16 செல்வங்கள் என்றால் உண்மையில் எவை எவை தெரியுமா ?

16 selvangal

பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று பெரியோர்கள் சிறியோர்களை வாழ்த்துவது தமிழர் மரபு. பதினாறு செல்வங்கள் என்றால் உண்மையில் என்னென்ன என்பது பற்றியும் அபிராமி அந்தாதியில் அவை பற்றிய குறிப்புக்கள் பற்றியும் பார்ப்போம் வாருங்கள்.

Lakshmi

1. நோயில்லாத உடல்
2. சிறப்பான கல்வி
3. குறைவில்லாத தானியம்
4. தீமை இன்றி பெறும் செல்வம்
5. அற்புதமான அழகு

6. அழியாத புகழ்
7. என்றும் இளமை
8. நுட்பமான அறிவு
9. குழந்தைச் செல்வம்
10. வலிமையான உடல்

11. நீண்ட ஆயுள்
12. எடுத்தக் காரியத்தில் வெற்றி
13. சிறப்பு மிக்க பெருமை
14. நல்ல விதி

15. துணிவு
16. சிறப்பான அனுபவம்

lakshmi-ganapathi

 

இதை தான் அபிராமி பட்டர் மிக அழகாக அபிராமி அந்தாதி யில் கூறியுள்ளார்.

கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்

Advertisement

தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்

துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!

-அபிராமி பட்டர்