- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநாளை 20-06-2025 கரிநாள் பரிகாரம்

நாளை 20-06-2025 கரிநாள் பரிகாரம்

- Advertisement -

நாளைய தினம் 20-6-2025 தேய்பிறை வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் கரிநாள். கரிநாள் என்றாலே அந்த நாளில் நல்ல விஷயங்களை நாம் செய்யக்கூடாது. சுபகாரியங்கள் துவங்கக் கூடாது என்று சொல்லி விடுவோம். இது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும். காலண்டரை எடுத்துப் பார்த்தாலே கரிநாள் அப்படி என்று போட்டிருந்தால், அந்த நாளில் கூடுமானவரை வெளியூர் பிரயாணம் செய்வதை கூட தவிர்த்து கொள்வோம்.

ஆனால் இந்த கரி நாளில் நாம் செய்யக்கூடிய இந்த எளிய பரிகாரம் நம்மை பெரிய கடன் சுமையிலிருந்தும் சுலபமாக காப்பாற்றி விடும். அந்த பரிகாரம் என்ன ஆன்மீகம் சார்ந்த தகவலை இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

கரிநாள் பரிகாரம்

கரிநாள் என்றால் சூரியனின் தாக்கம் அதிகமாக பூமியில் இருக்கும. அதைத்தான் கரிநாள் என்று நம்முடைய முன்னோர்கள் குறித்து வைத்துள்ளார்கள். சூரியனின் தாக்கம் அதிகமாக இருந்தால் உடல் சூடு அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் நாம் செய்யக்கூடிய வேலைகள், எடுக்கும் முடிவுகள் எல்லாம் தவறாக இருக்கும் என்பதால் தான், இந்த நாளில் சுபகாரியங்கள் வேண்டாம், வெளியிடங்களுக்கு அதிகமாக செல்ல வேண்டாம் என்று சொல்லப்பட்டுள்ளது. சந்திரனை வைத்து சந்திராஷ்டம நாள் எப்படி கணக்கிடப்படுகிறதோ, அதேபோலத்தான் சூரியனை வைத்து கணிக்க கூடிய நாள் இந்த கரிநாள்‌.

கரி நாளை பற்றி இவ்வளவு எதிர்மறையான விஷயங்கள் சொல்லி இருந்தாலும், கரி நாளில் நாம், நம்முடைய கடனை திருப்பி அடைத்தால் அந்த கடன் சுமை விரைவாக அடையும் என்று நம்பப்படுகிறது. இந்த கரி நாளில், வாங்கிய கடனிலிருந்து ஒரு சிறு தொகையை திருப்பிக் கொடுத்துப் பாருங்கள். உங்களுடைய கடன் சுமை படிப்படியாக குறையும்.

- Advertisement -

சில பேர் வாழ்நாளில் வட்டி கட்டியே வாழ்க்கையை முடித்து இருப்பார்கள். வாங்கிய அசல் தொகையை பல வருடங்களாகியும் திருப்பி தர முடியாத சூழ்நிலை, இருந்திருக்கும். உங்களுக்கு இதுபோல ஒரு சூழ்நிலை இருந்தால், அந்த வட்டித் தொகையை இந்த கரிநாள் அன்று திருப்பிக் கொடுத்துப் பாருங்கள். வட்டி கட்ட கூடிய நிலைமையும் மாறும். வாங்கிய அசல் தொகையையும் சீக்கிரமாக நீங்கள் திருப்பிக் கொடுத்து விடுவீர்கள் இது முதல் விஷயம்.

கரிநாள் பைரவர் வழிபாடு

வீட்டின் அருகில் இருக்கக்கூடிய சிவன் கோவிலில், பைரவர் சன்னிதானம் கட்டாயம் இருக்கும். அந்த பைரவருக்கு கரிநாள் அன்று செவ்வரளி பூக்களை வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்து, இரண்டு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வேண்டிக் கொண்டால், நம்முடைய கடன் சுமையானது படிப்படியாக குறையும். வாழ்வில் இருக்கும் அனைத்து முட்டுக்கட்டைகள் சரியாகும்.

இதையும் படிக்கலாமே: நிதி பற்றாக்குறையை சரி செய்யும் நித்திகா தேவதை வழிபாடு

வாழ்க்கையில் முன்னேற நிறைய தடைகள் வந்து கொண்டே இருக்கிறது என்றாலும், நீங்கள் இந்த வழிபாட்டை கரிநாள் அன்று மேற்கொள்ளலாம். தொடர்ந்து 7 கரிநாளில் பைரவருக்கு விளக்கு போட்டால், நீங்கள் என்ன வேண்டிக் கொள்கிறீர்களோ, அது நிச்சயமாக ஏழு நாள் கரிநாள் முடிவதற்குள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. ஒரு மாதத்திற்கு 2 அல்லது 3 கரி நாட்கள் வரும். காலண்டரை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த ஆன்மீகம் சார்ந்த அரிய தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்