2018 புத்தாண்டு ராசி பலன் – துலாம்

astrology-2

துலாம் – சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம் –  2018 ராசி பலன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சுயமாகச் சிந்தித்துச் செயல்படுபவர்களே!

ராசிக்கு 3-ல் சூரியனும் சுக்கிரனும் இருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால், மனோபலம் அதிகரிக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். ஷேர் லாபம் தரும். விலை உயர்ந்த மின்சார மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். ஆனால், சனியும் சேர்ந்திருப்பதாலும், ராசிக்குள் செவ்வாய் இருப்பதாலும் சிறு சிறு விபத்துகள், மறைமுக எதிர்ப்புகள், அசதி, சோர்வு வந்து செல்லும். ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச் சுமை அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைக்கு சிறு சிறு ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களை நம்பிப் பெரிய முடிவுகள் எதுவும் எடுக்கவேண்டாம். மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்கவேண்டாம்.

பார்வைப் பலன்கள்
3-ம் வீட்டில் சனி வலுவாக இருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடி வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வாழ்க்கைத் தரம் உயரும். பெரிய பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஆளுமைத் திறன் அதிகரிக்கும். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். எதிர்த்தவர்களும் நண்பர்களாவார்கள். கடன்களைத் தந்து முடிக்க வழி பிறக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு விலகிச் சென்ற உறவினர்கள், உங்களைப் புரிந்துகொண்டு மறுபடியும் வந்து அன்பு பாராட்டுவார்கள். சொந்த ஊரில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.
astrology-wheel

வருடம் பிறக்கும்போது ராசிக்கு 8-ல் சந்திரன் இருப்பதால், எளிதான விஷயங்களைக்கூட போராடித்தான் முடிக்கவேண்டி இருக்கும். ஒருபுறம் பணம் வந்தாலும் எடுத்து வைக்கமுடியாதபடி செலவுகளும் ஏற்படும். பணிச் சுமை அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம். அடிக்கடி கழுத்து வலி, சளித் தொந்தரவு, காய்ச்சல் வந்து செல்லும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டில் நடைபெறும் சுபநிகழ்ச்சிகளுக்காக சிறிது கடன் வாங்க நேரிடும். வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 2.10.18 வரை உங்கள் ராசிக்கு 3 மற்றும் 6-க்கு உடைய குருபகவான், ஜன்ம குருவாகத் தொடர்வதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அவ்வப்போது தேவையற்ற பிரச்னைகள் தலைதூக்கும். சிலர் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசுவதைப் பெரிதாகப் பொருட்படுத்தவேண்டாம். கணவன் – மனைவிக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். சிலர் உங்களுக்குள் பிரிவை உண்டாக்க முயற்சி செய்யக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும். ஆனால், 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்திலும் மற்றும் 3.10.18 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களுடைய ராசிக்கு 2-ம் வீட்டில் சென்று அமர்வதால் குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் விலகும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவீர்கள். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமையிலிருந்து விடுபடுவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். வி.ஐ.பி.கள் அறிமுகமாவார்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள்.
astrology wheel

- Advertisement -

1.1.18 முதல் 13.1.18 வரை சூரியனும், சனியும் சேருவதால் பணவரவு அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும். அரசால் ஆதாயமடைவீர்கள்.

10.3.18 முதல் 2.5.18 வரை செவ்வாயுடன், சனியும் இணைவதால், மூத்த சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டு. என்றாலும் அவ்வப்போது மனஸ்தாபங்கள் வரக்கூடும். பூர்வீகச் சொத்துகள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிப்பதுடன் நேர்த்திக் கடனையும் செலுத்தி முடிப்பீர்கள்.

3.5.18 முதல் 30.10.18 வரை செவ்வாயுடன், கேது சேருவதால் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை தவிர்க்கவும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு அவர்களைப் பிரிய நேரிடலாம். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

3.3.18 முதல் 28.3.18 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், வாழ்க்கைத்துணைக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். அவருடன் கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டு நீங்கும். மின்சார, மின்னணு சாதனங்களை கவனமாகக் கையாளுவது அவசியம்.
astrology-wheel

வருடம் முழுவதும் ராகு 10-லும் கேது 4-லும் இருப்பதால், மனதில் இனம் புரியாத ஓர் அச்ச உணர்வு அடிக்கடி ஏற்பட்டு நீங்கும். முடிவுகள் எடுப்பதில் தயக்கம் தடுமாற்றம் ஏற்படக்கூடும். கௌரவக்குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். தாயின் அறிவுரைகளை ஏற்று நடப்பது நல்லது. தாயின் உடல்நலனில் கவனம் தேவைப்படும். மற்றவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். முன்பின் தெரியாதவர்களின் உதவிகளை ஏற்றுக்கொள்ளவேண்டாம். வீட்டில் பரமாரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். மற்றவர்களிடம் குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளவேண்டாம். மற்றவர்களுக்கு வாக்குறுதி எதுவும் தரவேண்டாம்.

வியாபாரிகளே! எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சில்லரை வியாபாரத்தில் இருந்து மொத்த வியாபாரத்துக்கு மாறுவீர்கள். 3-ல் சனி இருப்பதால், தைரியமாக முதலீடு செய்வீர்கள். பண உதவிகளும் கிடைக்கும். ஸ்டேஷனரி, கல்வி நிலையங்கள், உணவகம் மற்றும் தங்கும் விடுதி, டிராவல் ஏஜென்சி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்கள் முதலில் முரண்டு பிடித்தாலும், இறுதியில் நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்வார்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய வியாபாரம் லாபம் தரும். கடையை விஸ்தாரமான இடத்துக்கு மாற்றும் முயற்சி சாதகமாகும்.

உத்தியோகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். அதிகாரிகள் பக்கபலமாக இருப்பார்கள். உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். பொது அமைப்புகளில் கௌரவப் பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ராகு 10-ல் இருப்பதால் அடிக்கடி விடுப்பில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. சில நாள்களில் சக ஊழியர்கள் விடுப்பில் செல்வதால், கூடுதல் நேரம் வேலை பார்க்கவேண்டி வரும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். புது சலுகைகள் கிடைப்பதுடன், சம்பள பாக்கியும் கைக்கு வரும்.
astrology

மாணவ – மாணவியரே! படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். வகுப்பாசிரியரின் பாராட்டுகள் கிடைக்கும். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் விரும்பிய பாடப் பிரிவில் இடம் கிடைக்கும்.

கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் ஆதரவால் முன்னேறுவீர்கள். முடங்கிக் கிடந்த உங்களின் படைப்பு வெளியாவதற்கு சில முக்கியஸ்தர்கள் உதவுவார்கள்.

புத்தாண்டின் தொடக்கத்தில் ஜன்ம குரு சின்னச் சின்ன பிரச்னைகளை ஏற்படுத்தினாலும், சனிபகவான் செல்வாக்கு, கௌரவத்தை அதிகம் தந்து சுறுசுறுப்பாக இருக்கச் செய்வார்.
astrology
பரிகாரம்:

கடலூர் மாவட்டம் திருமாணிக்குழி என்னும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவாமனபுரீஸ்வரரையும், ஸ்ரீஅம்புஜாட்சி அம்மையாரையும் சதுர்த்தசி திதியன்று சென்று வணங்குங்கள்.

துலாம் ராசிக்கான பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யுங்கள்

மற்ற ராசிக்கான பலன்களை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

English Overview

2018 new year Rasi Palan in Tamil for Thulam is explained above in detail. This Year you will take some good decision in every thing.

The people in good job will get good benefits. You will get profits in share market. You will buy costly electronic goods. You may get tried some times. There will be much work for you this year. Don’t take any big decision by believing others.