அரக்க பறக்க காலையில் எழுந்ததும் இட்லி, தோசைக்கு என்ன சட்னி வைப்பது? என்று சிந்திக்கும் பெண்களுக்கு இந்த ஒரு விஷயம் தெரிந்தால் இனி அடிக்கடி இதைத் தான் செய்வீர்கள். ரொம்பவே சுலபமாக செய்யக் கூடிய இந்த சாம்பாருக்கு மூன்று பொருட்கள் இருந்தாலே போதும். அது எப்படி மூன்றே பொருட்களை வைத்து சாம்பார் செய்ய முடியும்? வாருங்கள் அந்த ரகசியத்தை இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
குழந்தைகளை வேலைக்கு மற்றும் பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்கள் காலையிலேயே எழுந்து அவசர அவசரமாக சமையல் செய்ய வேண்டி இருக்கும். நேரம் இல்லாத பொழுது சுலபமாக அதே சமயத்தில் ருசியாக செய்யக்கூடிய ஏதாவது சைடிஷ் இருந்தால் நன்றாக இருக்கலாம் என்று தோன்றும். அந்த வகையில் இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய இந்த சாம்பார் வரப்பிரசாதமாக அமையும்.
2 மினிட்ஸ் சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:
- பாசிப்பருப்பு – 100 கிராம்
- தக்காளி – மூன்று
- பச்சை மிளகாய் – 4
- கடுகு – அரை ஸ்பூன்
- கருவேப்பிலை – ஒரு கொத்து
தாளிக்க:
2 மினிட்ஸ் சாம்பார் செய்முறை விளக்கம்:
சுவையான சாம்பார் செய்வதற்கு முதலில் பாசிப்பருப்பை நன்கு அலசி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அலசி எடுத்த பாசிப்பருப்பில் சுத்தமான தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு போட்டு நன்கு குழைய வேக வைக்க வேண்டும். 10 நிமிடத்தில் பருப்பு குழைய வெந்துவிடும். பின்பு பழுத்த தக்காளி பழங்களை எடுத்து நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தக்காளியை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதே போல நான்கு பச்சை மிளகாய்களையும் சுத்தம் செய்துவிட்டு காம்புகளை நீக்கிவிட்டு பொடி பொடியாக நறுக்கி வையுங்கள்.
இப்போது அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் அதில் நீங்கள் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய்களை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். இதனுடன் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி பழங்களையும் சேர்த்து நன்கு வதக்குங்கள். இவை நன்கு மசிய வதங்கி வந்ததும் வேக வைத்துள்ள பாசிப்பருப்புடன் சேர்த்து கலந்து விடுங்கள். தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 2 நிமிடம் நன்கு கொதிக்க விடுங்கள்.
இதையும் படிக்கலாமே:
பணம் சேர நாணயம் பரிகாரம்
அவ்வளவுதாங்க ரொம்பவே சுவையான இந்த சாம்பார் செய்ய அதிக நேரமும், பொருட்களும் தேவைப்படாது சட்டுனு ஈசியாக செய்து அசத்தி விடலாம். சட்னியை விட சாம்பார் செய்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். வழக்கத்தை விட கூடுதலாகவே ரெண்டு இட்லியை கேட்டு வாங்கி கொள்வார்கள். பாசிப்பருப்பு சாம்பாருக்கு தக்காளி மற்றும் பச்சை மிளகாயின் சுவை இருந்தாலே அவ்வளவு ருசியாக இருக்கும். இன்ஸ்டன்ட் ஆக செய்து இட்லி, தோசைக்கு இதே போல நீங்களும் தொட்டு சாப்பிட்டு பாருங்கள், இனி அடிக்கடி இந்த சாம்பார் தான் உங்க வீட்டிலும் மணக்கும்.