காலையில் எழுந்ததும் சமையல் வேலையில் முழ்கும் பெண்களுக்கு எத்தனை கைகள் இருந்தாலும் பத்தாது. வீட்டில் அவ்வளவு வேலைகள் இருக்கும். அந்த கொஞ்ச நேரத்திற்குள் காலை, மதியம் என இரண்டு நேரத்திற்கும் சமையல் செய்து, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது, வீட்டில் உள்ளவர்கள் வேலைக்கு அனுப்புவது, இதில் வேலைக்கு செல்பவர்கள் நிலைமை இன்னும் கொடுமை அவர்களும் வேலைக்கு கிளம்பி, சொல்லும் போதே கொஞ்சம் மூச்சு வாங்கத்தான் செய்கிறது கிளம்புபவர்களுக்கு எவ்வளவு கடினமாக இருக்கும். இந்த நேரத்தில் எவ்வளவு சிம்பிளாக செய்ய முடியுமோ அவ்வளவு ஈஸியாக சமையல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசிப்பவர்களுக்கு தான் இந்த சட்னி ரெசிபி.
இந்த சட்னி அரைக்க அதிக பொருட்கள் கூட தேவை படாது, வெறும் நாலு பொருள் இருந்தாலே போதும். வாங்க இந்த சட்னியை எப்படி செய்றதுன்னு பாக்கலாம்.
முதலில் அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து பொரிய விடுங்கள். அதன் பிறகு ஒரு கொத்து கருவேப்பிலை, 4 காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாக வறுபட்டதும் 1 டீஸ்பூன் உளுந்து, 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டையும் சேர்த்து பிறகு லேசாக சிவந்ததும் அடுப்பை அனைத்து வறுத்ததை அப்படியே ஆற விடுங்கள்.
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் அதில் 2 டேபிள் ஸ்பூன் உடைச்ச கடலை, 2 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை, கால் டீஸ்பூன் உப்பு, கொஞ்சமாக புளி இத்துடன் நீங்கள் வறுத்து வைத்த பருப்பு, கடுகு இவைகளை சேர்த்து கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அரைத்து எடுத்த சட்னியை ஒரு பவுலில் மாற்றி ஊற்றிக் கொள்ளுங்கள் அவ்வளவு தான் சட்னி தயார். இதற்கு மேல் உங்களுக்கு நேரம் இருந்தால் ஒரு தாளிப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் நாம் முதலில் வறுத்த கடுகு உளுத்தம் பருப்பு அதையே கொஞ்சம் நிறுத்தி கடைசியில் இதற்கு மேல் சேர்த்துக் கொள்ளலாம்.
இட்லி, தோசை, சப்பாத்தி, ஏன் உப்புமா இப்படி ஏதுவா இருந்தாலும் இந்த சட்னி இருந்த போதும் ஒரு பிடி பிடித்து விடலாம். இந்த சட்னி ரெசிபியை மட்டும் நீங்க தெரிந்து வைத்துக் கொண்டால் போதும் சமையல் வேலையை சட்டுயென்று முடித்து விட்டு சமையல் அறையிலிருந்து வெளியில் வந்து விடலாம். இரண்டு நிமிடத்திற்கு மேல் இந்த சட்னி அறைக்கு வேலையே இல்லை. இந்த ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.