2018 புத்தாண்டு ராசி பலன் – தனுசு

astrology

தனுசு – மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம் – 2018 ராசி பலன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உறுதியான சிந்தனை கொண்டவர்களே!

உங்கள் பூர்வபுண்ணியாதிபதியான செவ்வாய், லாப வீட்டில் நிற்கும் வேளையில் புத்தாண்டு பிறக்கிறது. வருமானம் உயரும். பிரபலங்களின் பட்டியலில் இடம் பிடிப்பீர்கள். கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும்.

பார்வைப் பலன்கள்

ஆண்டின் தொடக்கத்தில் சூரியனும் சுக்கிரனும் ராசிக்குள்ளேயே இருப்பதால், அரசால் அனுகூலம் உண்டாகும். வி.ஐ.பி.களின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். நவீன ரக மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். சொந்த ஊரில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.
astrology-wheel

வருடம் முழுவதும் சனி ராசிக்குள் இருந்து ஜன்மச் சனியாகத் தொடர்வதால், உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. அடிக்கடி உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். வழக்குகளால் கவலை ஏற்படக்கூடும். குடும்பத்தில் அவ்வப்போது சச்சரவுகள் ஏற்படும். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகளும் அடுக்கடுக்காகத் துரத்தும். முக்கிய காரியங்களை நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது. இடைத் தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம்.

- Advertisement -

புத்தாண்டின் தொடக்கம் முதல் 2.10.18 வரை உங்கள் ராசிநாதனும் சுகாதிபதியுமான குருபகவான், லாப வீட்டில் இருப்பதால், சவாலான காரியங்களையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தைத் திருப்பித் தருவீர்கள். பணப்பற்றாக்குறையால் தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணியைத் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். மூத்த சகோதர வகையில் ஆதாயம் உண்டு. தடைப்பட்ட திருமணம் கூடி வரும். சிலருக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். ஆனால் 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்திலும் மற்றும் 3.10.18 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களுடைய ராசிக்கு 12-ம் வீட்டில் மறைவதால் எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கனவுத் தொல்லை, தூக்கமின்மை வந்து செல்லும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள்.
astrology wheel

ஆண்டின் தொடக்கம் முதல் 13.1.18 வரை சூரியனும், சனியும் சேர்ந்திருப்பதால் தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கும். அவருடன் சின்னச் சின்ன மோதல்கள் வந்து போகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னையில் இப்போது தலையிட வேண்டாம்.

10.3.18 முதல் 2.5.18 வரை உங்கள் பூர்வ புண்ணியாதிபதியான செவ்வாய், சனியுடன் சேர்ந்து பலவீனமடைவதால் மனதில் இனம் தெரியாத குழப்பம் வந்து போகும். பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை விஸ்வரூபமெடுக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும்.

2.5.18 முதல் 30.10.18 வரை செவ்வாய், கேதுவுடன் இணைவதால் சில நேரங்களில் மனதில் வெறுமையும் விரக்தியும் ஏற்பட்டு நீங்கும். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். நன்றாக விசாரித்து முடிவு எடுப்பது நல்லது.

22.4.18 முதல் 15.5.17 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும். மற்றவர்கள் வீட்டு விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
astrology-wheel

இந்தப் புத்தாண்டு முழுவதும் ராகு 8-லும் கேது 2-லும் அமர்ந்திருப்பதால், எதையும் ஒருமுறைக்குப் பலமுறை அறிவுப்பூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்துகொள்வது அவசியம். பணப் பற்றாக்குறையால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். பழைய வாகனம் வாங்கும்போது ஆவணங்களை கவனமாக சரிபார்த்து வாங்கவும்.

வியாபாரிகளே! லாபம் அதிகரிக்கும். அதிக வட்டிக்குக் கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்தவேண்டாம். அடுத்தடுத்து போட்டியாளர்கள் தோன்றுவார்கள். முடிந்தவரை கடன் தருவதைத் தவிர்க்கப் பாருங்கள். சிலருக்குக் கடையை மாற்றவேண்டிய நிலை ஏற்படக்கூடும். வேலையாள்களுடன் போராடவேண்டி வரும். குறைந்த லாபம் வைத்து விற்பதன் மூலம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். பங்குதாரர்களுடன் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். எண்டர்பிரைசஸ், மூலிகை, ரியல் எஸ்டேட், கடல்வாழ் உயிரினங்களால் ஆதாயம் அடைவீர்கள்.
astrology

உத்தியோகத்தில் நாளுக்கு நாள் வேலைச்சுமை அதிகரித்தபடி இருக்கும். மூத்த அதிகாரிகளை திருப்திப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு தக்க சமயத்தில் கிடைக்காது சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். இழந்த சலுகைகளைப் போராடித்தான் பெறவேண்டி இருக்கும்.

மாணவ – மாணவியரே! பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. அன்றைய பாடங்களை அன்றே தெளிவாகப் புரிந்துகொண்டு படித்துவிடுவது நல்லது. எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி படிக்க சிபாரிசுடன் பணமும் செலவு செய்யவேண்டி இருக்கும்.

கலைத்துறையினரே! உங்களின் தனித்திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்யவும். வீண் வதந்திகளும், கிசுகிசுக்களும் இருக்கத்தான் செய்யும். சம்பள விஷயத்தில் அதிக கண்டிப்பு வேண்டாம்.

இந்தப் புத்தாண்டு புதிய படிப்பினைகளைத் தருவதாகவும், வாழ்க்கையில் வெற்றி பெற எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை உணர்த்துவதாகவும் அமையும்.
astrology
பரிகாரம்:

திருநெல்வேலி – தூத்துக்குடி சாலையில் உள்ள முறப்பநாடு என்னும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகைலாச நாதர், சிவகாமி அம்மையையும், ஸ்ரீவீர பைரவரையும் அஷ்டமி நாளில் சென்று வணங்குங்கள்.

தனுசு ராசிக்கான பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யுங்கள்

மற்ற ராசிக்கான பலன்களை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

English Overview

2018 new year Rasi Palan in Tamil for Dhanusu is explained above in detail. This year you will get good amount of profit. You will get good job. You will build your dream house this year.

You will get good name because of your children. You will get your ancestor property. Please go to kuladheivam temple and do the puja. Your daughter will get good guy for marriage. You son will improve his skill set.