- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅடகு வைத்த நகை வீட்டு பத்திரம் மீட்க பரிகாரம்

அடகு வைத்த நகை வீட்டு பத்திரம் மீட்க பரிகாரம்

- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் ஒருவர் சம்பாதித்து அதில் மிச்சம் பிடிப்பதே பெரும் பாடு. அதிலும் பாடுபட்டு சம்பாதித்து சேர்த்த நகையோ அல்லது நிலமோ அவசர தேவைக்காக அடமானம் வைப்பதென்றால் அது எந்த அளவிற்கு மனவேதனையை ஏற்படுத்தும் என்பதை சொல்லி தெரிய தேவையில்லை. அப்படி ஒரு சூழ்நிலையில் வைத்த பிறகு அது திரும்ப நமக்கு வருமா? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. இனி அந்த கவலை வேண்டாம் நகை அல்லது பத்திரம் அடமானம் வைக்கும் போது இந்த எளிய பரிகாரத்தை செய்தால் போதும் நிச்சயம் அது நம்மிடம் வந்து சேரும் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

நகைப் பத்திரம் அடமானத்திலிருந்து மீட்க பரிகாரம்

முதலில் நகையோ பத்திரமோ அடமானம் வைப்பதற்கு முன்பாக பலமுறை யோசிக்க வேண்டும். அது வைத்தால் தான் அந்த பிரச்சனையை சரி செய்ய முடியுமா? என்பதை சிந்திக்க வேண்டும். பெரும்பாலும் யாரும் அவசிய காரியம் இல்லாமல் இதை செய்யப் போவதில்லை இருந்தாலும், ஒரு சில நேரங்களில் நாம் வைப்பது நம்மிடம் திரும்ப வராமல் போவதற்கான சூழ்நிலை அமைவதே இப்படி சொல்வதற்கான காரணம்.

- Advertisement -

ஏனெனில் நாம் நகை அடமானம் வைக்கும் போது குரு கிரகம் நம்முடைய ஜாதகத்தில் எந்த இடத்தில் உள்ளது நாம் நகை வைத்தால் அது திரும்ப வருமா என்பதை ஒரு முறை பார்த்த பின் தான் வைக்க வேண்டும். அதைப்போல நிலம் வீடு சார்ந்தவற்றிற்கு உகந்த தெய்வம் செவ்வாய் அந்த செவ்வாய் கிரகம் நம்முடைய ஜாதகத்தில் எந்த இடத்தில் உள்ளது என்பதை பத்திரம் அடகு வைக்கும் பொழுது பார்க்க வேண்டும் என்று ஜாதகரீதியாக சொல்லப்படுகிறது.

எங்களுக்கு இதையெல்லாம் தெரியாது யாரிடமும் கேட்கவும் முடியாது அல்லது அதை யோசிப்பதற்கான நேரம் கூட இல்லாமல் உடனே வைக்க வேண்டும். அப்படியான சூழ்நிலையில் உள்ளவர்கள் இந்த எளிய பரிகாரங்களை செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. முதலில் தங்க நகைகளை அடமானம் வைக்கும் போது செய்ய வேண்டியவற்றை பார்க்கலாம்.

- Advertisement -

நீங்கள் எந்த நகையை அடகு வைக்க போகிறீர்களோ அந்த நகையை அடகு வைப்பதற்கு முன்பாக சிறிதளவு பசும்பாலில் தொட்டு எடுத்த பிறகு அடமானம் வைக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இதற்கு காய்ச்சாத பசும்பாலை ஒரு டம்ளரில் எடுத்துக் கொள்ள வேண்டும் அந்தப் பாலை நீங்கள் வைக்கும் நகை மீது லேசாக தெரிந்து சிறிது நேரம் பூஜை அறையில் வைத்து விடுங்கள். நகையை பூஜை அறையில் இருந்து எடுக்கும் பொழுது இதை மீண்டும் என்னிடம் வந்து சேர வேண்டும் என்று உங்கள் குலதெய்வத்திடம் மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு வைக்கும் நகை நிச்சயம் உங்களிடம் வந்து சேரும் என்று சொல்லப்படுகிறது.

அடுத்து நிலத்திற்கான பத்திரத்தை அடமானம் வைக்கும் பொழுது செய்ய வேண்டிவற்றை பார்க்கலாம் நீங்கள் எந்த நிலத்திற்கான பத்திரத்தை வைக்கிறீர்களோ அந்த நிலத்திலிருந்து சிறிதளவு மண்ணை முதலில் எடுக்க வேண்டும் அந்த மண்ணை ஒரு துணியில் வைத்து நன்றாக கட்டி அதை முருகப்பெருமான் படத்திற்கு முன்பாக வைக்க வேண்டும். அதன் பின் ஒரு தீபம் ஏற்றி வைத்து இந்த பத்திரத்தை என்னுடைய சூழ்நிலையின் காரணமாக அடமானம் வைக்கிறேன் இதை மீண்டும் என்னிடம் கொண்டு வந்து சேர்த்துவிடு என்று கந்தனிடம் மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு வைக்கும் பத்திரம் நிச்சயம் உங்கள் இல்லம் வந்து சேரும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் நிலத்திற்கான தெய்வம் செவ்வாய் கிரகமாக இருந்தாலும் அந்த கிரகத்திற்குரிய அதி தேவதையாக விளங்கக்கூடிய தெய்வம் முருகப்பெருமான்தான். ஆகையால் முருகப்பெருமானை வணங்கி இந்த முறையில் வைக்கும் பத்திரமானது உங்கள் வீடு தேடி நிச்சயம் வரும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:கஷ்டங்களை நீக்கும் கால பைரவர் வழிபாடு

முதலில் இது போல நகையோ பத்திரமோ வைக்கும் முன்பு யோசித்து செய்வதுபோல வைத்தபிறகு அதை திரும்ப கொண்டு வருவதற்கான முயற்சியை நாம் தொடர வேண்டும். இறைவனை வேண்டி வைத்து விட்டால் அது நிச்சயம் நம்மிடம் வந்து விடும் என்று நாம் எதையும் செய்யாமல் இந்த பரிகாரத்தை மட்டும் செய்து கொண்டு இருந்தோமானால் பலன் இருக்காது. ஆகையால் நகையும் பணமும் அடமானம் வைத்து எவ்வளவு முயற்சி செய்தும் திரும்பப் பெற முடியாமல் இழந்தவர்கள் பலர். இப்படி முயற்சி செய்தும் பலன் இல்லாமல் போவதற்கு காரணம் நம்முடைய கிரக சூழ்நிலைகளும் நேரங்களும் தான் அதை சரி செய்வதற்கான பரிகாரம்தான் இது இதை கவனத்தில் வைத்துக் கொண்டு இந்த பரிகார முறையில் நம்பிக்கையும் இருந்தால் பின்பற்றலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்