2018 புத்தாண்டு ராசி பலன் – மீனம்

Astrology

மீனம் – பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி – 2018 ராசி பலன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்து வந்த பாதையை மறக்காதவர்களே!

உங்கள் ராசிக்கு 3-ல் சந்திரன் இருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால், சவாலான காரியங்களையும் சாதுர்யமாக முடித்து வெற்றி பெறுவீர்கள். தடைகள் யாவும் நீங்கும். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதியவர்கள் அறிமுகவார்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வருங்காலத்திற்காக சேமிக்கவும் தொடங்குவீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக்கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். பழைய இடத்தை விற்று புது சொத்து வாங்குவீர்கள்.

பார்வைப் பலன்கள்

ஆண்டு முழுவதும் ராகு 5-ல் இருப்பதால், பிள்ளைகளின் போக்கு கவலை தருவதாக அமையும். அவர்களின் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது.தாய்வழி உறவினர்களிடையே மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். பூர்வீகச் சொத்துக்காக செலவு செய்யவேண்டி இருக்கும். மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்கவேண்டாம். கேது உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் அமர்வதால், பழைய சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். உடன்பிறந்த வர்கள் மிகுந்த அன்புடன் நடந்துகொள்வார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும்.
astrology-wheel

புத்தாண்டின் தொடக்கத்தில் இருந்து 2.10.18 வரை உங்கள் ராசிநாதனும் ஜீவனாதிபதியுமான குருபகவான், 8-ல் இருப்பதால், பணம் எவ்வளவு வந்தாலும் செலவுகளும் துரத்தும். என்றாலும் திடீர் பணவரவு உண்டு. ஆனால், 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்திலும் மற்றும் 3.10.18 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களுடைய ராசிக்கு 9-ம் வீட்டில் சென்று அமர்வதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த மோதல் போக்கு மாறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். பூர்வீகச் சொத்தில் சீர்திருத்தம் செய்வீர்கள். தாய்வழியில் இருந்த மனக் கசப்புகள் நீங்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

- Advertisement -

செவ்வாய் 8-ல் இருக்கும்போது வருடம் பிறப்பதால், சொத்து விஷயங்களை சுமுகமாகப் பேசித் தீர்த்துக்கொள்வது நல்லது. வாழ்க்கைத்துணைக்கு சிறுசிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டு சரியாகும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அளவோடு பழகவும்.
astrology wheel

வருடம் முழுவதும் சனி பகவான் 10-ல் தொடர்வதால், மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நட்பு வட்டம் விரியும். புதுப் பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். தந்தை வழியில் அனுகூலம் உண்டு. அரசு காரியங்கள் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

ஆண்டின் தொடக்கம் முதல் 13.1.18 வரை சூரியனுடன் சனி சேர்ந்திருப்பதால்,எதிர்பாராத பணவரவு உண்டு. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

10.3.18 முதல் 2.5.18 வரை சனியுடன் செவ்வாய் சேர்ந்திருப்பதால், எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. சகோதரர்களை அனுசரித்துச் செல்லவும்.
astrology-wheel

2.5.18 முதல் 30.10.18 வரை செவ்வாய் கேதுவுடன் இணைந்திருப்பதால், பணவரவு அதிகரிக்கும். பழைய கடன்களைத் தந்து முடிக்க வழி பிறக்கும். வெளிநாட்டில் இருக்கும் உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். பிற மொழி பேசுபவர்களால் நன்மை ஏற்படும்.

5.7.18 முதல் 1.8.18 வரை சுக்கிரன் 6-ல் நிற்பதால் வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பழைய கடன்களைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். சிறிய அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, உரிய சிகிச்சையினால் உடனே சரியாகிவிடும்.

வியாபாரிகளே! புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். போட்டியாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடியாகச் செயல்படுவீர்கள். சொந்த இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். நவம்பர், டிசம்பர் மாதங்களில் லாபம் இரட்டிப்பாகும். தள்ளிப் போன வியாபார வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். பெரிய நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில் இறங்கி அதிக லாபம் ஈட்டுவீர்கள். உணவு,ஷேர், சிமெண்ட், செங்கல்,ஏற்றுமதி, இறக்குமதி வகைகளால் பெரும் பணம் சம்பாதிப்பீர்கள்.
astrology

உத்தியோகத்தில் செல்வாக்கும் மரியாதையும் கூடும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். புது சலுகைகளுடன் சம்பள உயர்வும் கிடைக்கும். மேலதிகாரிகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, இணக்கமான சூழ்நிலை ஏற்படும். முக்கியப் பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

மாணவ – மாணவியரே! சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். பாடங்களை ஆர்வத்துடன் படிப்பீர்கள். நினைவாற்றல் அதிகரிக்கும். உயர்கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள்.

கலைத்துறையினர்களே! அரசால் கௌரவிக்கப்படுவீர்கள். உங்களின் படைப்புகளுக்கு மதிப்பு மரியாதை கூடும்.

புத்தாண்டு தொடக்கம் ஏமாற்றம் தருவதாக இருந்தாலும், வருடத்தின் பிற்பகுதியில் இருந்து உங்களை உயர்த்திவிடுவதாக அமையும்.
astrology

பரிகாரம்:

திருவண்ணாமலை மாவட்டம், எறும்பூர் என்னும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீதிரிபுரசுந்தரி உடனுறை ஸ்ரீபட்சீஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள்.

மீன ராசிக்கான பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யுங்கள்

மற்ற ராசிக்கான பலன்களை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

English Overview

2018 new year Rasi Palan in Tamil for Meenam is explained above in detail. In this year you will complete all the tricky work. All the burdens will get away. You will get some big decision this Year.

You will get intro with some new people.Pending money will come to your hand.  Judgement will be favour for you. You will fulfill all the basic needs of our family. You will get new vehicle.