வீட்டில் இருப்பவர்களது பிரச்சினைகள் நீங்கி, ஐஸ்வர்யத்தோடு வாழ 2 கோதுமை போதும்.

Wheat

ஒரு வீடானது லட்சுமி கடாட்சம் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்றால் முதலில் வீட்டில் உள்ளவர்களுக்கு இடையே மனஸ்தாபமும், பிரச்சனையும் வராமல் இருக்க வேண்டும். இது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் சண்டைகள் வராமல் தவிர்த்து விடலாம். ஆனால் சிலரின் முன் கோபமும், கடுமையான வார்த்தைகளுமே பிரச்சினைகளுக்கு காரணமாக வந்து நிற்கிறது. நம் வீடு, நம் உறவினர், நம் கணவர், நம் பிள்ளைகள், நம் மனைவி என்று நினைத்தாலே பிரச்சனையில் பாதி முடிந்துவிடும். சரி பிரச்சனைகள் வந்து விட்டது. என்ன செய்வது? ஏதாவது ஒரு சுலபமான பரிகாரத்தின் மூலம் அந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முடியுமென்றால் அதை பின்பற்றி பார்க்கலாம். அப்படிப்பட்ட எளிய இரண்டு பரிகாரங்களை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

wheat

இரண்டு பரிகாரங்களும், கோதுமையை முதன்மையாக வைத்து செய்யக் கூடிய பரிகாரங்கள் தான். வீட்டில் உள்ளவர்களின் பிரச்சனை முதலில் தீர்ந்தால், வீட்டில் அமைதி நிலவும். வீட்டில் அமைதி நிலவிய பின்பு லட்சுமிதேவியை நம் வீட்டிற்கு வரவழைக்க என்ன செய்யலாம்? என்பதை பற்றி தெரிந்து கொள்ளவே இந்த பதிவு.

முதலில் சதுர வடிவில் இருக்கும் வெள்ளை காட்டன் துணி ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு கைப்பிடி அளவு கோதுமை, ஒரு கைப்பிடி அளவு கல்லுப்பு, ஒரு கைப்பிடி அளவு வெல்லம், உங்களிடம் இருந்தால் இரண்டு செம்பு நாணயங்களையும், வைத்துக்கொள்ளலாம். இவை அனைத்தையும் ஒரு சேர கலந்துவிட்டு மூட்டையாக, மூன்று முடிச்சுகள் போட்டு உங்களது பூஜை அறையில் இடமிருந்தால் வைக்கலாம். பூஜை அறையில் வைக்க முடியாதவர்கள், வடகிழக்கு மூலையில் ஓரு ஆணியில் மாட்டி வைத்துவிடலாம். இந்த பரிகாரத்தை மாதத்திற்கு ஒரு முறை செய்தால் போதும். அதாவது மாதத்திற்கு ஒருமுறை உள்ளே இருக்கும் பொருட்களை எல்லாம் எடுத்து நீர்நிலைகளில் செலுத்திவிட்டு, செம்பு நாணயத்தையும் துணியை மட்டும் அடுத்த மாதத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமை இந்த இரு தினங்களில் கட்டாயம் செய்யக்கூடாது. மற்ற நாட்களில் எந்த நேரமாக இருந்தாலும் சரி இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். இந்த முடிச்சினை கட்டி உங்களது வீட்டில் வைத்த ஒரு மாதத்திலேயே நல்ல முன்னேற்றம் இருப்பதை அனுபவப்பூர்வமாக உங்களால் உணர முடியும்.

Pillayarpatti temple

வீட்டில் சண்டை சச்சரவு ஓய்ந்தது. மகாலட்சுமியின் அம்சத்தை நம் வீட்டில் நிரப்ப வேண்டும் என்பதற்காக என்ன செய்யலாம்? அதையும் தெரிந்து கொள்வோம். மேலே கூறப்பட்ட பரிகாரத்தை செய்து முடித்த பின்பு, அடுத்த மாதம் கோதுமை மாவை சிறிது தண்ணீர் ஊற்றி, உப்பு போடாமல் பிசைந்து, சிறு சிறு உருண்டையாக 7, 14, 21 இப்படி ஏழு மடங்கில் தான் உருண்டை செய்து கொள்ளவேண்டும். குங்குமத்தை தண்ணீரில் குழைத்துக் கொண்டு, மாதுளை மர குச்சியால் அந்த குங்குமத்தை தொட்டு கோதுமைமாவு உருண்டையில் ‘ஸ்ரீம்’ என்று எழுதி அதை அருகில் இருக்கும் ஆறு, குளம், ஏரி அல்லது கோவில் தெப்பக்குளத்தில் வசிக்கும் மீன்களுக்கு இரையாக போட வேண்டும். இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் செய்து வரலாம். லக்ஷ்மியின் ஆசியை பரிபூரணமாக பெற்று, உங்களது வீட்டில் இருக்கும் பணத்தட்டுப்பாடு, வறுமை, கஷ்டம் போன்ற எல்லா பிரச்சனைகளும் கூடிய விரைவில் நீங்க வேண்டும் என்று நினைத்து, இந்த பரிகாரத்தை செய்து வாருங்கள். இத்தனை நாட்கள் தான் செய்யவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. உங்களால் எப்போதெல்லாம் முடியுமோ, இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்வது தவறு ஒன்றும் இல்லை.

இதையும் படிக்கலாமே
உங்களுக்காக சில ரகசிய ஆன்மீக குறிப்புகள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kanavan manaivi sandai. selvam peruga. Veetil selvam peruga Tamil. Panam athigam vara Tamil