2018 புத்தாண்டு ராசி பலன் – சிம்மம்

astrology-10

சிம்மம் – மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம் –  2018 ராசி பலன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீதி நியாயத்துக்குக் குரல் கொடுப்பவர்களே!

உங்கள் ராசிக்கு 10-ல் சந்திரன் இருக்கும்போது புத்தாண்டு பிறக்கிறது. உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். இதுவரை நீங்கள் உழைத்த உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கும். புது பதவி, பொறுப்புகள் தேடி வரும்.

பார்வைப் பலன்கள்

உங்கள் யோகாதிபதியான செவ்வாய் 3-ல் வலுவுடன் இருக்கும்போது புத்தாண்டு பிறப்ப தால்,சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பாதியில் நின்ற வேலைகள் ஒவ்வொன்றாக முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சொத்து வாங்க விரும்புவீர்கள். பூமி தொடர்பான பிரச்னை முடிவுக்கு வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தாயின் உடல்நலம் சீராகும். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும்.
astrology-wheel

உங்கள் ராசிநாதன் சூரியன் சனியுடன் சேர்ந்திருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால், அரசாங்கக் காரியங்கள் தாமதமாகி முடியும். பிள்ளைகளிடம் உங்கள் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும் என்பதால், கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. உஷ்ணம் தொடர்பான நோய்கள் வந்து செல்லும்.

- Advertisement -

புத்தாண்டின் தொடக்கம் முதல் 2.10.18 வரை உங்களின் பூர்வ புண்ணியாதிபதியும் அஷ்டமாதிபதியுமான குருபகவான் 3-ம் வீட்டில் மறைந்திருப்பதால், புதிய முயற்சிகள் தாமதமாக முடியும். ஒரே நேரத்தில் பலவேலைகளைப் பார்க்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகும். எதிர்மறை எண்ணங்களுடன் பேசுபவர்களின் நட்பை விலக்குவது நல்லது. ஆனால், 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்திலும் மற்றும் 3.10.18 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களுடைய ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவடையும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. தாய்வழி உறவுகளுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். சொத்துக்கள் வாங்கும்போது தாய்ப் பத்திரத்தை சரிபார்த்து வாங்குவது நல்லது.சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால் வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாகச் செல்லவும்.
astrology wheel

புத்தாண்டு பிறக்கும்போது சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால், சாதுர்யமாகப் பேசி காரியங்களை முடிப்பீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். பிரபலங்களின் பட்டியலில் இடம் பிடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு.

வருடம் முடியும் வரை சனி பகவான் 5-ல் இருப்பதால், முடிவு எடுப்பதில் குழப்பம் ஏற்படக்கூடும். பிள்ளைகள் பிடிவாதப் போக்கை பக்குவமாகப் பேசி மாற்றப் பார்க்கவும். மகளின் திருமணத்துக்காக கடன் வாங்க வேண்டி வரும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும். பூர்விகச் சொத்துகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. கணவன் – மனைவிக்குள் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், அனுசரித்துச் செல்வது நல்லது.
astrology-wheel

வாழ்க்கைத்துணைக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். சொத்துப் பிரச்னைகளை சுமுகமாகப் பேசித் தீர்த்துக்கொள்வது அவசியம்.

1.1.18 முதல் 13.1.18 வரை சூரியனுடன், சனி சேர்ந்திருப்பதால், செலவுகள் அதகிரிக்கும். வேலைச்சுமை அதிகரித்து சோர்வடையச் செய்யும்.

10.3.18 முதல் 2.5.18 வரை செவ்வாயும், சனியும் சேர்ந்திருப்பதால் தாயாரின் உடல் நிலை பாதிக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்துவார்கள்.

3.5.18 முதல் 30.10.18 வரை செவ்வாயும், கேதுவும் சேர்ந்திருப்பதால் வி.ஐ.பி. களுக்கு நெருக்கமாவீர்கள். ஏமாற்றுக்காரர்களை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு.

14.1.18 முதல் 7.2.18 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால் சிறுசிறு விபத்துகள் வந்து போகும். மற்றவர்களுடன் பழகும்போது பக்குவமாகப் பழகுவது நல்லது. கணவன் – மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.
astrology

ஆண்டு முழுவதும் கேது 6-ல் இருப்பதால், லட்சியத்தை நோக்கி முன்னேறுவீர்கள். தாழ்வு மனப்பான்மை விலகும். தன்னம்பிக்கை துளிர்க்கும். புறநகர்ப் பகுதியில் வீடு அல்லது மனை வாங்கும் யோகம் உண்டாகும். வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தில் இருக்கும் நண்பர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். பழைய கடன்களை வட்டியுடன் தந்து முடிப்பீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசு காரியங்கள் நல்லவிதத்தில் முடியும். ஆனால், ராகு 12-ல் தொடர்வதால், சுபச் செலவுகள் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்காதீர்கள். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். சில வேலைகளை அலைந்து திரிந்துதான் முடிக்கவேண்டி இருக்கும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். தொலைந்து போன ஆவணம் ஒன்று திரும்பக் கிடைக்கும்.

வியாபாரிகளே! போட்டிகளைச் சமாளித்து முன்னேறுவீர்கள். நவீன விளம்பர யுக்திகளைக் கையாண்டு விற்பனையைப் பெருக்குவீர்கள். கூடுதல் லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப பொருள்களைக் கொள்முதல் செய்வீர்கள். பணியாளர்களிடம் வியாபார ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ளவேண்டாம். பழைய பாக்கிகளை பக்குவமாகப் பேசி வசூலிப்பீர்கள். சினிமா, சிமெண்ட், பெட்ரோ கெமிக்கல், மர வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து கூடுதல் லாபம் அடைவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள்.

உத்தியோகத்தில் உங்களைப் பற்றி அவதூறான விமர்சனங்கள் வரக்கூடும். உங்களுக்கு நெருக்கமாக இருந்த உயர் அதிகாரி மாற்றப்படுவார். புது அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.கீழ்நிலை ஊழியர்களிடம் போராடித்தான் வேலை வாங்கவேண்டி வரும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படக்கூடும்.

மாணவ – மாணவியரே! படிப்பில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உங்கள் தனித் திறமைகளை வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள்.விரும்பிய பாடப் பிரிவில் சேருவதற்கு சிலரின் சிபாரிசு தேவைப்படும்.
astrology

கலைத்துறையினரே! ஒருபுறம் விமர்சனம் இருந்தாலும் மற்றொருபுறம் உங்களின் திறமையால் சாதித்துக் காட்டுவீர்கள். புதுப் புது வாய்ப்புகள் கிடைத்து அதிகம் சம்பாதிப்பீர்கள்.

இந்தப் புத்தாண்டு உங்கள் செயல் வேகத்தை துரிதப்படுத்துவதுடன், புதிய முயற்சிகளில் வெற்றியைத் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்:
காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீகாமாட்சி அம்மனை தசமி திதி நாளில் சென்று வணங்குவதால் கூடுதல் நன்மைகள் ஏற்படும்.

சிம்ம ராசிக்கான பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யுங்கள்

மற்ற ராசிக்கான பலன்களை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

English Overview

2018 new year Rasi Palan in Tamil for Simam is explained above in detail. This year your management skills will get improved.

This year you will get benefits for all your work. You may get chance to go to some foreign countries. There will be happiness in your family. You may get new job and promotion in this year.