உங்களுக்காக சில ரகசிய ஆன்மீக குறிப்புகள்.

mahalakshmi-temple

ஆன்மிகத்தை பொருத்தவரை சில பரிகாரங்களை முறையாகச் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. அதிலும் சில சூட்சம ரகசியங்கள் அடங்கியுள்ளன. நாம் பரிகாரங்களை செய்யும்போது அவை பலன் அளிக்க வேண்டுமென்றால், பின்வரும் வழிமுறைகளையும் நாம் நினைவில் வைத்துக் கொள்வது அவசியமாகிறது. நீங்கள் நம்பாவிட்டாலும் சாஸ்திரப்படி கூறப்பட்டிருக்கும் இந்த குறிப்புகள் அனைத்தும் உண்மையே.

om pranava manthiram

பொதுவாகவே ஒரு நாளை நாம் தொடங்குவதற்கு முன்பாக, இறைவனின் ஏதாவது ஒரு மந்திரத்தை ஜெபிப்பது நல்லது என்பது சாஸ்திரம். இப்படி மந்திரத்தை உச்சரித்த உடன், ஒரு டம்ளர் இளநீர் குடித்தால், ஜெபித்த மந்திரத்தின் பலனை உடனடியாக பெற்றுவிடலாம் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

வாரம்தோறும் வரும் சனிக்கிழமையன்று நவதானிய அடைதோசையை நல்லெண்ணெய் விட்டு, சுட்டு சாப்பிட்டால் நவகிரகங்கள் திருப்தி அடையும் என்றும், இதனால் அஷ்டமச்சனி, கண்டகச்சனி, ஏழரைச்சனி, இவைகளின் தாக்கம் குறையும் என்றும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

ulunthu dosai 1

நம்முடைய கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உள்ளது. வீடு, வாசல், சொந்தம், பந்தம், தொழில் இவைகளை இழந்தவருக்கு அன்னதானம் அளிப்பது மிகவும் சிறந்ததாகும்.

- Advertisement -

உங்களுடைய முன்னேற்றத்தை பார்த்து மற்றவர்கள் விடும் பெருமூச்சு நீங்க வேண்டும் என்றால் உங்களுக்கும், உங்களது வீட்டிற்கும் சாம்பிராணி புகை போடுவது நல்லது.

புதன்கிழமை அன்று உங்களது வீட்டிலிருந்து ஆடை, ஆபரணங்கள், பொன்பொருள் இவைகளை எவருக்கும் கொடுக்கக் கூடாது. அப்படிக் கொடுத்தால் உங்கள் கையில் இருக்கும் மகாலட்சுமி அடுத்தவரிடம் சென்றுவிடுவாள் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை அன்று யாருக்கும் அரிசி, நெல், கோதுமை போன்ற எந்த ஒரு உணவு பண்டத்தையும் இனாமாக தரக்கூடாது.

உங்களது பிரச்சினைகள் நீங்குவதற்கு, நீங்கள் ஏதாவது ஒரு பரிகாரத்தை செய்து வந்தால், தோலாலான செருப்புகள், பர்ஸ், பெல்ட் இவைகளை உபயோகிப்பதை நிறுத்தி விடவும். ஏனென்றால் இவைகள் அணிந்துகொண்டு செய்யும் எந்த ஒரு பரிகாரமும் பலிக்காது.

கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து, 16 நாட்கள் கோவிலுக்கு கொள்ளு தானம் செய்ய வேண்டும்.

தொடர்ந்து 43 நாட்கள் கோமியத்தை வீட்டில் தெளித்து வந்தால் பீடை நீங்கும்.

கணவனின் அன்பை முழுமையாக மனைவி பெற வேண்டுமென்றால், விசாக நட்சத்திரத்தில் மனைவி விரதமிருந்து, முருகப் பெருமானையும் வள்ளியையும் வழிபட வேண்டும்.

murugan

நீங்கள் கடனாக அடுத்தவருக்கு ஏதாவது ஒரு பொருளை அளிப்பதாக இருந்தால், அன்று சுவாதி நட்சத்திரமா என்று நாள்காட்டியில் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் கடனாகக் கொடுக்கப்படும் பொன், பொருள், பணம் எதுவாக இருந்தாலும் அது திரும்பி வராமல் போக அதிக வாய்ப்பு உள்ளது.

திருவோணம் அன்று விஷ்ணுவை துளசியால் அர்ச்சனை செய்து, துவரம் பருப்பு பாயாசம் நைவேத்தியம் வைத்து, அந்த பிரசாதத்தை அனைவருக்கும் தானமாக வழங்கினால் சொத்து வாங்கும் யோகம் அமையும்.

மற்றவர்களிடமிருந்து எப்படிப்பட்ட உதவியையும் சுலபமாக பெற, மிருகசீஷ நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை வழிபட்டுவிட்டு உதவியினை யாசித்தால் கட்டாயம் கேட்ட உதவி கிடைத்துவிடும்.

இதையும் படிக்கலாமே
உங்கள் தொழிலில் இருக்கும் எப்படிப்பட்ட முடக்கத்தையும் 48 நாட்களில் நீக்கி, அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடிய ஆகாயதாமரை.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Aanmeega seithigal in Tamil. Aanmeega thagaval tamil tips. Aanmeega tips Tamil. aanmeega ragasiyam