மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புது நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய அனுபவங்களும் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடை விலகும். வங்கி கடன் முயற்சிக்கலாம். இறைவனின் பரிபூரண அருளால் இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான வாழ்க்கை கிடைக்கும். நேரத்திற்கு நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல ஓய்வு என்று இந்த நாள் இனிமையான அனுபவங்களை கொடுக்கப் போகிறது. வேலையிலும் வியாபாரத்திலும் பெருசாக பிரச்சனைகள் வராது. மனதிற்கு பிடித்த நபரை சந்திக்க கூடிய நல்ல வாய்ப்புகள் அமையும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நன்மைகள் நடக்கும். நாளாக இருக்கும். நிதிநிலைமை சீராகும். வருமானம் உயரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். விவசாயம் எதிர்பார்த்ததை விட நல்ல லாபத்தை கொடுக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று லாபமான நாளாக இருக்கும். எதிர்கால சேமிப்புக்கு முயற்சி செய்யுங்கள். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நீங்கள் சாதிக்க வேண்டும் என்று நினைத்த விஷயத்தை இன்று சாதிக்கலாம். நிறைய நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வீண் விரைய செலவுகள் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. முன் பின் தெரியாத நபருக்கு பண உதவி செய்யாதீங்க ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். காதல் கைகூடும். பிரிந்த கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். குடும்ப சந்தோஷம் இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுக்கும். எதிரி தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நல்ல பெயர் வாங்குவீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று காரிய தடை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சின்ன சின்ன தடைகள் தடங்கல்களை தாண்டி தான், இன்று உங்களுடைய வேலைகள் நடக்கும். கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். புதிய முதலீடு செய்ய வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மனதில் இருந்த பாரம் குறையும். மன நிம்மதியோடு இந்த நாள் வேலையை கவனிப்பீர்கள். மனநிறைவான இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி செல்லுங்கள். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று ஆதாயம் இல்லாமல் ஒரு வேலையை கையில் எடுக்க மாட்டீர்கள். லாப நஷ்ட கணக்கு பார்த்து சிந்தித்து செயல்படுவீர்கள். நாலு பேரு உங்களை நன்றாக திட்டுவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் ஐயோ பாவம் என்று பார்த்து எந்த விஷயத்தையும் விட்டுக் கொடுத்துறாதீங்க. உங்களுடைய பிடிவாதம் தான் இன்று உங்களை காப்பாற்றி விடும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். முக்கியமான வேலைகளுக்கு செல்லும் போது தாமதம் வேண்டாம். எல்லா வேலையையும் அரைமணி நேரத்திற்கு முன்பாகவே முடித்து விடுவது நல்லது. நேரத்தை வீணடிக்க கூடாது. இறைவழிபாடு செய்யுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சந்தோஷத்திற்கு அளவிருக்காது. நீண்ட தூர பயணங்களால் மன நிம்மதி கிடைக்கும். சுப செலவுகள் ஏற்படும். காரியத்தடை விலகும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை சுப செலவுகளை ஏற்படுத்தும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். சம்பள பாக்கி உங்கள் கையை வந்து சேரும். வியாபாரத்தில் புது முடிவுகளை எடுக்கலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். வீண் விரைய செலவுகள் குறையும்.