2018 புத்தாண்டு ராசி பலன் – மகரம்

Astrology

மகரம் – உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம் –  2018 ராசி பலன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தன்மானமே பெரிதாக நினைப்பவர்களே!

சந்திரன் 5-ல் இருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால், அடிப்படை வசதி வாய்ப்புகள் பெருகும். வருமானத்தை உயர்த்த அதிகம் உழைப்பீர்கள். புதிய சிந்தனைகள் உதயமாகும். வருங்காலத் திட்டங்கள் நிறைவேறும். சாதுர்யமான பேச்சாலும், சமயோசித புத்தியாலும் பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். கட்டட வேலைகளைத் தொடங்க வங்கி கடன் உதவி கிடைக்கும். சிலர் பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள்.

பார்வைப் பலன்கள்

ஆண்டு முழுவதும் ராசிக்குள் கேதுவும் 7-ல் ராகுவும் தொடர்வதால், எதிலும் ஒருவித சலிப்பு ஏற்படக்கூடும். எவ்வளவு பணம் வந்தாலும் அடுக்கடுக்கான செலவுகளும் ஏற்படும்.
astrology-wheel

கடன்களை நினைத்த கவலை வந்து போகும். கணவன் – மனைவிக்கு இடையில் வீண் சந்தேகம் மற்றும் ஈகோ பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத்துணைக்கு சிறுசிறு ஆரோக்கியக் குறைபாடுகள் வந்து செல்லும். உத்தியோகம் மற்றும் வியாபாரத்தின் காரணமாக குடும்பத்தை விட்டுத் தற்காலிகமாகப் பிரிந்து செல்ல நேரிடும்.

- Advertisement -

புத்தாண்டின் தொடக்கம் முதல் 2.10.18 வரை உங்கள் ராசிக்கு 3 மற்றும் 12-க்கு உடைய குருபகவான், 10-ம் வீட்டில் நிற்பதால், வேலைச்சுமை அதிகரித்தபடி இருக்கும். அடிக்கடி டென்ஷன் உண்டாகும். சின்னச் சின்ன ஏமாற்றங்கள் வந்து செல்லும். எதிலும் ஈடுபாடு இல்லாத நிலை வந்து செல்லும். அடிக்கடி சிந்தனையில் மூழ்கிவிடுவீர்கள். வாகனம் பழுதாகும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடவேண்டாம். ஆனால், 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்திலும் மற்றும் 3.10.18 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களுடைய ராசிக்கு 11-ம் வீட்டில் சென்று அமர்வதால், புகழ், கௌரவம் ஒருபடி உயரும். பிரச்னைகளை நேருக்குநேராக எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை வழியில் செல்வாக்கு உயரும். அடகிலிருந்த நகைகளை மீட்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கி, அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனைத் தந்து முடிப்பீர்கள்.
astrology wheel

ஆண்டு முழுவதும் ராசிநாதனும் தனஸ்தானாதிபதியுமான சனிபகவான் 12-ல் விரயச் சனியாகத் தொடர்வதால், வீண் பழி, பண இழப்பு, ஏமாற்றங்கள் வந்து போகும். தன்னம்பிக்கை குறையும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். மற்றவர்களின் ஆலோசனையை முழுமையாக ஏற்காமல் நீங்களும் ஒருமுறைக்கு பல முறை யோசித்து சில முடிவுகள் எடுப்பது நல்லது.சுபச் செலவுகள் அதிகமாகும்.

1.1.18 முதல் 13.1.18 வரை சூரியனும், சனியும் சேர்ந்திருப்பதால், அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். கடன் பிரச்சனைகளும் அதிகரிக்கும்.

10.3.18 முதல் 2.5.18 வரை செவ்வாய் சனியுடன் சேர்ந்து நிற்பதால், உங்களுடைய தனித்தன்மையை இழந்து விடாதீர்கள். யாருக்காகவும் சாட்சிக் கையொப்பமிட வேண்டாம். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து செல்லும். சொத்துக்கு உரிய ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்வது அவசியம். சகோதர வகையில் செலவுகள் இருக்கும்.

2.5.18 முதல் 30.10.18 வரை செவ்வாய், கேதுவுடன் இணைவதால் உணர்ச்சிவசப்பட்டு யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். அடுத்தவர்களைப் பற்றி வெளியிடங்களில் விமர்சித்துப் பேசவேண்டாம். அவசரப்பட்டுப் பேசி பால்ய நண்பர்களைப் பகைத்துக்கொள்ளவேண்டாம்.
astrology-wheel

16.5.18 முதல் 10.6.18 வரை சுக்கிரன் 6 -ல் மறைவதால், சிறுசிறு வாகன விபத்துகள் வந்து நீங்கும். எலெக்ட்கரானிக்ஸ் சாதனங்கள் அடிக்கடி பழுதாகும்.

வியாபாரிகளே! மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு அனுபவமில்லாத தொழிலில் முதலீடு செய்யவேண்டாம். வியாபார ரகசியங்கள் வெளிவராமல் பார்த்துக்கொள்ளுங்கள். விளம்பர யுக்திகளைக் கையாண்டு விற்பனையை அதிகரிப்பீர்கள். பழைய பாக்கிகளைப் போராடித்தான் வசூலிக்கவேண்டி இருக்கும். வேலையாள்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. பங்குதாரர்கள் வழக்கம்போல் முணுமுணுப்பதைப் பெரிதுபடுத்தவேண்டாம். ஏற்றுமதி – இறக்குமதி, கட்டுமானம், பவர் புராஜெக்ட் வகைகளால் லாபம் அடைவீர்கள். சந்தை நிலவரம் அறிந்து புது ஏஜென்சி எடுக்கவும்.

உத்தியோகத்தில் நீங்கள் பொறுப்பாக நடந்து கொண்டாலும், மேலதிகாரி குறை கூறத்தான் செய்வார். கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டி வரும். ஆனி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் புது வேலை வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். இழந்த சலுகைகளைப் போராடிப் பெறுவீர்கள். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்தும் வாய்ப்புகள் வரும்.
astrology

மாணவ – மாணவியரே! கவனத்தைச் சிதறவிடாமல் பாடங்களில் முழுமையான கவனம் செலுத்துவது அவசியம். கணிதம் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் கூடுதல் அக்கறை தேவைப்படுகிறது.

கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவுக்குப் பிரபலமாவீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு

புத்தாண்டு போராட்டங்கள் நிறைந்ததாக இருந்தாலும், தன் கையே தனக்கு உதவி என்பதை உணர்த்துவதாக அமையும்.
astrology

பரிகாரம்:

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையில் அருள்புரியும் ஸ்ரீமுருகப் பெருமானை சஷ்டி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.

மகர ராசிக்கான பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யுங்கள்

மற்ற ராசிக்கான பலன்களை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

English Overview

2018 new year Rasi Palan in Tamil for Magaram is explained above in detail. This year the range of your necessary things will get improved. You will work hard to improve your profit.

This year you will get some good ideas. You will solve all your problems with your skills and words. Some may get baby. Your range will get improved before your relatives because of your children. You will get bank loan for your business. somebody may renovate their house.