- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval2-2-2025 வேண்டுதல் நிறைவேற பரிகாரம்

2-2-2025 வேண்டுதல் நிறைவேற பரிகாரம்

- Advertisement -

தொடர்ந்து இந்த பிரபஞ்சமானது நமக்கு அதிசக்தி வாய்ந்த நாட்களை கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது. அந்த வரிசையில் 2 என்று சொல்லக்கூடிய ஏஞ்சல் நம்பரை அதிகமாக கொண்டுள்ள நாள் தான் நாளைய தினம். 2-2-2025 மொத்தமாக நான்கு இரண்டுகள் ஒன்று சேர்ந்து வந்திருக்கக்கூடிய இந்த நாளை நாம் தவற விடக்கூடாது. அது மட்டும் இல்லாமல் நாளைய தினம் சூரிய பகவானுக்கு உரிய ஞாயிற்றுக்கிழமை. விநாயகருக்கு உரிய சத்துருத்தி திதி இருக்கிறது.

நாளைய தினம் சியாமளா நவராத்திரியின் நான்காவதுவது நாள். வசந்த பஞ்சமி திதியும் இருக்கிறது. இந்த பஞ்சமி திதி வாராஹிக்கு உரிய நாள். இப்படி பல விசேஷங்களை உள்ளடக்கி இருக்கும் இந்த நாளில் பிரபஞ்சத்திடம் நாம் வைக்கும் வேண்டுதல் கூடிய விரைவில் நடக்கும். கேட்கக்கூடிய பிரார்த்தனையில் இரட்டிப்பு மடங்கு பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

2-2-2025 ஏஞ்சல் எண் பரிகாரம்

நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 02:02 மணிக்கு இந்த வேண்டுதலை பிரபஞ்சத்திடம் வைக்கலாம். காலை நேரத்தை தவறவிட்டவர்கள். ஞாயிற்றுக்கிழமை மதியம் வரக் கூடிய 02:02 மணிக்கு இந்த பிரபஞ்சத்திடம் வேண்டுதலை நீங்கள் வைக்கலாம். இந்த நேரம் உங்களுக்கு நீங்கள் கேட்ட வரங்களை எல்லாம் கொடுக்கப் போகிறது. தவறவிடாதீர்கள். எப்படி பிரபஞ்சத்திடம் வேண்டுதலை வைப்பது. ஒரு சின்ன எளிய ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் இந்த பதிவில் உங்களுக்காக.

நாளை, மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த நேரத்தில் பூஜை அறையில், 2 விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும். எந்த விளக்கமாக இருந்தாலும் சரி, இரண்டு தீபச்சுடர் எரியும்படி பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு வெள்ளை காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மஞ்சள் நான்கு பக்கமும் தடவி விட்டு, சாதாரணமாக வீட்டில் இருக்கும் ஒரு பேனாவை எடுத்து, உங்களுடைய வேண்டுதலை அந்த காகிதத்தில் 22 முறை எழுத வேண்டும்.

- Advertisement -

பிறகு இந்த வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக அந்த காகிதத்தில் உங்களது குலதெய்வத்தின் பெயரை 22 முறை எழுதி விடுங்கள். நீங்கள் அந்த பேப்பரில் எழுதி இருக்கும் வேண்டுதல் கூடிய விரைவில் நடக்க வேண்டும் என்று பிரபஞ்சத்திடம் சொல்லுங்கள். நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இந்த பேப்பரை மடித்து குலதெய்வத்தின் திருவுருவப்படத்திற்குப் பின்புறம் வைக்கலாம்.

அல்லது ஒரு நோட்டு புத்தகத்தில் வைத்து அலமாரியில் வைத்துக் கொள்ளலாம். அந்த வேண்டுதல் நிறைவேற தேவையான முயற்சிகளை நீங்கள் மேற்கொண்டால், நடக்காத காரியங்கள் கூட 22 நாட்களில் நடந்து முடியும் என்பது நம்பிக்கை. நீங்கள் நினைத்த நல்ல காரியம் நடந்து முடிந்தவுடன் அந்த பேப்பரை எடுத்து கிழித்து மண் பாங்கான இடத்தில் போட்டு விடவும். இவ்வளவுதான் பரிகாரம்.

- Advertisement -

எப்படிப்பட்ட வேண்டுதல் வைக்கலாம். உங்களுக்கு முதலில் நடக்க வேண்டிய ஒரே ஒரு வேண்டுதலை மட்டும், ஒரு வரியில் எழுத வேண்டும். திருமணம் நடக்க வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும், கழுத்தை நெரிக்கும் குறிப்பிட்ட இந்த கடன் அடைய வேண்டும், யாரிடம் கடன் வாங்கினீர்கள். அந்த நபரின் பெயரை எழுதி அந்தத் தொகையை எழுதி, அந்த கடன் அடைய வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கலாம். தவறு கிடையாது உங்கள் விருப்பம் போல வார்த்தைகளை போட்டு எழுதலாம். கூடுமானவரை சின்ன வரியாக எழுத பாருங்கள்.

இத்தனை நாட்களுக்குள் இவ்வளவு பணம் தேவை தொழிலில் அதிக லாபம் தேவை புதிய தொழில் துவங்க வேண்டும் மாணவர்களாக இருந்தால் நன்றாக படிக்க வேண்டும், குறிப்பிட்ட இந்த காலேஜில் சீட்டு கிடைக்க வேண்டும், வரப்போகும் பொது தேர்வில் நான் இத்தனை மதிப்பெண்கள் எடுக்க வேண்டும், என்று உங்கள் விருப்பம் போல எழுதலாம். எந்த தவறும் கிடையாது. சில பேருக்கு அவர்களிடம் இருக்கும் கெட்ட பழக்கம் நன்றாக தெரியும்.

இதையும் படிக்கலாமே: அடகு வைத்த நகை வீட்டு பத்திரம் மீட்க பரிகாரம்

அந்த கெட்டப்பழக்கத்தை விட முடியாமல் தவித்து வருவார்கள். குறிப்பிட்ட அந்த கெட்ட பழக்கம் என்னை விட்டு விலக வேண்டும் என்றும் பிரார்த்தனை வைத்துக் கொள்ளலாம். இது ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் சொல்லக்கூடிய பரிகாரம்தான். ஆனால் இந்த நாளுக்கு என்று ஒரு சக்தி இருக்கிறது. அந்த சக்தியின் மீது ஒரு முழு நம்பிக்கையை வைத்து இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு நிச்சயம் 22 நாட்களில் அதற்கு உண்டான பலனை அந்த இறைவன் கொடுப்பான் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்