2018 புத்தாண்டு ராசி பலன் – கும்பம்

astrology

கும்பம் – அவிட்டம் 3,4-ம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3-ம் பாதம் – 2018 ராசி பலன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உயர்ந்த லட்சியங்களைக் கொண்டவர்களே!

உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டுக்கு உரிய சூரியன், லாப வீட்டில் வலுவாக இருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், ஆளுமைத் திறன், நிர்வாகத் திறமை அதிகரிக்கும். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். வாஸ்துப்படி வீட்டை மாற்றி அழகுபடுத்துவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். வாழ்க்கைத்துணை வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும்.

பார்வைப் பலன்கள்

புத்தாண்டின் தொடக்கம் முதல் 2.10.18 வரை குருபகவான் 9-ம் வீட்டில் வலுவாக இருப்பதால், முடியாத வேலைகளையும் சுலபமாக முடித்துக் காட்டுவீர்கள். தொழிலதிபர்கள், உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். தினமும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் திறமைகளைக் கண்டறிந்து வளர்ப்பீர்கள். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். தந்தையின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆனால், 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்திலும் மற்றும் 3.10.18 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களுடைய ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்வதால், சிறுசிறு அவமானம், ஏமாற்றம் வந்து நீங்கும். பழைய பிரச்னைகள், சிக்கல்கள் மீண்டும் வந்துவிடுமோ என்றெல்லாம் அச்சப்படுவீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். சில நேரங்களில் தர்மசங்கடமான சூழ்நிலைகளில் சிக்குவீர்கள்.
astrology-wheel

ஆண்டு முழுவதும் சனிபகவான் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பும் அதனால் ஆதாயமும் கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் வார்த்தைக்கு மதிப்புத் தருவார்கள். சிலர் வாஸ்துப்படி வீட்டை மாற்றி அழகுபடுத்துவீர்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். அடகில் இருந்த நகை மற்றும் வீட்டுப் பத்திரங்களை மீட்பீர்கள். மகளின் திருமணத்தை விமர்சையாக நடத்துவீர்கள். மகனுக்கு வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பொது விழாக்களில் கௌரவிக்கப்படுவீர்கள். வீடு அல்லது மனை வாங்கவேண்டும் என்ற ஆசை இப்போது நிறைவேறும். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

- Advertisement -

1.1.18 முதல் 13.1.18 வரை சூரியன் சனியுடன் சேர்வதால் இக்காலக்கட்டத்தில் போராட்டங் களைச் சமாளிக்கும் பக்குவம் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. பூர்விகச் சொத்தால் வருமானம் வரும்.
astrology wheel

10.3.18 முதல் 2.5.18 வரை செவ்வாய் சனியுடன் சம்பந்தப்பட்டு பலவீனமடைவதால் சின்னச் சின்ன காரியங்கள் கூட தடைப்பட்டு முடிவடையும். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகளும் இருக்கும். மற்றவர்களுக்கு ஜாமீன் தரவேண்டாம். சொத்து வாங்கும்போது தாய்ப்பத்திரத்தை சரி பார்த்து வாங்குவது நல்லது.

2.5.18 முதல் 30.10.18 வரை ராசிநாதன் செவ்வாய், கேதுவுடன் இணைவதால் சொன்ன சொல்லை நிறைவேற்ற முடியாமல் போகும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சித்துப் பேச வேண்டாம். சகோதர வகையில் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

11.6.18 முதல் 4.7.18 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், வாகனப் பழுது ஏற்பட்டு நீங்கும். கணவன் – மனைவிக்குள் ஈகோ பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், ஒருவரை ஒருவர் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது.
astrology-wheel

புத்தாண்டு தொடக்கம் முதல் வருடம் முடியும்வரை ராகு 6-ல் தொடர்வதால், மறைமுக எதிரிகளால் ஆதாயம் அடைவீர்கள். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிப்பீர்கள். தடைப்பட்ட திருமணம் கூடி வரும். பொது நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும். அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பால்ய நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். புதுப் பதவிகள் தேடி வரும். கேது 12-ல் இருப்பதால், நீண்ட நாள்களாகப் போக நினைத்த குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக்கடனை செலுத்துவீர்கள். திடீர்ப் பயணங்களும் அலைச்சல்களும் இருக்கத்தான் செய்யும். பணப் பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

வியாபாரிகளே! விற்பனை அதிகரிக்கும். இரட்டிப்பு லாபம் கிடைக்கும். அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்து வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பீர்கள். வேலையாள்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். கடையை விரிவுபடுத்தி அழகுபடுத்துவீர்கள். நகரின் முக்கியமான இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். உணவு வகைகள், ஃபைனான்ஸ், தோல் பொருள்கள், ஆட்டோ மொபைல் வகைகளால் ஆதாயம் உண்டாகும். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து சேர்ந்துகொள்வார். வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வீர்கள்.
astrology

உத்தியோகத்தில் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சவாலான காரியங்களையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். முக்கிய பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களும் மதிப்பார்கள். பதவி உயர்வுக்காக உங்களது பெயர் பரிசீலிக்கப்படும். எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். சம்பளம் உயரும்.

மாணவ – மாணவியரே! பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி அமையும். நினைவாற்றல் அதிகரிக்கும். கட்டுரை, கவிதைப் போட்டிகளில் கலந்துக்கொண்டு பரிசு, பாராட்டைப் பெறுவீர்கள்.

கலைத்துறையினரே! அயராத உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள். உங்களுடைய படைப்புத் திறன் வளரும்.

இந்தப் புத்தாண்டு உங்களை விஸ்வரூபமெடுக்க வைப்பதுடன், திடீர் யோகங்களையும், வெற்றியையும் அள்ளித் தருவதாக அமையும்.
astrology

பரிகாரம்:

திருவாரூர் அருகிலுள்ள ராஜமன்னார்குடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீவாசுதேவப் பெருமாளையும், ஸ்ரீசெங்கமலத் தாயாரையும் சனிக்கிழமையில் சென்று வணங்குங்கள்.

கும்ப ராசிக்கான பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யுங்கள்

மற்ற ராசிக்கான பலன்களை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

English Overview

2018 new year Rasi Palan in Tamil for Kumbam is explained above in detail. This year management skills will get improved in good manner.

You will be successful in all risky things. This Year you will get good amount of money from any source. You may do some work in house as per Vasthu. There will be good understanding between husband and wife and both will guide each other.