16 வாரங்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள், பிடிக்காத தம்பதிகள் அன்யோன்யமாக மாறுவார்கள்!

marraige-couple

நிறைய பேருடைய இல்லத்தில் இன்று கணவன் மனைவி பிரச்சனைகள் மேலோங்கி காணப்படுகிறது. எதற்கெடுத்தாலும் சண்டை, சச்சரவு என்று காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறார்கள். எதற்காக சண்டை போடுகிறோம்? என்று தெரியாமலேயே சண்டை போடுபவர்களும் உண்டு. மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளவும், இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். இந்த விரதத்தை மேற்கொண்டால் பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். மனதால் வீட்டிற்குள் பிரிந்து இருப்பவர்களும் மனம் மாறி சிவபார்வதியாக ஒற்றுமையாக இருவரும், சரிபாதியாக வாழ்க்கையை புதிதாக துவங்குவார்கள் என்பது உறுதி.

sivan-parvathi

சிவனும் பார்வதியும் திருவிளையாடல் புராணத்தில் நிறையவே சண்டை போடுவதை நாம் பார்த்திருப்போம். கடவுளே இப்படி என்றால்! நாமெல்லாம் எம்மாத்திரம்? கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் திருமணம் செய்து கொண்டபின் எப்படி ஒற்றுமையாக வாழ்வது? என்பதை தான் நாம் மனதில் நினைக்க வேண்டும். 100% எல்லோரும் சிறந்த தம்பதிகளாக வாழ்வதில்லை. உங்கள் கண்களுக்கு அப்படி மற்றவர்கள் தெரிந்தாலும், உண்மையில் அங்கு நடக்கின்ற நிஜங்கள் நமக்கு தெரிவதில்லை.

கிடைக்கின்ற வாழ்க்கையை விட்டுவிட்டு இல்லாததை தேடினால் வருத்தம் தான் மிஞ்சும். இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல, இங்கிருந்து பார்க்கும் பொழுது அந்த வாழ்க்கை பெரிதாகவும், அங்கிருந்து பார்க்கும் பொழுது இதுவே பரவாயில்லை என்பது போலும் தோன்றிவிடும். அதற்காக வாழ்க்கையை சகித்துக் கொண்டு தான் வாழவேண்டும் என்று கூற வரவில்லை. எப்போதும் குறை கூறுவதை விட்டுவிட்டு, அவர்களிடம் இருக்கும் நிறைகளையும் எண்ணிப் பார்த்தால் பிரச்சனைக்கு இடமே இருக்காது.

sad-crying2

தம்பதியர்கள் மனம் ஒருமித்து வாழ சோமவார விரதத்தை 16 வாரங்கள் கடைபிடித்தால் நல்ல பலன் கிடைக்கும். சோமவாரம் என்பது திங்கள் கிழமையை குறிக்கிறது. 16 திங்கள் கிழமைகள் சிவபார்வதியை நினைந்து விரதமிருந்து பிரார்த்தனை செய்தால் எவ்வளவு மன கஷ்டங்களும் உங்களிடம் இருந்து சுலபமாக நீங்கி விடும்.

- Advertisement -

சோமவார விரதத்தை மேற்கொள்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் எந்த திங்கட் கிழமையிலும் துவங்கலாம். திங்கட்கிழமை அன்று அதிகாலையில் நீராடி மாலை வரை உபவாசம் இருந்து சிவபார்வதி பூஜைகள் மேற்கொள்ள வேண்டும். ரொம்பவே எளிமையான விரதமுறை தான் இது. ஆனால் பலனை பார்த்தால் அதிசயிக்கும் வண்ணம் பெரிதாகவே இருக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் சூழ்நிலைகளை இந்த விரதம் மேற்கொள்பவர்களுக்கு நிச்சயம் உருவாக்கித் தருவார்.

siva-parvathi

அன்றைய நாளில் சிவபெருமான் பார்வதி தேவியுடன் இணைந்த படத்திற்கு வில்வ அர்ச்சனை செய்து லிங்காஷ்டகம் படிக்கலாம். அல்லது சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்கு உரிய மந்திரங்களை ஜபிக்கலாம். முழுமையாக விரதம் இருக்க முடியாதவர்கள் நீர் ஆகாரத்தை உணவாக எடுத்துக் கொள்ளலாம். பழச்சாறுகள், பால், பழம் போன்றவற்றை உட்கொண்டு விரதம் மேற்கொள்ளலாம். வில்வ இலைகள் கிடைக்காதவர்கள் தோஷம் போக்கும் செவ்வரளி மலர்கள், சங்கு பூக்கள் அல்லது உங்கள் வீட்டில் பூக்கும் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்ய உகந்த மலர்கள் எதுவாயினும் அர்ச்சனை செய்ய பயன்படுத்தலாம்.

archanai-poo

நைவேத்தியமாக பழங்களையும் உங்களால் முடிந்த பாயாசம், சர்க்கரைப் பொங்கல் போன்ற ஏதாவது ஒரு நிவேதனத்தையும் படைக்கலாம். அன்றைய நாளில் சிவன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வரலாம். மாலை வரை சிவ ஸ்லோகம் மனதிற்குள் உச்சரித்து வரவேண்டும். பின்னர் மாலையில் விளக்கேற்றி தூப, தீப ஆரத்தி காண்பித்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம். இது போல் தொடர்ந்து 16 திங்கட்கிழமைகள் விரதம் மேற்கொண்டு சிவ பார்வதியை வணங்கினால் நிச்சயம் உங்களுடைய வேண்டுகோள்கள் நிறைவேறும். இந்த விரதத்தை நீங்கள் முடிப்பதற்குள் கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் உண்டாகும், அன்னோன்யம் அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே
இந்த இலையால் அர்ச்சனை செய்வது இவ்வளவு நன்மைகளா? இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.