இட்லி தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட பீர்க்கங்காய் துவையல் மற்றும் தக்காளி சட்னி இவை இரண்டுமே மிகவும் அசத்தல் சுவையில் இருக்கும்

chutni
- Advertisement -

பீர்க்கங்காய் துவையல் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற துவையல் வகை. இது இட்லி தோசை மற்றும்  சூடான சாதத்துடன் சுவையாக இருக்கும்.  பீர்க்கங்காய் ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்ட காய்கறி வகையாகும். பீர்க்கங்காய் சட்னி வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை எடுத்துக் கொள்வது உடல் நலத்திற்கு மிகுந்த நன்மை சேர்க்கும்.  அவசரத்திற்கு மிகவும் சிம்பிளான செய்ய வேண்டும் என்றால் தக்காளி, வெங்காயத்தை எப்படி சுவையான தக்காளி சட்னி செய்து கொடுக்கலாம். வாருங்கள் இவை இரண்டு டிஷ்ஷையும் எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
பீர்க்கங்காய் – 1, கடலைப்பருப்பு – 2 ஸ்பூன், உளுத்தம்பருப்பு – 2 ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 5, புளி – சிறிய கோலி குண்டு அளவு, தேங்காய் – 4 ஸ்பூன், பெருங்காயம் – சிறிதளவு,
உப்பு – 3/4 ஸ்பூன், எண்ணெய் – 1 ஸ்பூன், கடுகு – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – தேவையான அளவு.

- Advertisement -

செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணெய் சூடானதும் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய பீர்க்கங்காய் சேர்த்து வதக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய பீர்க்கங்காய் சேர்த்து வதக்கவும்பின்னர் கால் கப் அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 5 முதல் 7 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

பீர்க்கங்காய் வெந்ததும் துருவிய தேங்காய் சேர்த்து கலக்கவும்.
பின்னர் கலவையை நன்கு ஆற வைக்கவும். ஆறிய பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மென்மையாக அரைத்து எடுக்கவும். அதனுடன் கடுகு கருவேப்பிலை தாளித்து கலந்து சூடான சாதம் அல்லது தோசை, இட்லியுடன் பரிமாறலாம்.

- Advertisement -

தக்காளி சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் – 2, பெரிய தக்காளி – 2, எண்ணெய் – 2 ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 10, உப்பு – 1/2 ஸ்பூன், எண்ணெய் – 1 ஸ்பூன், கடுகு – 1/2 ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு குத்து.

தக்காளி சட்னி செய்முறை:
ஒரு வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும். அதனுடன் 10 காய்ந்த மிளகாய் சேர்த்து 1 நிமிடத்திற்கு பின் அடுப்பை அணைத்து விடவும். வதக்கிய கலவையை நன்கு ஆறவைக்கவும்.

ஒரு மிக்ஸி ஜாரில் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி வைத்துள்ளவற்றை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். ஒரு சிறிய வாணலியில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும், 1/2 ஸ்பூன் கடுகு மற்றும் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். தாளித்த கலவையை சட்னியுடன் சேர்த்து கலக்கவும்,  சூடான இட்லி தோசையுடன் பரிமாறவும்.

- Advertisement -