- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநாளை 18-06-2025 புதன்கிழமை தேய்பிறை அஷ்டமி திதி

நாளை 18-06-2025 புதன்கிழமை தேய்பிறை அஷ்டமி திதி

- Advertisement -

காலத்தால் வரக்கூடிய கஷ்டத்தை சரி செய்ய தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வழிபாடு செய்ய வேண்டும். இந்த உலகத்தையும் மக்களையும் காக்கும் கடவுள் காலபைரவர். கால பைரவரை வழிபாடு செய்ய உகந்த திதி அஷ்டமி திதி. இந்த மாதம் 18-6-2025 முதல் கிழமை காலை 10:59 மணி அளவில் தேய்பிறை அஷ்டமி திதி ஆனது பிறக்கவிருக்கிறது.

அதாவது நாளைய தினம் தேய்பிறை அஷ்டமி திதி. இந்த நாளில் அனைவரும் கால பைரவர் சன்னிதானத்திற்குச் சென்று பைரவருக்கு விளக்கு போட்டு வழிபாடு செய்ய வேண்டும். குறிப்பாக நாளைய தினம் நம்முடைய கஷ்டங்கள் விலக வைரவரை எப்படி வழிபாடு செய்யலாம். ஆன்மீகம் சார்ந்த சில பரிகாரங்கள் இந்த பதிவில் உங்களுக்காக.

- Advertisement -

ஜூன் மாத தேய்பிறை அஷ்டமி திதி 2025

தேய்பிறை அஷ்டமி திதியில், பைரவரை நினைத்து வழிபாடு செய்தால், வளர்பிறை அஷ்டமி திதியில் நம்முடைய முன்னேற்றங்கள் அளவில்லாமல் இருக்கும் என்பதுதான் இந்த வழிபாட்டிற்கு பின்னால் மறைந்திருக்கும் நம்பிக்கை. நாளை புதன் கிழமை. மாலை 6:30 மணிக்கு மேலாக வீட்டின் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று பைரவர் சன்னிதானத்தில் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

அஷ்டமி திதி வழிபாட்டை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு செய்வது சிறப்பு. இந்த மாதத்தின் அஷ்டமி திதி புதன்கிழமையில் வந்திருப்பதால் உங்கள் வீட்டில் குழந்தைகளுக்கு படிப்பில் ஏதேனும் தடை இருந்தாலும், அது சரியாக வேண்டும் என்று பைரவரை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். சீக்கிரம் நல்லது நடக்கும்.

- Advertisement -

உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் பைரவர் கோவிலுக்கு அபிஷேகத்திற்கு என்னென்ன பொருள் தேவை என்பதை அர்ச்சகர் இடம் கேட்டு உங்களால் இயன்ற அளவு அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்கலாம். குறிப்பாக சுத்தமான சந்தனம், சிவப்பு சந்தனம், பால் தயிர் இது போல பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம் நல்லது. மாலை பைரவருக்கு கட்டாயமாக ஏற்ற வேண்டிய தீபம் மிளகு தீபம்.

நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு இந்த தீபம் எப்படி போடுவது என்று தெரியும். இருந்தாலும் தெரியாதவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஒரு சிவப்பு நிற காட்டன் துணியில் 27 மிளகுகளை வைத்து சின்ன முடிச்சாக கட்டி நல்லெண்ணெய் ஊற்றி, இந்த மிளகு மூட்டையை போட்டு அப்படியே தீபம் ஏற்றி விட வேண்டும். அந்த மிளகு அந்த தீபத்தில் எரிந்து வெடிக்கத் துவங்கும்.

- Advertisement -

அதேபோல உங்களுடைய கடனும் கஷ்டமும் வெடித்து சிதறும் என்பது நம்பிக்கை. குறிப்பாக இந்த தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவருக்கு புனுகு வாங்கி தானமாக கொடுக்கலாம். முந்திரி பருப்பு மாலை கட்டி போடலாம். மாதுளம் பழம் முத்துக்களை உதிர்த்து பிரசாதமாக வைத்து அந்த பிரசாதத்தை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தானமாக கொடுக்கலாம். தயிர் சாதம் நெய்வேத்தியம் வைத்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம்.

மேலே சொன்ன விஷயத்தில் ஏதாவது ஒன்று உங்களால் செய்ய முடியும் என்றாலும் செய்யலாம். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். எதுவுமே செய்ய முடியாத சூழ்நிலையில் இருப்பவர்களும் இருப்பார்கள். அவர்கள் 10 ரூபாய்க்கு ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கி வைரவர் பாதத்தில் வைத்து, என்னுடைய கஷ்டங்கள் சீக்கிரம் என்னை விட்டு விலக வேண்டும் என்று மனம் உருகி பிரார்த்தனை செய்து அந்த பிஸ்கட் பாக்கெட்டை கொண்டு வந்து கோவிலுக்கு வெளியில் இருக்கும் பைரவர் வாகனமான நாய்களுக்கு உங்கள் கையால் போட்டு விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: கடன் கரைந்து போக தேய்பிறை சஷ்டி வழிபாடு

நிச்சயமாக நீங்கள் வேண்டியது அடுத்த 15 நாட்களில் நடந்தே தீரும். நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஆன்மீகம் சார்ந்த பதிவு நல்ல பலனை தரும் என்ற தகவலுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்