- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval20-11-2024 கார்த்திகை மாத தேய்பிறை பஞ்சமி வழிபாடு

20-11-2024 கார்த்திகை மாத தேய்பிறை பஞ்சமி வழிபாடு

- Advertisement -

கார்த்திகை என்று சொன்னாலே அது தீப வழிபாட்டிற்கு உகந்த மாதம் தான். நாளைய தினம் இந்த கார்த்திகை மாதத்தில் வந்திருக்கும் தேய்பிறை பஞ்சமி திதி. இந்த நாளில் வாராகியை வழிபாடு செய்வது, நமக்கு பல மடங்கு புண்ணியத்தை தேடி கொடுக்கும். கஷ்டங்கள் எல்லாம் தீர நாளைய தினம் உங்களுடைய வீட்டிலேயே வாராகியை நினைத்து எப்படி வழிபாடு செய்வது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த ஒரு தகவலை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேய்பிறை பஞ்சமி வாராகி வழிபாடு

- Advertisement -

உங்களுடைய வீட்டில் வாராகியின் திருவுருவப் படம் இல்லை என்றாலும் பரவாயில்லை, வாராகியை மனதார நினைத்து மனதிற்குள்ளேயே கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்து அவளை பூஜை அறையில் மானசீகமாக வழிபாடு செய்யுங்கள். நீங்கள் ஏற்றி வைத்திருக்கும் விளக்கு, தீப சுடர்தான் வாராஹி என்று நினைத்துக் கொள்ளுங்கள். அந்த தீபச்சுடரில் வாராகி அன்னை காட்சி தருவாள். நாளை காலை வேளையிலேயே வீட்டில் இருக்கும் பெண்கள் எழுந்து சுத்தபத்தமாக குளித்து மங்களகரமாக அலங்காரம் செய்து கொள்ளவும்.

நாள் முழுவதும் வாராஹி நாமத்தை உங்களுடைய மனதில் உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். அன்றாட வேலைகளை எல்லாம் முடித்து விடுங்கள். நாளை மாலை 6:30 மணிக்கு மேல் மீண்டும் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, ‘வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் ! வாராஹி தாயே போற்றி போற்றி !’ என்ற மந்திரங்களை சொல்லிக் கொண்டே விளக்கு ஏற்ற வேண்டும்.

- Advertisement -

நாளைய தினம் ஒரு ஐந்து மண் அகல்விளக்குகளை எடுத்துக் கொள்ளுங்கள். பஞ்சமிக்கு இந்த பஞ்ச தீபம் ஏற்றுவது ரொம்ப ரொம்ப சிறப்பு. ஒரு தாம்பூல தட்டில் ஐந்து விளக்குகளையும் அடுக்கி வைத்து மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டுக் கொள்ளவும். விளக்குகளை ஏற்றும் போது வஜ்ரகோஷம் சொல்லிக் கொண்டே ஏற்றி, பூஜையறையில் ஒரு விளக்கு, சமையலறையில் ஒரு விளக்கு, வரவேற்பு அறையில் ஒரு விளக்கு, நிலை வாசலில் இரண்டு விளக்கு என்று வைக்கும் போது உங்கள் வீட்டின் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் இந்த தீபச்சுடரின் ஒளியால் பஸ்பம் ஆகிவிடும்.

வஜ்ரம் என்றால் வாராகியின் வாகனமான சிங்கத்தை குடிக்கிறது. நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய கெட்ட சக்தியை வாராகி வதம் செய்வதாக நம்பிக்கை. ஆகவே நாளை தினம் பஞ்சமி திதியில் வீட்டில் விளக்கு ஏற்றி வைக்கும் போது அனைவரும் வஜ்ரகோஷம் செல்லுங்கள். நிச்சயம் உங்கள் வீட்டில் பாடாய்படுத்திக் கொண்டிருக்கும் கஷ்டங்கள் எல்லாம் வாராகி ஆயுதத்தால் வதம் செய்யப்படும்.

எதிரி தொல்லை, கண் திருஷ்டி, ஏவல் பில்லி சூனியம், இப்படி எந்த பிரச்சனை உங்கள் வீட்டில் இருந்தாலும் நாளைய தினம் அந்த பிரச்சனைகள் வாராகியின் கையால் வதம் செய்யப்படும். மேல் சொன்ன முறைப்படி உங்களுடைய வீட்டில் விளக்கு ஏற்றி வைக்கும் போது பூஜை அறையில் இருக்கும் தெய்வங்களுக்கு உங்களால் முடிந்த நெய்வேத்தியம் வைத்து, தீப தூப ஆராதனை காண்பித்து கற்பூர ஆரத்தியும் காண்பித்து உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம்.

வாராகியின் திருவுருவப் படம் வைத்திருப்பவர்கள், அதற்கு உண்டான வழிபாட்டு முறைகளை சரியாக செய்து விடுங்கள். சிலை இருந்தால் அதற்கான அபிஷேகங்களை நாளை மாலை செய்து, அந்த சிலைக்கு உண்டான நெய்வேத்தியம் பானகமோ அல்லது கிழங்கு வகைகளோ அவித்து வைத்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும். மேலே சொல்லப்பட்டிருக்கும் இந்த எளிமையான வழிபாடு நாளை உங்கள் கஷ்டத்திற்கு நிச்சயம் ஒரு விமோசனத்தை கொடுக்கும், பணக்கஷ்டம், மன கஷ்டம், குடும்ப பிரச்சனை, வேலையில் பிரச்சனை, தொழிலில் பிரச்சனை, எதுவாக இருந்தாலும் அந்த பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வை அம்பாள் காட்டிக் கொடுப்பாள் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்