கடன் சுமையிலிருந்து, கஷ்டம் இல்லாமல் வெளிவர வேண்டும் என்றால் நாம் செய்ய வேண்டிய வழிபாடு முருகன் வழிபாடு. வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை முருகனை வழிபாடு செய்ய வேண்டும். மாதம் தோறும் வரக்கூடிய சஷ்டி, கிருத்திகை இது போன்ற தினங்களிலும் முருக பெருமானை மனதார நினைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
உங்களால் கோவிலுக்கு சென்று முருகப்பெருமான தரிசனம் செய்ய முடியவில்லை என்றாலும், வீட்டில் இருக்கும் முருகப்பெருமானது திரு உருவப்படத்திற்கு முன்பாக விளக்கேற்றி வழிபாடு செய்யும்போது, நிச்சயமாக கடன் தொல்லை படிப்படியாக குறையும். வருமானம் படிப்படியாக உயரும்.
தேய்பிறை சஷ்டி வேண்டுதல்
இன்று 19-1-2025 தேய்பிறை சஷ்டி திதியானது இருக்கிறது. சஷ்டி திதி வழிபாட்டை மாலை நேரத்தில் வீட்டில் செய்வது சிறப்பு. இன்று மாலை 6:00 மணிக்கு சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். பூஜை அறையில் விளக்கு ஏற்றிக் கொள்ளுங்கள். முருகனின் முன்பு ஏதாவது ஒரு நெய் வைத்தியம் வைத்து விடுங்கள். ஒரே ஒரு வெற்றிலை கொஞ்சம் பெருசாக இருக்கும் வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள்.
சுத்தமான சந்தனம் என்றால் முருகனுக்கு ரொம்பவும் ப்ரீத்தி. அந்த சுத்தமான சந்தன பொடியில் கொஞ்சமாக பன்னீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள். பன்னீர் வாசமும் முருகனுக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு தீக்குச்சியை எடுத்து அந்த சந்தனத்தில் தொட்டு இந்த வெற்றிலையின் மேல் “ஓம் சரவணபவ” என்று எழுதி விடுங்கள்.
வெற்றிலையின் மேல் சந்தனத்தில் எழுதி, கொஞ்ச நேரம் அதை காயவிட்டால் அழகாக நம் கண்களுக்கு தெரியும். அந்த சரவணபவ மந்திரத்தின் மேலே இரண்டு செவ்வரளி பூக்களை வைத்து இந்த வெற்றிலையை வீட்டில் இருக்கும் முருகனது திருவுருவப்படத்தின் பாதத்தில் வைத்து விடுங்கள்.
கொஞ்சமாக செவ்வரளி பூக்களை அந்த வெற்றிலையின் மேல் போட்டு முருகனின் மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்து கொண்டு, என்னுடைய கடன் சுமை முழுவதும் குறைய வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு, தீப தூவ ஆராதனைகள் காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொண்டால், நிச்சயமாக ஏதாவது ஒரு ரூபத்தில் இந்த தை மாதம் முடிவதற்குள் உங்கள் பண பிரச்சினை சரியாகிவிடும்.
இதையும் படிக்கலாமே: நல்ல வேலை கிடைக்க சஷ்டி வழிபாடு
இது நிதர்சனமான உண்மை. நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்து பாருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். தை மாதத்தில் வந்திருக்கும் ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் இந்த தேய்பிறை சஷ்டி நாளை யாரும் தவற விடாதீர்கள். ஏதாவது ஒரு ரூபத்தில் முருகர் வந்து உங்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பார். நம்பிக்கை உள்ளவர்களுக்கு, முருக பக்தர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.