- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தீர்க்கும் சிவ மந்திரம்

கடன் தீர்க்கும் சிவ மந்திரம்

- Advertisement -

இன்று கார்த்திகை சோமவாரம், முதல் வாரம். கார்த்திகை மாதத்தில் வந்திருக்கும் முதல் வார திங்கட்கிழமை. மற்ற நாட்களில் சிவனை வழிபாடு செய்யாதவர்கள் கூட, இன்று சிவன் கோவிலுக்கு சென்று பின் சொல்லக்கூடிய இந்த வழிபாட்டை செய்தால் கோடி புண்ணியம். இன்று குறிப்பாக சிவனை 11 முறை வலம் வரும்போது, இந்த ஒரே ஒரு மந்திரத்தை மட்டும் உங்கள் மனதிற்குள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருங்கள்.

மந்திரத்தை கணக்கு வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. 11 முறை வலம் வருவதை மட்டும் கணக்கு வைத்துக் கொண்டால் போதும். உங்களுடைய கடன் கஷ்டம் அடுத்த கார்த்திகை மாதம் வருவதற்குள் நிச்சயம் தீரும் என்பது தான் இந்த பரிகாரத்தில் இருக்கும் நம்பிக்கை.

- Advertisement -

11 புஷ்பங்களை கணக்குக்காக எடுத்துச் செல்லலாம், அல்லது 11 துவரம் பருப்பு எடுத்துச் செல்லலாம். ஒரு முறை கோவிலை வளம் வந்தவுடன், அங்கு இருக்கும் நந்தியின் முன்பு ஒவ்வொரு பூ வைக்கும் போது உங்களுக்கு கணக்கு சரியாக வரும். 11 வில்வ இலைகளை எடுத்துச் சென்றாலும் தவறு கிடையாது. கோவிலை சுற்றி வரும் எண்ணிக்கை தவறாது.

அப்போதுதான் மந்திரத்தில் உங்களுடைய கவனத்தை செலுத்த முடியும். இன்று மாலை வரை உங்களுக்கு நேரம் இருக்கிறது. எப்போது முடிகிறதோ சிவன் கோவிலுக்கு செல்லுங்கள். இன்று சங்காபிஷேகம் நடக்கும். பெரும்பாலான சிவன் கோவில்கள் இன்று நிறைய நேரம் திறந்திருக்கும். ஆகவே பரிகாரம் செய்வது சிரமம் கிடையாது. கோவிலுக்கு செல்லும்போது கட்டாயம் குடும்பத்தோடு செல்லக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் குடும்பத்தோடு செல்லுங்கள்.

- Advertisement -

வீட்டில் இருக்கும் பெண்கள் ஆண்கள் யார் வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். கோவிலுக்கு செல்லும்போது கட்டாயமாக ஈசனுக்கு வில்வ இலைகளை வாங்கிச் செல்லுங்கள். உங்களால் முடிந்த புஷ்பங்கள் பழம் எது கிடைத்தாலும் வாங்கிச் செல்லலாம் தவறு கிடையாது.

கடன் தீர்க்கும் சிவ மந்திரம் ‘சிங்வங் நமசிவாய’ இதுதான் அந்த ஒரு வரி மந்திரம். இந்த ஒரு வார்த்தை உங்கள் ஒட்டுமொத்த கடனையும் தீர்த்து வைக்கும். சாதாரண நாட்களில் இந்த மந்திரத்தை சொன்னாலே அத்தனை பலன். இன்று இந்த மந்திரத்தை நீங்கள் ஒரு முறை உச்சரித்தால் 100 முறை உச்சரித்ததற்கு சமம். அப்போது கோவிலை 11 முறை வலம் வரும்போது கிட்டத்தட்ட எத்தனை முறை இந்த மந்திரத்தை நீங்கள் உச்சரிப்பீர்கள்.

- Advertisement -

மனதிற்குள் கடன் சுமை குறைய வேண்டும் என்ற நம்பிக்கை ஆழமாக இருக்க வேண்டும். சிவபெருமானை முழுமையாக நம்பி, இந்த ஒரு வரி மந்திரத்தை மட்டும் சொல்லி அந்த சிவன் கோவிலை 11 முறை வலம் வந்தால் எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும், நீண்ட நாட்களாக திருப்பிக் கொடுக்கவே முடியாமல் தவித்து வரும் கடனாக இருந்தாலும் அந்த கடன் பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: கார்த்திகை மாத சிறப்பு வழிபாடு

இந்த பரிகாரத்தை செய்த நாள் முதல் கடனை திருப்பி அடைக்க உண்டான முயற்சிகளை முழுமூச்சோடு நீங்கள் பின்பற்ற வேண்டும். சிவன் கோவிலுக்கு சென்று வழிபாடை செய்து மந்திரத்தை சொல்லிவிட்டு, முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்றால், நிச்சயம் பலன் இருக்காது. நம்பிக்கையில்லாமல் பரிகாரத்தை செய்வதன் மூலமும் பலன் இல்லை, நம்பிக்கையும் உங்கள் உழைப்பும் சேரும்போது, இந்த மந்திரமும் பரிகாரமும் பல மடங்கு வெற்றியை தரும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்