- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெல்வம் சேர்க்கும் ஸ்தல விருட்சம்

செல்வம் சேர்க்கும் ஸ்தல விருட்சம்

- Advertisement -

ஒவ்வொரு கோவில்களுக்கும் ஸ்தல விருட்சம் என்று ஒன்று இருக்கும். அதாவது அந்த கோவில் பிரகாரத்திற்குள் பல அதிசக்தி வாய்ந்த குணங்களுடன் கூடிய மருத்துவ மூலிகையாக இருக்கக் கூடிய ஒரு மரம் அமைய பெற்றிருக்கும். பொதுவாகவே எல்லா பழமை வாய்ந்த கோவில்களிலும் தலவிருட்சம் நிச்சயம் இருக்கும். இந்த தல விருட்சம் பல மகத்துவமான பலன்களை கொடுக்கக் கூடியது. அவற்றில் செல்வம் சேர்வதற்கு எந்த ஸ்தல விருட்சத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்னும் ரகசியத்தை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

அரச மரம், ஆலமரம், புன்னை மரம், வன்னி மரம் என்று ஒவ்வொரு பழமை வாய்ந்த ஆலயங்களிலும் ஒவ்வொரு ஸ்தல விருட்சம் இன்றளவிலும் பரந்து விரிந்து பக்தர்களுக்கு பல நன்மைகளை வழங்கிக் கொண்டிருக்கிறது என்பது அதிசயம் மிக்க ஒன்று. புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்பவர்கள், அங்குள்ள விருட்சத்தையும் தொட்டு தரிசித்து வணங்குவது வேண்டுதலை முழுமைப்படுத்தும் என்பார்கள்.

- Advertisement -

என்னதான் மனிதன் உழைத்து சம்பாதித்தாலும், அவனால் முன்னுக்கு வர முடியவில்லை என்றால் 108 கோவில்களில் இருக்கக்கூடிய 108 தல விருட்சங்களை தொட்டு வணங்கி வந்தால் குப்பையில் இருப்பவனும் குபேரன் ஆகிவிடலாம். அந்த அளவிற்கு மிகவும் விசேஷமான ஒரு பலன் தரக்கூடியது இந்த ஸ்தல விருட்சங்கள். அந்த வகையில் புரச மரத்தை ஸ்தல விருட்சமாக கொண்டுள்ள கோவில்களை தேடுங்கள்.

புரசை மரம் அந்த காலங்களில் எல்லாம் ஏர் கலப்பை செய்வதற்கு பயன்படுத்தி வந்த அற்புதமான ஒரு மரமாகும். அப்போதெல்லாம் விவசாயிகள் தான் பணக்காரர்களாக இருப்பார்கள். ஊருக்கே சோறு போடுபவர்கள் விவசாயிகள். அப்படிப்பட்ட விவசாயத்திற்கு உதவி செய்யக் கூடிய ஒரு பொருள் தான் ஏர் கலப்பை. புரசை மரத்தால் நிலை வாசல் செய்தால் அந்த வீட்டில் செல்வம் பெருகும். லக்ஷ்மி அருள் உண்டாகும். சென்னையில் இருக்கும் புரசைவாக்கம் என்கிற பெயர், முந்தைய காலங்களில் எல்லாம் இந்த புரசை மரம் காடு போல் அங்கு நிறைந்திருந்தது தான் காரணம். அங்குள்ள கங்காதீஸ்வரர் ஆலயத்தில் இன்றும் புரசை ஸ்தல விருட்சமாக காணப்படுகிறது.

- Advertisement -

அது போல புரசை மரத்தை ஸ்தல விருட்சமாக கொண்டுள்ள கோவிலுக்கு சென்று அங்குள்ள மரத்திலிருந்து குச்சிகளை எடுத்து வாருங்கள். இந்த குச்சிகளை வீட்டில் பணம் இருக்கும் இடங்களில் எல்லாம் போட்டு வையுங்கள். வெள்ளிக் கிழமையில் அதற்கு தூப, தீபம் காண்பித்து பணம் சேர வேண்டும் என்று மனதார பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். புரசை மரம் பல மருத்துவ குணங்கள் கொண்டுள்ளது. அது மட்டும் அல்லாமல் அது தெய்வீக குணங்களையும் தனக்குள் வைத்திருக்கும். இது செல்வத்தையும், பணத்தையும் ஈர்த்து ஒருவரை குபேரனாக கூடிய வரம் பெற்றுள்ள மரமாகும்.

இதையும் படிக்கலாமே:
கார்த்திகை மாதம் பூஜை அறையில் ஏற்ற வேண்டிய விளக்கு

இந்த மரத்தின் குச்சிகளை உங்களுடைய மணி பர்சில் கொஞ்சம் பணத்துடன் சேர்த்து போட்டு வைத்துக் கொள்ளுங்கள். புரசை மர குச்சியை கொண்டு சாம்பிராணி தூபம் போட வேண்டும். செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் பூஜை செய்யும் பொழுது சாம்பிராணி காண்பியுங்கள். அந்த சாம்பிராணியில் இந்த புரசை மர குச்சிகளை போடுங்கள். அதிலிருந்து வரக்கூடிய புகையை வீடு முழுக்க காண்பியுங்கள். தொழில் செய்பவர்கள் தொழில் செய்யும் இடங்களில் இது போல சாம்பிராணியுடன் புரசை மர குச்சிகளையும் போட்டு தூபம் காண்பிக்க, தொழில் நன்கு செழிக்கும். கடன் தொல்லைகள் நீங்கும், படிப்படியான முன்னேற்றமும், செல்வ வளமும் உயர ஆரம்பிக்கும் என்பது ஐதீகம்.

சற்று முன்