செவ்வாய்க்கிழமை என்றாலே அது கடன் சுமையை குறைக்க உதவ கூடிய மிக சக்தி வாய்ந்த நாள். அந்த நாளில் சங்கடத்தை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி வந்திருக்கிறது. நாளைய தினம் 19.11.2024 ஆம் தேதி சங்கடஹர சதுர்த்தி. உங்களுடைய கடன் சுமை தீர வேண்டும் என்று நாளைய தினம் இந்த பரிகாரத்தை எவர் ஒருவர் செய்கிறீர்களோ, அவர்களுக்கு கடன் சுமை நிச்சயம் தீரும். கடன் சங்கடத்தை குறைக்க விநாயகர் அருள் புரிவார்.
நாளைய தினம் அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்த பத்தமாக குளித்து வாசல் தெளித்து கோலம் போட்டு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி விரதத்தை துவங்கவும். உபவாசம் இருந்து விரதம் மேற்கொள்ளலாம், ஆரோக்கியத்தோடு இருப்பவர்கள். முடியவில்லை என்றால் பால் பழம் சாப்பிட்டு விரதம் இருந்து கொள்ளுங்கள். அதுவும் முடியாத என்பவர்கள் உங்களுக்கு தேவையான உணவை சாப்பிட்டு விரதம் இருந்து கொள்ளுங்கள். நாளை மாலை சந்திர உதயத்திற்கு பிறகு பிள்ளையார் கோவிலுக்கு செல்ல வேண்டும்.
விநாயகருக்கு உங்கள் கையால் அருகம்புல் மாலையை கட்டி போடுவது ரொம்ப ரொம்ப சிறப்பு. அருகம்புல்லை உதிரியாக எடுத்து நீங்களே பச்சை நூலில் கட்டி மாலையாக அணிவிக்கலாம். முடியாது என்பவர்கள் மாலையாகவே கட்டி கடைகளில் விற்கிறார்கள். அதை வாங்கி விநாயகருக்கு போட்டு விடுங்கள். விநாயகர் பாதத்தில் இருந்தோ, விநாயகர் தலையின் மீது இருந்தோ, கொஞ்சம் அருகம்புல்லை திரும்பவும் கேளுங்கள்.
ஏற்கனவே வேறு ஒருவர் விநாயகருக்கு அருகம்புல் வாங்கி கொடுத்திருப்பாங்க இல்லையா. அதிலிருந்து பிரசாதமாக நீங்கள் கொஞ்சம் அருகம்புல்லை கையில் வாங்கிக் கொண்டு, விநாயகருக்கு தோப்புக்கரணம் போட்டு பிள்ளையார் கொட்டு வைத்து விநாயகரை 3 முறை வலம் வந்து விநாயகருக்கு ஒரு சிதறு தேங்காய் உடைத்து விட்டு, வீடு திரும்ப வேண்டும். இப்போது உங்கள் கையில் விநாயகர் பிரசாதம் அருகம்புல் இருக்கிறது. இதைக் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து விடுங்கள்.
அந்த அருகம்புல்லை செவ்வாய்க்கிழமை இரவு, ஒரு சொம்பு தண்ணீரில் போட வேண்டும். சின்ன சின்னதாக வெட்டி கூட போடலாம் தவறு ஒன்றும் கிடையாது. அந்த அருகம்புல்லின் சாறு, அந்த தண்ணீரோடு கலக்க வேண்டும். கொஞ்சம் கையால் கசக்கினால் கூட சார் உங்களுக்கு கிடைக்கும் அல்லது லேசாக இடித்துக் கூட அந்த அருகம்புல்லை தண்ணீரில் போட்டு நன்றாக ஊற வைத்து விடுங்கள்.
செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் அந்த தண்ணீரில் அருகம்புல் ஊறட்டும். பிறகு புதன்கிழமை காலை குளித்து முடித்துவிட்டு அந்த தண்ணீரை வடிகட்டி, அந்த தண்ணீரை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பச்சை நிற துணியை நனைத்து நிழலிலேயே காய வைத்துக் கொள்ளவும். இந்த பச்சை நிற துணியில் கொஞ்சமாக வெந்தயம் வைக்கவும்.
அருகம்புல் தீர்த்தத்தில் ஊறிய பச்சை நிற துணியில், 1 ஸ்பூன் வெந்தயம் வைத்து, முடிச்சாக கட்டி புதன்கிழமை அன்று வரக்கூடிய புதன் ஹோலையில், இதை பணம் வைக்கும் பட்டியில் வைத்தால், உங்கள் கடன் சுமை தீரும். நீங்கள் இந்த முடிச்சை வைத்த இடத்தில் நிறைய பணம் சேரும் என்பது நம்பிக்கை.
இதேபோல இன்னொரு முடிச்சை தயார் செய்து தொழில் செய்யும் இடத்திலும் கல்லா பட்டியில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த இடத்தில் வியாபாரம் அமோகமாக நடக்கும். நீங்கள் அலுவலகத்தில் வேலை செய்கிறீர்கள் என்றால் ஒரு முடிச்சை தயார் செய்து கொண்டு போய் உங்களுடைய தனி அறை, ட்ரா ஏதாவது இருந்தால் அதிலும் வைக்கலாம். வேலை சிறப்பாக நடக்கும். வேலையிலிருந்தும் வருமானம் அதிகரிக்கும். இதுபோல இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பாருங்கள்.
இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் சிவ மந்திரம்
வருமானம் தானாக உயர்வதை உணருவீர்கள். கடன் சுமை தானாக குறைந்துவிடும். விக்ணங்களை தீர்க்கும் விநாயகரை, புதன் பகவானையும் ஒருசேர சேர்த்து செய்யக்கூடிய பரிகாரம் இது. நம்பிக்கை இருந்தால் செய்து பாருங்கள். நிச்சயம் நல்லது மட்டுமே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.