2018 புத்தாண்டு ராசி பலன் – விருச்சிகம்

விருச்சிகம் – விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை – 2018 ராசி பலன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சுயகௌரவத்தை விட்டுக் கொடுக்காதவர்களே!

உங்கள் ராசிக்கு 7-ல் சந்திரன் இருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால், புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பாதியில் நின்ற பல வேலைகள் நல்லபடி முடியும். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். நம்பிக்கைக்கு உரியவர்களின் அறிமுகம் கிடைக்கும். சொத்து வாங்குவீர்கள். தள்ளிப் போன திருமணப் பேச்சு வார்த்தை கூடி வரும். கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழைய சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். பணவரவு கணிசமாக உயரும்.

பார்வைப் பலன்கள்

ஆண்டு பிறக்கும் நேரத்தில் சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால் எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். உங்களுடைய ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதரவு உண்டு. சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஆனால், உங்கள் ராசிநாதன் செவ்வாய் 12-ல் இருக்கும்போது வருடம் பிறப்பதால், செலவுகள் அதிகரிக்கும். சிலர் வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு ஏற்படும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். சகோதர வகையில் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும்.
astrology-wheel

வருடம் முடியும்வரை சனி 2-ல் இருப்பதால், சிக்கனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் அடிக்கடி சிறுசிறு சச்சரவுகள் ஏற்பட்டு மறையும். மற்றவர்கள் உங்களை விமர்சித்துப் பேசினாலும் பொறுமையாக இருக்கவும். எதிர்மறை எண்ணங்களுடன் பேசுபவர்களின் சகவாசத்தைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்குக் கண் எரிச்சல், பார்வைக் கோளாறு, பல்வலி, காதுவலி வந்து செல்லும். வழக்குகளால் நிம்மதி குறையக்கூடும். அரசாங்க விஷயங்கள் சற்று தாமதமாகத்தான் முடியும்.

- Advertisement -

வருடத் தொடக்கத்தில் இருந்து 13.1.18 வரை சூரியனும், சனியும் சேர்ந்திருப்பதால் உடல் உஷ்ணம், ரத்த அழுத்தம், காரியங்களில் தடை தாமதங்கள் வந்துப் போகும். அரசு காரியங்கள் இழுபறியாகும். மூத்த சகோதர வகையில் பிணக்குகள் வரும். வீடு, மனை வாங்குவதற்கு முன்பு சட்ட நிபுணர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது.

10.3.18 முதல் 2.5.18 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் சனியுடன் இணைந்து பலவீனமடைவதால் சகோதர வகையில் சங்கடங்கள், பணப்பற்றாக்குறை, சொத்துச் சிக்கல்கள் வந்து செல்லும்.
astrology wheel

3.5.18 முதல் 30.10.18 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் கேதுவுடன் சேர்வதால் புதிய முயற்சிகள் வெற்றியடையும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். இளைய சகோதர வகையில் ஆதரவு பெருகும்.

29.3.18 முதல் 21.4.18 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால் அலைச்சல், செலவினங்கள் அதிகரிக்கும். கணவன் – மனைவிக்குள் சந்தேகத்தால் சின்னச் சின்ன வாக்குவாதங்களும் வரக்கூடும்.

இந்த வருடம் முழுக்க ராகு 9-ம் வீட்டில் நிற்பதால், எதையும் திட்டமிட்டுச் செய்யவும். தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. முடிவுகள் எடுப்பதில் அவசரம் வேண்டாம்.ஆனால், ராசிக்கு 3-ல் கேது நிற்பதால், எதையும் சாதிக்கும் துணிச்சல் ஏற்படும். பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பிரபலங்கள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். விலை உயர்ந்த மின்சார மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். ஆன்மிகப் பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். நீண்டகாலமாகச் செல்ல நினைத்த வெளி மாநில புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஷேர் மூலம் லாபம் வரும். வழக்குகள் சாதகமாகும். பால்ய நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.
astrology-wheel

2.5.18 முதல் 30.10.18 வரை ராசிநாதன் செவ்வாய், கேதுவுடன் இணைவதால் தன்னம்பிக்கை குறையும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பிவிடாதீர்கள். சேமிப்புகளில் எச்சரிக்கை தேவைப்படும்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 2.10.18 வரை தனம் மற்றும் பூர்வபுண்ணியஸ்தானாதிபதியான குருபகவான், 12- மறைந்திருப்பதால், கடன்கள் கவலை தரும். மற்றவர்களுக்கு வாக்குறுதி எதுவும் தரவேண்டும். பணப் பற்றாக்குறையால் வீடு கட்டும் பணி தடைப்பட்டு முடியும். ஆனால் 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்திலும் மற்றும் 3.10.18 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களுடைய ராசிக்குள் அமர்வதால், வீண் அலைச்சல்கள், அலைக்கழிப்புகள் குறையும். சிறு சிறு ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்பட்டு சரியாகும். கணவன் – மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. அடிக்கடி தர்மசங்கடமான சூழ்நிலைகளைச் சமாளிக்கவேண்டி வரும். பிள்ளைகளை அனுசரித்து நடந்துகொள்ளவும்.

வியாபாரிகளே! பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். பழைய சரக்குகளைப் போராடித்தான் விற்கவேண்டி இருக்கும். வேலையாள்களின் போக்கை நினைத்து கவலைப்படுவீர்கள். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவதில் அவசரம் வேண்டாம். கூடுமானவரை இருக்கும் இடத்திலேயே இருப்பது நல்லது. பங்குதாரர்கள் கொஞ்சம் முரண்டு பிடித்தாலும் அனுசரித்துச் செல்லவும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்,. கமிஷன், சிமெண்ட், மருந்து வகைகளால் ஆதாயம் உண்டாகும்.
astrology

உத்தியோகத்தில் எதிர்ப்புகளும் ஏமாற்றங்களும் இருக்கவே செய்யும். உங்களின் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பை மேலதிகாரி புரிந்துகொள்ளமாட்டார். சக ஊழியர்களால் சலசலப்புகள் ஏற்படும். உங்கள் கருத்துகளைப் பக்குவமாக எடுத்துச் சொல்வது நல்லது. அதிக சம்பளத்துடன் புது வேலை வந்தாலும் பலமுறை யோசித்து ஏற்பது நல்லது.

மாணவ – மாணவியரே! படிப்பில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. ஆசிரியர்களின் ஆலோசனைகளை அப்படியே ஏற்றுக்கொள்வது நல்லது. குறிப்பாக அறிவியல், கணிதப் பாடங்களில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளவும்.

கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டாம். இளம் கலைஞர்களால் ஆதாயம் உண்டாகும்.

இந்தப் புத்தாண்டு வேலைச்சுமை மற்றும் மனதில் சோர்வையும் ஏற்படுத்தினாலும், உங்கள் பலம் மற்றும் பலவீனத்தை உங்களுக்கு உணர்த்துவதாக அமையும்.
astrology

பரிகாரம்:

திருச்சி மாவட்டம் உறையூரில் வீற்றிருக்கும் ஸ்ரீவெக்காளி அம்மனை வெள்ளிக் கிழமையில் சென்று வணங்கி வாருங்கள்.

விருச்சிக ராசிக்கான பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யுங்கள்

மற்ற ராசிக்கான பலன்களை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

English Overview

2018 new year Rasi Palan in Tamil for Viruchigam is explained above in detail. In this year you will start your journey in some good path.

The works which got hold will be started in this year. You will get some good chances to express your skills. You will get intro with some good people. You will get new property. Marriage will happen for youngsters in right time. There will be a good relationship between husband and wife. You get costly jewelry and dress. You will get good amount of money this Year