- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 22 ஆகஸ்ட் 2026

இன்றைய ராசிபலன் – 22 ஆகஸ்ட் 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதியான நாளாக இருக்கும். அமைதியாக இந்த நாள் செல்லும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும். குடும்ப பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர நிறைய வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். புது நண்பர்களின் அறிமுகம் நிறைய நல்ல அனுபவங்களை கொடுக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையொப்பம் ஆகும். வேலையில் ப்ரமோஷனுக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்தி உண்டு.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டுகள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். நீண்ட தூர பயணங்களால் நன்மை நடக்கும்.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். பிரச்சனைகள் வந்தாலும் அதை தைரியத்தோடு நிதானமாக எதிர்கொள்வீர்கள். பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வையும் உங்களால் எடுக்க முடியும். பக்குவம் வெளிப்படும். நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். சுப செலவுகள் ஏற்படும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். மன நிம்மதி அடைவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உங்களுடைய பொறுப்புகளை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பயம் பதட்டம் நிறைந்த நாளாக இருக்கும். புது முடிவுகள் எடுக்கும் போது நிதானமாக செயல்பட வேண்டும். தேவையில்லாத பஞ்சாயத்துக்கு செல்ல வேண்டாம். வம்பு வழக்குகளில் போய் முன்னால் நிற்க வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் போதும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சௌகரியமான நாளாக இருக்கும். உங்களுக்கு தேவையான நேரத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். உறவுகள் நண்பர்களுடைய அருமை பெருமைகளை நன்றாக தெரிந்து கொள்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்கள் இன்று வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் புது முடிவுகள் எடுக்கலாம், லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் நிதானம் தேவை. உடன் வேலை செய்பவர்களை முழுசாக நம்ப வேண்டாம். அநாவசியமாக அடுத்தவர்களை பற்றி புறம் பேசாதீர்கள். தேவையில்லாத விஷயங்களை இன்று பேசாமல் இருப்பது நல்லது.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். வீட்டை பராமரிக்கும் வேலை, வீட்டில் பழுது போன பொருட்களை சரி செய்யும் வேலைகள் என்று நல்லபடியாக நடந்து முடியும். உறவுகளுக்குள் இருந்து வந்த மன கசப்பு சரியாகும்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். யோகக்காரர்களாக வலம் வருவீர்கள். நீங்கள் நினைத்த நல்லது மட்டுமல்ல, நினைக்காத பல நல்லது இன்று நடக்க காத்துக்கொண்டிருக்கிறது. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். உங்களால் முடிந்த உதவியை இயலாதவர்களுக்கு செய்யுங்கள்.

கும்பம்


கும்பராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அது விரைய செலவாகவும் இருக்கலாம், சுப செலவாகும் இருக்கலாம். ஏதாவது ஒரு வகையில் பணம் உங்கள் கையை விட்டு செல்லும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமுகமான போக்கு இருக்கும். சில பேருக்கு கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை இருக்கும். அதிக வட்டிக்கு கடன் வாங்காதீங்க பாத்துக்கோங்க.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். குடும்பத்தின் மீது திருஷ்டி விழ வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு நடக்கும் நன்மைகளை வெளிப்படையாக யாரிடமும் சொல்லாதீங்க.

சற்று முன்