மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை தான். நீங்கள் நினைத்த நல்ல காரியங்கள் எல்லாம் நடக்க துவங்கும். செல்லும் இடமெல்லாம் மதிப்பும் மரியாதையும் கூடும். திறமைக்கு ஏற்ற வேலை கிடைக்கும். செய்யும் வேலையில் நல்ல முன்னேற்றம் வரும். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். கடன் சுமை குறையும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை தரும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். எதிரி தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் கொஞ்சம் இருக்கும். உடன் இருப்பவர்களால் சின்ன சின்ன தொல்லைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம். பொறுமையாக இருந்தால் இந்த நாளில் நிறைய நல்ல விஷயங்களை சாதிக்க முடியும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஆர்வத்தோடு இருப்பீர்கள். உங்களுடைய வேலைகளை எல்லாம் சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். சக ஊழியர்களோடு நன்றாக பழகக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். புது நண்பர்களின் அறிமுகம் புது அனுபவங்களை கற்றுக் கொடுக்கும். சுபசெலவர்கள் ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். விவசாயிகளுக்கு இன்று நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதிநிலைமை சீராக இருக்கும். கடன் சுமை குறையும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் இருந்து வந்த காரிய தடைகள் விலகும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். சோம்பேறித்தனம் விலகும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகள் நல்லபடியாக நடந்து முடியும். வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு இன்று நல்ல செய்தி உண்டு.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மருத்துவ செலவுகள் வரலாம். உடல் சோர்வினால் உங்களுடைய வேலைகள் பாதிப்படையும். முக்கியமான வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய ஆசைகள் நிறைவேறும். மேலும் மேலும் புதிய ஆசைகள் உண்டாகும். சீக்கிரம் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம் நல்லதே நடக்கும். துடிப்புள்ள இந்த இளைஞர்களுக்கு இன்று ரொம்ப ரொம்ப நல்ல நாள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்லது நடக்கும். புது மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இழந்த மதிப்பை மீண்டும் பெறுவீர்கள். சொந்த பந்தங்களோடு இருந்து வந்த மன கசப்பு நீங்கும். குடும்ப பஞ்சாயத்துகள் ஒரு முடிவுக்கு வரும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் அதிகமாக வெளிப்படும். நல்ல வாய்ப்புகளை கை நழுகக்கூடிய சூழ்நிலை வரலாம். கவனமாக செயல்பட வேண்டும். கூடுமானவரை கோபத்தை தவிர்ப்பது நல்லது. மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது கவனம் தேவை. இஷ்ட தெய்வ வழிபாடு செய்வது நன்மையை தரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சேமிப்பை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். புதிய முதலீட்டின் போது இரட்டிப்பு கவனம் தேவை. எதிரிகளோடு முட்டி மோதி சண்டை போட வேண்டாம். சில விஷயங்களில் தந்திரமாக செயல்பட்டால் தான் இன்று வெற்றி காண முடியும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று எல்லா இடத்திலும் இறக்க குணத்தை வெளிப்படுத்தக் கூடாது. எந்தெந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ, அந்தந்த இடத்தில் அப்படி நடந்து கொள்ளுங்கள். அப்போதுதான் உங்களுக்கான மரியாதை கிடைக்கும். வீண் செலவுகள் கொஞ்சம் ஏற்படும். நீண்ட தூர பயணங்களால் கொஞ்சம் அலைச்சல் வரலாம்.