2018 புத்தாண்டு ராசி பலன் – மேஷம்

Astrology

மேஷம் – அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்  –   2018 ராசி பலன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சோதனைகளையும் சாதனைகளாக மாற்றுபவர்களே!

உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் சந்திரன் நிற்கும் இடத்தில் புத்தாண்டு பிறப்பதால், வரவேண்டிய பணம் வந்து சேரும். வாங்கிய கடனைத் தந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். புது வாகனம் வாங்குவீர்கள்.

பார்வைப் பலன்கள்

2.10.18 வரை குருபகவான் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால், உடல் ஆரோக்கியம் மேம்படும். திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்க்கைத்துணைவி உங்கள் முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பார். திருமணம் கூடி வரும். தந்தை வழியில் ஆதரவு பெருகும். ஷேர் மூலம் பணம் வரும். ஆனால், 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்திலும், 3.10.18 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 8-ல் சென்று மறைவதாலும் சின்னச் சின்ன விஷயங்களையும் போராடித்தான் முடிக்கவேண்டி இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் தோன்றக்கூடும். பணப் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்பதால் சிலர் கடன் வாங்கவும் கூடும். வீட்டிலும் பயணத்தின்போதும் விலையுயர்ந்த பொருள்கள் களவு போகக்கூடும் என்பதால் கூடுதல் கவனம் தேவைப்படும். அடிக்கடி தாழ்வு மனப்பான்மை ஏற்படக்கூடும். உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருக்கவேண்டியது அவசியம்.

astrology-wheel

- Advertisement -

வருடம் பிறக்கும்போது ராசிநாதன் செவ்வாய் 7-ல் இருப்பதால்,கணவன் – மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடன்பிறந்தவர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். சொத்துகள் வாங்குவது விற்பதில் வில்லங்கம் ஏற்பட்டு நீங்கும்.

உங்கள் ஜீவனாதிபதியும் லாபாதியுமான சனிபகவான் வருடம் முழுவதும் 9-ம் இடத்திலேயே தொடர்வதால், தன்னம்பிக்கை கூடும். பெரிய பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். தெளிவாகச் சிந்தித்து பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெறும். புதுப் பதவி மற்றும் பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். பிற மொழி பேசுபவர்களால் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும். மகளின் திருமணத்தை விமர்சையாக நடத்தி முடிப்பீர்கள். ஆனால், தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

புத்தாண்டின் தொடக்கத்தில் சூரியன் பகை கிரகமான சனியுடன் இணைந்திருப்பதால், பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட கவலைகள் வந்து போகும். பூர்வீகச் சொத்து பிரச்னையில் பொறுமை காப்பது அவசியம்.

astrology wheel

10.3.18 முதல் 2.5.18 வரை சனியும் செவ்வாயும் சேர்ந்திருப்பதால், தந்தை வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்ற வாய்ப்பு உள்ளது. மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம்.

2.8.18 முதல் 29.8.18 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், கணவன் – மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும் என்பதால், ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. விலையுயர்ந்த ஆபரணங்கள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

வருடம் முழுவதும் ராகு 4-லும் கேது 10-லும் இருப்பதால், சிலருக்கு வீடு மாறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படக்கூடும். தாயாரின் அறிவுரைப்படி நடப்பது மிகவும் அவசியம். அவருடைய உடல் நலனிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. புறநகர்ப் பகுதியில் இருக்கும் சொத்துகளை மற்றவர்கள் ஆக்கிரமிக்கக்கூடும் என்பதால் கூடுதல் கவனத்துடன் இருக்கவும். வழக்குகளில் வழக்கறிஞரின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது.

astrology-wheel

வியாபாரத்தில் புது வியூகம் அமைத்து கூடுதல் லாபம் ஈட்டுவீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். சிலர் வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரிகள் சங்கத்தில் முக்கியப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பணியாளர்களின் குறைகளை பக்குவமாக சுட்டிக் காட்டித் திருத்துவீர்கள். பிரபலங்களும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். உணவகம், தங்கும் விடுதி, சிமெண்ட் வகைகளால் ஆதாயம் உண்டாகும். வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால், ராகு 4-ல் இருப்பதால், கூட்டுத் தொழிலில் கவனம் தேவை.

உத்தியோகத்தில் ஜீவனாதிபதி சனி சாதகமாக இருப்பதால், அலுவலகத்தில் மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். புதிதாக வரும் அதிகாரி உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவார். கேது 10-ல் தொடர்வதால் பணிச் சுமை அதிகரிக்கும். உங்கள் உழைப்பைப் பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவார்கள். அலுவலகத்தில் ஆதரவும் எதிர்ப்பும் கலந்துதான் காணப்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் சற்று தாமதமாகத்தான் கிடைக்கும். சிலருக்கு பணியின் காரணமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

astrology

மாணவ மாணவியர்களே! ஆசிரியரிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். படிப்பில் மட்டுமல்லாமல் கலைப் போட்டிகளிலும் கலந்துகொண்டு பரிசும் பாராட்டும் பெறுவீர்கள். உயர்கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெற்று விரும்பியப் பாடப்பிரிவில் சேருவீர்கள்.

கலைத்துறையினரே! உங்களின் நீண்டநாள் கனவு நனவாகும்.

பெரிய நிறுவனங்களில் இருந்து வாய்ப்புகள் வரும். புகழ், கௌரவம் உயரும்.

இந்தப் புத்தாண்டு உங்களை முன்னேற வைப்பதுடன் எதிர்காலத் திட்டங்களையும் நிறைவேற்றுவதாக அமையும்.

astrology

பரிகாரம்: 

விழுப்புரம் மாவட்டம் இரும்பை என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு குயில்மொழி நாயகி சமேத அருள்மிகு மகா காளேஸ்வரரை பிரதோஷ நாளில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கும்.

மேஷ ராசிக்கான பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யுங்கள்

மற்ற ராசிக்கான பலன்களை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

English Overview

2018 new year Rasi Palan in Tamil for Mesham is explained above in detail. If you do the above parigaram then it will increase the benefits for sure. Enjoy the year.

This year will be really great for Mesha rasi. You will get all those money which you required. You will solve loan problems. There will be happines in your family. The Faith for your words will get increase. You will buy new vehicles.