2018 புத்தாண்டு ராசி பலன் – மிதுனம்

Astrology

மிதுனம் – மிருகசீரிடம் 3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்   2018 ராசி பலன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எதையும் மறைக்காமல் பேசுபவர்களே!

சுக்கிரன் உங்கள் ராசியைப் பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் புத்தாண்டு பிறப்பதால், உங்கள் திறமைகள் வெளிப்படும். பிரச்னைகளின் மூலத்தைக் கண்டறிந்து களைவீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பழைய நகையை மாற்றி புது டிசைனில் நகை வாங்குவீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். நல்ல காற்றோட்டம் மற்றும் குடிநீர் வசதியுள்ள வீட்டுக்கு மாறுவீர்கள். சிலருக்கு சொந்தமாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று நடப்பார்கள்.

பார்வைப் பலன்கள்:

ஆண்டின் தொடக்கம் முதல் 2.10.18 வரை குருபகவான் 5-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், மாறுபட்ட சிந்தனையால் செயற்கரிய வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வருமானம் உயரும். கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல குடும்பத்தில் இருந்து வரன் அமையும். மகனுக்கு வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும். குடும்பத் தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். செல்வாக்கு கூடும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதரவு பெருகும். புதுப் பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும். அரசாங்க வகையில் அனுகூலம் உண்டாகும். ஆனால் 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்திலும் மற்றும் 3.10.18 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களுடைய ராசிக்கு 6-ம் வீட்டில் சென்று மறைந்து சகட குருவாக அமர்வதால், இனம்தெரியாத கவலைகள் வந்து போகும். கணவன் – மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. அடிக்கடி தர்மசங் கடமான சூழ்நிலையைச் சமாளிக்கவேண்டி வரும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
astrology-wheel

புத்தாண்டு உங்கள் ராசிக்கு 12-ல் சந்திரன் இருக்கும்போது பிறப்பதால், ஆதாயம் இருந்தாலும் அலைச்சலும் இருக்கும். பணம் எவ்வளவு வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். பால்ய நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை மறுபடியும் தொடங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

- Advertisement -

புத்தாண்டின் தொடக்கத்தில் புதன் 6-ல் மறைந்திருப்பதால், நரம்புச் சுளுக்கு, கழுத்து வலி, காய்ச்சல் வந்து செல்லும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்வார் கள். செவ்வாய் 5-ல் இருப்பதால், பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். சொத்து வாங்குவது விற்பதில் வில்லங்கம் ஏற்பட்டு நீங்கும். சகோதரர்களை அனுசரித்துச் செல்லவும்.

ஆண்டு முழுவதும் சனி 7-ல் கண்டகச் சனியாக இருப்பதால், கணவன் – மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத்துணை அடிக்கடி கோபப்பட்டுப் பேசினாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டாம். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் சிறு அளவில் பாதிக்கப்படக்கூடும். மற்றவர்களின் விமர்சனத்தைப் பொருட்படுத்தவேண்டாம். குடும்ப விஷயத்தில் மற்றவர்களின் தலையீட்டை அனுமதிக்கவேண்டாம். வழக்குகளால் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். கைப் பொருள்களை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை தலைதூக்கும்.
astrology wheel

13.1.18 வரை சூரியன் சனியுடன் சேர்ந்திருப்பதால் இளைய சகோதர வகையில் அலைச்சல் ஏற்படக்கூடும். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்கவேண்டும்.

10.3.18 முதல் 2.5.18 வரை செவ்வாயுடன் சனி சேர்ந்திருப்பதால், வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டாலும் உடனே சரியாகிவிடும்.

3.5.18 முதல் செவ்வாய் கேதுவுடன் சேர்ந்திருப்பதால், மற்றவர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாறவேண்டாம். கணவன் – மனைவிக்குள் ஈகோ பிரச்னை ஏற்பட்டு சரியாகும். இரவில் தொலைதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

வருடம் முழுவதும் 2-ல் ராகுவும் 8-ல் கேதுவும் தொடர்வதால், மற்றவர்களைப் புரிந்து கொள்வதில் தடுமாற்றம் ஏற்படும். அடிக்கடி மனதில் இனம் தெரியாத அச்சம் ஏற்பட்டு விலகும்.
astrology-wheel

பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. சிலருக்கு கண்களில் சிறு கோளாறு ஏற்பட்டு சரியாகும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரனையாக நடந்துகொள்வது நல்லது. வயதில் குறைந்தவர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படக்கூடும். அடுத்தவர்களின் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வரவுக்கு அதிகமான செலவுகள் ஏற்படும்.

வியாபாரிகளே! வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். புதிய சலுகைத் திட்டங்களை அறிமுகப் படுத்துவீர்கள். சந்தை நிலவரங்களை உஷாராக கவனிக்கவேண்டும். பெரிய முதலீடுகள் எதுவும் வேண்டாம். பிரபலமானவர்கள் வாடிக்கையாளர்களாக அறிமுகமா வார்கள். வெளிநாடு, வெளி மாநிலத்துடன் வியாபாரத் தொடர்புகள் விரிவடையும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கத்தாலும் ஆதாயம் ஏற்படும். கடையை சொந்த இடத்துக்கு மாற்றும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தேவையான கடனுதவி கிடைக்கும். பங்குதாரர்களை மாற்றவேண்டி வரும். பங்குதாரர்களை மாற்றவேண்டி வரும். பிளாஸ்டிக், கெமிக்கல், உணவு, வாகன உதிரி பாகங்களால் லாபம் அதிகரிக்கும்.
astrology

உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களுடைய ஆலோசனைகளை அதிகாரிகள் ஏற்றுக்கொள்வார்கள். சக ஊழியர்களுக்கு சலுகைகள் பெற்றுத் தருவீர்கள். சம்பள உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகளை எதிர்பார்க்கலாம். சிலருக்கு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அதன் மூலம் புதுப் பதவி உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் ஏற்படும்.

மாணவ – மாணவியர்களே! படிப்பில் முன்னேறுவீர்கள். விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோர் உங்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள். நண்பர்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

கலைத்துறையினரே! உங்களுக்கு எதிரான விமர்சனங்கள் வரத்தான் செய்யும். ஆனால், புதிய வாய்ப்புகளும் வரும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். வேற்று மொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள்.

இந்தப் புத்தாண்டு சின்னச் சின்ன எதிர்ப்புகளை ஏற்படுத்தினாலும் மாற்றுப் பாதையில் சென்று வெற்றி பெற வைக்கும்.
astrology

பரிகாரம்:

நாகப்பட்டினம் மாவட்டம் தகட்டூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபைரவரை தேய்பிறை அஷ்டமி திதி நாளில் சென்று வணங்கி வர நற்பலன்கள் அதிகரிக்கும்.

மிதுன ராசிக்கான பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யுங்கள்

மற்ற ராசிக்கான பலன்களை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

English Overview

2018 new year Rasi Palan in Tamil for Mithunam is explained above in detail. In general this year you will find the solution for yours problems.

you will exchange your old gold ornaments and you will get news designs. You will get intro of some good people. you will shift to new house with good water and air. some people can buy own house too. some of you may go to other countries.