடுவார். அதிலும் நாளைய தினம் கார்த்திகை 1ஆம் தேதி, கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து இருக்கிறது. இதில் இன்னொரு அற்புதம் என்ன என்றால், இப்போதுதான் முருகப்பெருமானது சஷ்டி விரதம் நிறைவடைந்து, முருகருக்கு திருக்கல்யாணமும் நிறைவடைந்திருக்கிறது.
முருகன் சந்தோஷமாக இருக்கக்கூடிய இந்த நேரத்தில், இன்னொரு விசேஷமும் நமக்கு வரப் பிரசாதமாக கிடைத்துள்ளது. கார்த்திகை சிவபெருமானுக்கு உரிய மாதம். கார்த்திகை சோமவாரத்தில், சிவபெருமானை வழிபாடு செய்வது சிறப்பு. தந்தையுடைய சிறப்பு மிக்க மாதத்தில் முதல் தேதியிலேயே, மகனுடைய கிருத்திகை நட்சத்திரம் சேர்ந்து வந்திருக்கிறது. இதைவிட ஒரு நல்ல நாள் நமக்கு கிடைக்குமா. நாளை முருகர் வழிபாடு செய்வதை யாரும் தவற விடாதீர்கள்.
கிருத்திகை முருகன் வழிபாடு
நாளை அனைவரும் முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டும். உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் எந்த முருகன் கோவிலாக இருந்தாலும் சரி, அந்த முருகர் கோவிலுக்கு சென்று விளக்கு போடுங்கள். முடிந்தால் 6 விளக்கு, முடியவில்லை என்றால் 2 விளக்கு ஏற்றி வைத்து முருகா முருகா என்று உருகி உங்களுடைய பிரச்சனைகளை, முருகர் பாதத்தில் இறக்கி வைத்து விடுங்கள். வேண்டிய வரங்களை கேளுங்கள். பிறகு முருகரை 6 முறை வலம் வர வேண்டும்.
‘ஓம் நமோ சரவணபவ !’ என்ற மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே முருகனை வளம் வர வேண்டும். முருகருக்கு செவ்வரளி பூ வாங்கி செல்லலாம். வெற்றிலை பாக்கு, தேங்காய் பழம், இப்படி உங்களால் முடிந்த பொருட்களை வாங்கி சென்று, உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம்.
நாளை காலை 7:30 மணியிலிருந்து 8:30 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்வது மிக மிக சிறப்பு. இது ரொம்ப ரொம்ப நல்ல நேரம். முடிந்தவர்கள் இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். முடியாதவர்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் என்றாலும் முருக பெருமானை வழிபாடு செய்யலாம். தவறு கிடையாது.
வேலையில் பிரச்சனை, படிப்பில் பிரச்சனை, குடும்பத்தில் பிரச்சனை, வீடு வாங்குவதில் பிரச்சனை, கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இல்லை, திருமணம் நடக்கவில்லையே, மனதில் நிம்மதி இல்லை, பொன் பொருள் சேர்க்கை வேண்டும் என்று உங்களுக்கு எவ்வளவு பெரிய கோரிக்கையாக இருந்தாலும் சரி, ஏதாவது ஒரு கோரிக்கையை மனதில் வைத்து நாளைய தினம் முருகன் சன்னிதானத்தில் விளக்கு போட்டு வழிபாடு செய்தால், நிச்சயம் நீங்கள் வேண்டியது கூடிய சீக்கிரத்தில் நிறைவேறும்.
அதில் எந்த சந்தேகமும் கிடையாது. இது தவிர கிருத்திகை நட்சத்திரம் அன்று விரதம் இருப்பவர்கள், வீட்டில் வேல் வைத்து வழிபாடு செய்பவர்கள், எல்லாம் அவரவர் விருப்பப்படி அவரவருக்கு முடிந்த படி வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். வீட்டில் வேலை இருந்தால் நிச்சயம் அந்த வேலுக்கு அபிஷேகம் செய்து உங்களால் முடிந்த நெய்வேத்தியம் வைத்து நாளைய தினம் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் மிக மிக நல்லது.
இதையும் படிக்கலாமே: செல்வம் சேர்க்கும் ஸ்தல விருட்சம்
நாளை வரவிருக்கும் இந்த அதி அற்புதம் வாய்ந்த நாளில் சூழ்நிலை காரணமாக உங்களால் எந்த பூஜையையும் செய்ய முடியவில்லை என்றாலும் சரி, வீட்டில் இருந்தபடியே ஆழ்மனதில் முருகப்பெருமானை நினைத்து முருகா உன்னுடைய அருள் எனக்கும் என் குடும்பத்திற்கும் தேவை என்று வேண்டிக் கொண்டாலும் அந்த முருகப்பெருமான் நிச்சயம் அருள் புரிவான். அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. வழிபாட்டை தவறவிட்டவர்கள். வழிபாடு செய்ய முடியாத சூழ்நிலையில் இருப்பவனுக்கும் அந்த எம்பெருமானின் ஆசி நிச்சயம் கிடைக்கும் இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.