செவ்வாய் பகவானின் தாக்கம் இருக்கக்கூடிய ஒவ்வொரு நபருக்கும் பணம் தொடர்பான பிரச்சனைகள் என்பது இருக்கும். பிறரிடம் பணத்தை கொடுத்துவிட்டு அதை திரும்ப வாங்க முடியாமலும் கஷ்டப்படுவார்கள். பிறரிடம் இருந்து வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாமலும் கஷ்டப்படுவார்கள். மேலும் சொத்து விஷயங்களில் பிரச்சனைகளும் உண்டாகும். சொந்த வீடு கட்டும் அமைப்பும் இருக்காது. அதையும் மீறி சொந்த வீடு கட்டினாலும் அதில் வாழ்வதற்குரிய யோகமும் இருக்காது. இப்படி செவ்வாய் பகவானால் பலதரப்பட்ட பிரச்சனைகள் என்பது நமக்கு ஏற்படும். எப்பேற்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் செவ்வாய் பகவானால் ஏற்பட்ட பிரச்சனைகள் தீர்வதற்கு முருகப்பெருமானை நாம் சரணாகதி அடைய வேண்டும். அந்த வகையில் செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரும் தேய்பிறை சஷ்டி நாள் அன்று முருகப்பெருமானை வழிபாடு செய்யும்பொழுது எந்த பொருளை வைக்க வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
தேய்பிறை சஷ்டி வழிபாடு
ஒருவருடைய ஜாதகத்தில் நவகிரகங்களின் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கிறதோ அதற்கேற்றார் போல் தான் அவர்களுடைய வாழ்க்கையும் அமையும். எந்த கிரகத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறதோ, அந்த கிரகத்தை சரி செய்வதற்காக சில வழிபாடுகளையும் பரிகாரங்களையும் மேற்கொள்வோம். அந்த வகையில் செவ்வாய் பகவானால் ஏற்படக்கூடிய தாக்கத்தை குறைப்பதற்கு செவ்வாய்க்கிழமை வழிபாட்டை மேற்கொள்வோம். இந்த முறை செவ்வாய்க்கிழமையோடு முருகப்பெருமானுக்கு உகந்த சஷ்டி திதியும் வருவதால் அன்றைய தினம் நம் முருகப்பெருமானை வழிபாடு செய்யும்பொழுது இரட்டிப்பு பலன் நமக்கு கிடைக்கும்.
தேய்பிறை சஷ்டி வழிபாட்டை நாளைய தினம் மதியம் 12:45 மணிக்குள் நிறைவு செய்துவிட வேண்டும். அன்றைய தினம் காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து சிவப்பு நிற மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். பிறகு முருகப்பெருமானுக்கு முன்பாக செவ்வாய் பகவானுக்குரிய தானியமான துவரம் பருப்பை ஒரு கிண்ணத்தில் அல்லது அகல் விளக்கில் ஒரு கைப்பிடி அளவு வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் கடன் பிரச்சினை தீர வேண்டும் என்பதற்காக ஆறு எண்ணிக்கையில் மிளகை வைக்க வேண்டும்.
முருகப்பெருமானுக்கு ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைத்துவிட்டு தீபமேற்றி முருகப்பெருமானிடம் கடன் தொடர்பான பிரச்சனைகள் தீர வேண்டும் என்று முழு மனதோடு வேண்டிக் கொள்ள வேண்டும். கடைசியாக கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். அன்றைய தினத்தில் முருகப்பெருமானுக்குரிய கவசங்களை பாராயணம் செய்வது, 108 போற்றிகளை உச்சரித்து சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்வது கூடுதல் சிறப்பை தரும்.
இந்த முறையில் நாம் வழிபாடு செய்து முடித்த பிறகு அந்த முருகப்பெருமானுக்கு முன்பாக வைத்திருந்த துவரம் பருப்பையும் மிளகையும் எடுத்து அன்று இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக ஆறு மிளகையும் கையில் வைத்துக்கொண்டு குடும்ப உறுப்பினர்களை ஒன்றாக நிறுத்தி மூன்று முறை வலது புறமாகவும் மூன்று முறை இடது புறமாகவும் சுத்தி வீட்டிற்கு வெளியே ஏதாவது ஒரு இடத்தில் போட்டுவிட்டு திரும்பி பார்க்காமல் வந்து விட வேண்டும். மீதம் இருக்கக்கூடிய துவரம் பருப்பை ஓடுகின்ற நீரில் விடலாம் அல்லது பறவைகளுக்கு தானமாக வைக்கலாம் .
இதையும் படிக்கலாமே: நினைத்தது நடக்க ஆனி மாதம் கருடாழ்வார் வழிபாடு
இந்த முறையில் தேய்பிறை சஷ்டியில் செவ்வாய் பகவானுக்கு உகந்த பொருளையும், கடனை தீர்ப்பதற்கு உகந்த பொருளையும் ஒன்றாக சேர்த்து வைத்து முருகப் பெருமானை வழிபாடு செய்யும்பொழுது விரைவிலேயே கடன் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.