2018 புத்தாண்டு ராசி பலன் – கடகம்

Astrology

கடகம் – புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம் – 2018 ராசி பலன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மற்றவர்கள் மதிக்கும்படி நடந்துகொள்பவர்களே!

உங்களுடைய ராசிக்கு லாப வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் அதிகரிக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டவும் தொழில் தொடங்கவும் வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.

பார்வைப் பலன்கள்

வருடம் முழுவதும் சனிபகவான் உங்களுடைய ராசிக்கு 6-ம் இடத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். மதிப்பு, மரியாதை கூடும். திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்வாழ்க்கைத்துணை உங்களுடைய முயற்சிகளை ஆதரிப்பார். அயல்நாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். பிறமொழியினரால் உதவிகள் உண்டு. சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வழக்கு சாதகமாகும். தொலை தூரத்திலுள்ள புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். திருமணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும்.உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள்.
astrology-wheel

ஆண்டு பிறக்கும் போது சூரியன் 6-லும், புதன் 5-லும் அமர்ந்திருப்பதால் அரசு காரியங்கள் சுலபமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். நட்பால் ஆதாயமடைவீர்கள். ஆனால், சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால், வாகன விபத்து, சளித் தொந்தரவு, அலர்ஜி, தொண்டை வலி வந்து போகும். கணவன் – மனைவிக்குள் சின்னச் சின்ன மோதல்கள் வரும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகமாகும்.

- Advertisement -

வருட ஆரம்பத்திலிருந்து 2.10.18 வரை உங்கள் ராசிக்கு 6 மற்றும் 9-ஆம் இடங்களுக்கு உரிய குருபகவான் 4-ல் இருப்பதால் எதையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது. தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். தாயின் உடல் நலன் சிறு அளவில் பாதிக்கப்படக்கூடும். வீட்டுப் பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். சொத்து வாங்குவதற்கு முன்பு வழக்கறிஞரிடம் கலந்து ஆலோசிப்பது நல்லது. பொதுவாக எந்தச் சொத்து வாங்கினாலும் வாழ்க்கைத்துணையின் பெயரில் வாங்குவது நல்லது.. ஆனால், 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்திலும் மற்றும் 3.10.18 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டிலும் அமர்வதால், புதிய எண்ணங்கள் செயல் வடிவம் பெறும். குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகன் அல்லது மகளுக்கு தடைப்பட்ட திருமணம் கூடி வரும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
astrology wheel

1.1.18 முதல் 13.1.18 வரை சூரியனும், சனியும் 6-ல் அமர்ந்திருப்பதால், பிள்ளைகளால் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். பணபலம் அதிகரிக்கும்.

10.3.18 முதல் 2.5.18 வரை உள்ள காலக்கட்டங்களில் செவ்வாயுடன் சனி சேர்வதால், மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டாகும்.

3.5.18 முதல் 30.10.18 வரை செவ்வாயுடன் கேது சேர்வதால், வாழ்க்கைத்துணைக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். பிள்ளைகளால் அலைச்சல் ஏற்படக்கூடும்.

1.1.18 முதல் 13.1.18 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்பு இருக்கும். வாழ்க்கைத்துணை வழி உறவினருடன் மனக்கசப்பு ஏற்பட்டு நீங்கும்.
astrology-wheel

வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள் ராகுவும், 7-ல் கேதுவும் இருப்பதால், முன்கோபம், மனதில் ஒருவித சஞ்சலம், எதிலும் ஆர்வமில்லாத நிலை, தலைச்சுற்றல் வந்து செல்லும். கணவன் – மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னைகள் வரக்கூடும் வாழ்க்கைத்துணைக்கு மருத்துவச் செலவுகள், அவருடன் மோதல்கள் வந்து போகும்.

வியாபாரிகளே! வியாபாரத்தில் கடையை நவீன மயமாக்குவீர்கள். பொறுப்பில்லாத வேலையாள்களை மாற்றுவீர்கள். விளம்பர யுக்திகளை சரியாகக் கையாண்டு பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். திடீர் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அயல்நாட்டுத் தொடர்புடனும் வியாபாரம் செய்வீர்கள். பதிப்பகம், கன்ஸ்ட்ரக்ஷன், மூலிகை வகைகளால் லாபம் அடைவீர்கள்.
astrology

உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அலுவலகம் சம்பந்தமாக வெளி மாநிலம், வெளிநாடு செல்ல வேண்டி வரும். ஆனாலும் அதிகாரிகள் ஒருதலை பட்சமாக செயல்பட வாய்ப்பிருக்கிறது. சக ஊழியர்களால் சின்னச் சின்ன இடையூறுகளைச் சமாளிக்க வேண்டி வரும்.

மாணவ – மாணவியரே! உங்களுடைய பொது அறிவுத் திறன் வளரும். விடைகளை ஒருமுறைக்கு இருமுறை சொல்லிப் பார்ப்பது, எழுதிப் பார்ப்பது நல்லது. நீங்கள் எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வியைத் தொடருவீர்கள். பெற்றோர் உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள்.

கலைத்துறையினரே! உங்களின் கற்பனை விரிவடையும். சக கலைஞர்களை மதிப்பீர்கள். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள்.

இந்த ஆண்டு உங்களைச் சுற்றியிருப்பவர்களைப் புரிந்துகொள்ள வைப்பதுடன், நீண்ட கால கனவுகளை நனவாக்குவதாகவும் அமையும்.
astrology

பரிகாரம்:

கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள ஈச்சனாரி எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவிநாயகப் பெருமானை சதுர்த்தி திதியில் சென்று வணங்கி வர நன்மைகள் அதிகரிக்கும்.

கடக ராசிக்கான பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யுங்கள்

மற்ற ராசிக்கான பலன்களை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

English Overview

2018 new year Rasi Palan in Tamil for kadagam is explained above in detail. This year you will get the feel to achieve something new.

You will get friendship with some high society people. you will solve most difficult problems too. Friendship circle will expand. You will buy costly things. You will easy get loan for your business and to expand your house.