இந்த இலையால் அர்ச்சனை செய்வது இவ்வளவு நன்மைகளா? இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!

sivan-nelli-tree
- Advertisement -

வீட்டில் அர்ச்சனை செய்யும் பொழுது பொதுவாக கடவுளுக்கு உகந்த இலைகளை கொண்டு அர்ச்சனை செய்வது மிகப் பெரிய பலன்களை தரும் என்பார்கள். ஒவ்வொரு கடவுளுக்கும் தனித்துவமான ஒவ்வொரு இலைகள் மற்றும் பூக்கள் அர்ச்சனைக்கு உகந்தவையாக கூறப்பட்டுள்ளது. ஆனால் பலருக்கும் இருக்கும் சந்தேகம் இந்த இலையால் கடவுளுக்கு அர்ச்சனை செய்யலாமா? செய்யக் கூடாதா? என்பது இருந்து வருகிறது. அது எந்த இலை? அதற்கான விடையைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கின்றோம்.

archanai-poo

பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு அலங்காரம் செய்யாமல் அர்ச்சனைகள் செய்யக்கூடாது என்பது ஆகம விதி. இதனை கட்டாயம் ஒவ்வொருவரும் தங்களுடைய வீடுகளில் கடைபிடிக்க வேண்டும். தூப, தீப ஆராதனை காட்டும் முன்பு உங்கள் வீட்டில் வளரும் செடிகளில் இருந்து புத்தம் புதிதாக அன்று பறித்த பூக்களையும், இலைகளையும் கொண்டு அர்ச்சனை செய்து வந்தால் வாழ்வில் சகல யோகங்கள் பெறலாம். அதிலும் குறிப்பாக இந்த இலையில் அர்ச்சனை செய்பவர்களுக்கு மிகச் சிறந்த பலன்கள் கிடைக்கும் என்பது முற்றிலும் உண்மையான கூற்று.

- Advertisement -

இந்த இலையால் வீட்டில் உள்ள தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்வதன் மூலம் வீட்டை எந்த துஷ்ட சக்திகளும் அணுகாது என்பார்கள். மகாலட்சுமியின் ஸ்வரூபமாகவே சிவபெருமான் கூறியுள்ள இந்த மரத்தின் இலைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. இந்த மரத்திலிருந்து ஒரே ஒரு கனியை தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் நொடிகள் அண்டாது என்பார்கள்.

சரி அது என்ன மரம்? என்பதை இப்போது பார்த்து விடுவோம். இந்த மரம் உங்கள் வீட்டில் இருந்தாலும் இருக்கலாம். அது புதிதாக வேறு ஒன்றும் இல்லைங்க! நம்ம எல்லோருக்கும் பிடித்தமான நெல்லிமரம் தான் அது. நெல்லி இலைகளால் அர்ச்சனை செய்து வந்தால் வீட்டில் பணக்கஷ்டம் ஏற்படாது. எவ்வளவு வறுமையில் இருந்தாலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தினமும் உங்களுக்கு இஷ்ட தெய்வமான ஏதாவது ஒரு சுவாமி படத்திற்கு நெல்லி இலைகளை கொண்டு அர்ச்சனை செய்து வாருங்கள்.

- Advertisement -

nelli-maram

நெல்லி இலையால் எல்லா விதமான தெய்வத்திற்கும் அர்ச்சனை செய்யலாம். நெல்லி மரத்தில் மகாலட்சுமி குடியிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. குபேரன் நெல்லி மரத்தை வளர்த்து தான் இழந்த தன் செல்வத்தை மீண்டும் பெற்றான் என்பது புராணம். அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்த நெல்லி இலைகளை அர்ச்சனைக்கு தாராளமாக பயன்படுத்துங்கள். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்கள்.

அர்ச்சனை செய்யும் போது தெய்வ படங்களுக்கு அழகாக மஞ்சள், குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். ஒரு சிலருக்கு வட்டமாக அழகாக வைக்க வராது. அவர்கள் காது குடைய வைத்திருக்கும் பஞ்சை கொண்டு வைத்துப் பாருங்கள். வட்டமாக பார்ப்பதற்கு அழகாக உங்களாலும் பொட்டு வைக்க முடியும்.

- Advertisement -

3-god-picture

சுவாமி படங்களை எப்பொழுதும் கண்ணாடி ஃபிரேம் போடப்பட்டவையாக வைத்திருப்பது மிகவும் நல்லது. இப்போது வரும் நவீன படங்களை தயவுசெய்து வாங்கி வைக்காதீர்கள். கண்ணாடி போட்ட தெய்வ படங்களை பூச்சி அரிக்காமல் பாதுகாக்க வேப்ப எண்ணெய்யை கொண்டு துடைத்து வரலாம்.

karpooram

அர்ச்சனை செய்யும் பொழுது ஆண் தெய்வங்களுக்கு எப்பொழுதும் தீபாராதனை கீழிருந்து மேலாகவும், பெண் தெய்வங்களுக்கு மேலிருந்து கீழாகவும் எடுப்பது மிகவும் நல்லது. பூஜையில் பயன்படுத்தப்படும் பூக்கள் மற்றும் இலைகள், அட்சதை, குங்குமம் போன்றவற்றை கைகள் அல்லது துணிகள் கொண்டு தான் சுத்தம் செய்ய வேண்டும். தவறியும் துடைப்பம் பயன்படுத்தி விடாதீர்கள். இது மிகப்பெரிய பாவமாக மாறிவிடும்.

இதையும் படிக்கலாமே
கட்டாயம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய, இதுவரை சொல்லப்படாத சில ஆன்மீக குறிப்புகள் உங்களுக்காக இதோ!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -