- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval2-2-2025 வளர்பிறை சதுர்த்தி திதி வழிபாடு

2-2-2025 வளர்பிறை சதுர்த்தி திதி வழிபாடு

- Advertisement -

பொதுவாகவே சாதாரணமாக வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று விநாயகரை வழிபாடு செய்தால், வியாபாரம், தொழில், வேளையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை. இந்த ஞாயிற்றுக்கிழமை திதியோடு சதுர்த்தி திதியும் இணைந்து வருகிறது. அமாவாசை முடிந்து வரக்கூடிய இந்த சதுர்த்தி திதி வளர்பிறை சதுர்த்தி திதி.

தேய்பிறையில் வரக்கூடிய சதுர்த்தி திதியை தான், சங்கடஹர சதுர்த்தியாக வழிபாடு செய்வோம். சரி நாளைய தினம் வரவிருக்கும் ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதியில் விநாயகரை எப்படி வழிபாடு செய்தால் செல்வ வளத்தில் உயர்ந்த நிலைக்குச் செல்லலாம். வேலையில் இருக்கும் பிரச்சனைகள் சரியாக, வியாபாரத்தில் இருக்கும் தடைகள் விலக, சொல்ல வேண்டிய மந்திரம் என்ன ஆன்மீகம் சார்ந்த பதிவுகளை தொடர்ந்து படிக்க தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

சதுர்த்தி திதி விநாயகர் வழிபாடு மற்றும் மந்திரம்

வாரம் தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்வது ரொம்ப ரொம்ப நல்லது. நாளைய தினம் சதுர்த்தி திதியும் சேர்ந்து இருக்கிறது. நாளை காலை எழுந்து  சுத்தபத்தமாக குளித்து முடித்துவிட்டு, சூரிய நமஸ்காரம் செய்து விடுங்கள். ஞாயிறு அன்று இந்த சூரிய நமஸ்காரம் செய்வது உங்கள் வேலை தொழிலில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை குறைக்கும்.

அடுத்தது விநாயகர் வழிபாடு. காலையிலேயே பூஜை அறையில் விளக்கு ஏற்றி இந்த வழிபாட்டை வீட்டில் இருந்தபடியே செய்யலாம். வீட்டில் இருக்கும் விநாயகருக்கு அருகம்புல் சாத்தி, பின் சொல்லக்கூடிய மந்திரத்தை சொல்லிவிடலாம். உங்களால் முடியும் வீட்டு பக்கத்தை விநாயகர் கோவில் இருக்கிறது, அரசமரத்தடி விநாயகர் இருக்கிறார் என்றால் அந்த விநாயகரை தேடிச் செல்லுங்கள். விநாயகருக்கு செம்பருத்தி பூ, அல்லது அருகம்புல் வைத்து அந்த விநாயகருக்கு முன்பாக அமர்ந்து இந்த மந்திரத்தை 108 முறை சொல்வது ரொம்ப ரொம்ப சிறப்பு. காலை நேரம் வழிபாட்டை செய்ய முடியாதவர்கள் மாலை இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

- Advertisement -

செல்வ வளம் தரும் சக்தி மிக்க மகா கணபதி மந்திரம்.

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம் கணபதயே வர வரத
சர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா.

இந்த மந்திரம் எங்களுக்கு உச்சரிக்க வராது. எங்களுக்கு எழுத படிக்க தெரியாது இதை உச்சரிப்பதில் சிரமம் இருப்பவர்கள், “ஓம் மஹா செல்வ கணபதியே நமஹ” என்ற இந்த மந்திரத்தை 108 முறை சொன்னாலும் நிச்சயம் உங்கள் பண பிரச்சினைகள் தீரும். வருமானத்தில் இருக்கும் தடைகள் விலகும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

- Advertisement -

விநாயகருக்கு அருகம்புல்லால் அர்ச்சனை செய்து கொண்டே இந்த மந்திரத்தை சொல்லுங்கள். விநாயகர் மனம் குளிர்ந்து நீங்கள் கேட்ட வரங்களை எல்லாம் வாரி வாரி கொடுத்து விடுவார். எதுவுமே இல்லை என்றாலும் ஒரு சிறு மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து இந்த மந்திரத்தை சொல்பவர்களுக்கும் நீங்கள் வேண்டிய வரங்கள் நிறைவோடு கிடைக்கும்.

விநாயகர் உகந்த தீபம் என்றால் அது தேங்காய் எண்ணெய் தீபம் தான். இரண்டு மண் அகல் விளக்குகளில் தேங்காய் எண்ணெயை ஊற்றி தீபம் ஏற்றி இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் போதும். எந்த ஒரு நல்ல காரியம் விரைவில் நடக்க வேண்டும் என்றாலும் அந்த நல்லதை நடத்திக் காட்டக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு இருக்கு. அரச மரத்தடி விநாயகர் கோவிலுக்கு சென்றால், அந்த அரச மரத்தை சுற்றி கொஞ்சம் அரிசி மாவு வெல்லத்தை தூவி விட்டு வரவும்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர செய்யும் தானம்

உங்களால் முடிந்தால் இரண்டு பேருக்கு நாளைய தினம் அன்னதானமும் செய்யலாம். நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்