2018 ஆம் ஆண்டில் உங்கள் ராசிக்கான அதிஷ்ட நிறம் எது தெரியுமா ?

athista niram

பொதுவாக ஒவ்வொரு ஆண்டு பிறக்கும் சமயத்திலும் அந்த ஆண்டு ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எப்படி அமையும், எது அதிஷ்டம் தரும் போன்றவற்றை கணிப்பது வழக்கம். அந்த வகையில் 2018 ஆண்டில் எந்த ராசிக்காரருக்கு எந்த கலர் அதிஷ்டம் தரும் என்று பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்:
meshamகண்ணிமைக்கும் நேரத்தில் வேகமாக முன்னுக்கு வந்துவிடும் திறன் கொண்ட மேஷ ராசி நண்பர்களே, எலுமிச்சை மஞ்சள், பச்சை, வெள்ளை ஆகிய நிறங்கள் உங்களுக்கு 2018 ஆண்டில் அதிஷ்டம் தரும் நிறங்கள் ஆகும். ஆகையில் முக்கிய காரியங்கள் செய்யும்போதும் இது போன்ற நிறத்தில் உடை அணிந்து செய்துவது சிறந்தது.

பாரதியார் கவிதைகள் படிக்க இங்கு கிளிக் செய்யவும்

ரிஷபம்:
rishabamஎந்த ஒரு வேலையையும் முழு மனதோடு செய்யும் ரிஷபராசி நண்பர்களே, சிவப்பு, பச்சை ஆகிய நிறங்கள் உங்களுக்கு 2018 ஆண்டில் அதிஷ்டம் தரும் நிறங்கள் ஆகும். இந்த நிறை உடை அணிந்து செயலாற்றுகையில் உங்களுக்கு ஒரு புது உத்வேகம் வரும்.

மிதுனம்:
midhunamசூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு செயல்படும் மிதுன ராசி நண்பர்களே, சாம்பல் மற்றும் வெள்ளை நிறங்கள் உங்களுக்கு 2018 ஆண்டில் அதிஷ்டம் தரும் நிறங்கள் ஆகும். நீங்கள் எந்த ஒரு புதிய செயலையும் சாம்பல் அல்லது வெள்ளை நிற ஆடையை அணிந்துகொண்டு புதன்கிழமைகளில் தைரியமாக மேற்கொள்ளலாம்.

கடகம்:
kadagamபணத்தை சேமிக்கும் எண்ணம் கொண்ட கடக ராசி நண்பர்களே, நீலம் மற்றும் சிகப்பு நிறங்கள் உங்களுக்கு 2018 ஆண்டில் அதிஷ்டம் தரும் நிறங்கள் ஆகும். வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் நீங்கள் நீலம் அல்லது சிகப்பு நிற ஆடையை அணிந்தால் உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

- Advertisement -

சிம்மம்:
simmamஎத்தகைய கூட்டத்திற்கு தலைமை தாங்கும் வல்லமை கொண்ட சிம்ம ராசி நண்பர்களே, தங்கநிறம் மற்றும் வெள்ளை நிறமே உங்களுக்கு 2018 ஆண்டில் அதிஷ்டம் தரும் நிறங்கள் ஆகும். ஞாயிற்றுக்கிழமைகள் நீங்கள் தங்கம் அல்லது வெள்ளை நிற ஆடை அணிந்து முக்கிய செயல்களை செய்தால் வெற்றி நிச்சயம்.

கன்னி:
kanniபணத்தின் மகத்துவத்தை நன்றாக புரிந்துகொள்ளும் திறன் கொண்ட கன்னி ராசி நண்பர்களே, நீலம் மற்றும் பச்சை நிறங்கள் உங்களுக்கு 2018 ஆண்டில் அதிஷ்டம் தரும் நிறங்கள் ஆகும். செய்வாய் மற்றும் சனி கிழமைகளில் நீங்கள் நீலம் அல்லது பச்சை நிற ஆடையை அணிந்து முக்கிய முடிவை எடுத்தால் அந்த காரியம் வெற்றி பெறுவதற்கான சாத்திய கூறுகள் அதிகம்.

துலாம்:
thulamஎதையும் நிடுநிலை மனப்பான்மையோடு எதிர்கொள்ளும் துலாம் ராசி நண்பர்களே, நீலம், வெள்ளை மற்றும் பச்சை நிறங்கள் உங்களுக்கு 2018 ஆண்டில் அதிஷ்டம் தரும் நிறங்கள் ஆகும். வெள்ளிக்கிழமைகளில் நீங்கள் நீலம், வெள்ளை அல்லது பச்சை நிற ஆடையை அணிவதன் மூலம் உங்கள் மேலதிகாரிகளிடம் நன்மதிப்பை பெறலாம்.

விருச்சிகம்:
virichigamகடினமாக உழைக்கும் எண்ணம் கொண்ட விருச்சிக ராசி நண்பர்களே, வெண்மை மற்றும் கருப்பு நிறங்கள் உங்களுக்கு 2018 ஆண்டில் அதிஷ்டம் தரும் நிறங்கள் ஆகும். திங்கள், செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நீங்கள் வெள்ளை அல்லது கருப்பு நிற ஆடையை அணிந்துகொண்டு முக்கிய விடயங்களை மேற்கொள்வது சிறந்தது.

தனுசு:
dhanusuகலாச்சாரம், ஆன்மீகம், அமைதி என்று தனிமையில் இனிமை காணும் தனுசு ராசி நண்பர்களே, பச்சை, மஞ்சள், சிகப்பு ஆகிய நிறங்கள் உங்களுக்கு 2018 ஆண்டில் அதிஷ்டம் தரும் நிறங்கள் ஆகும். வியாழக்கிழமைகளில் நீங்கள் மஞ்சள் நிற ஆடையை அணிந்துகொண்டு முக்கிய பணிகளில் ஈடுபடுவது சிறந்தது.

மகரம்:
magaramஎப்பேற்பட்டதையும் இரவு பகலாக போராடி பெரும் ஆற்றல் கொண்ட மகர ராசி நண்பர்களே, பச்சை மற்றும் நீல நிறங்கள் உங்களுக்கு 2018 ஆண்டில் அதிஷ்டம் தரும் நிறங்கள் ஆகும். சனிக்கிழமைகளில் நீங்கள் பச்சை அல்லது நீல நிற ஆடையை அணிந்துகொண்டு செய்யும் செயல்கள் அனைத்திலும் ஒரு புதுவித வேகம் இருக்கும்.

கும்பம்:
kumbamஅனைத்திலும் தனியாக செய்யப்பட்டு வெற்றியை ஈட்டும் திறன் கொண்ட கும்ப ராசி நண்பர்களே, வான நீலம் மற்றும் பச்சை நிறங்கள் உங்களுக்கு 2018 ஆண்டில் அதிஷ்டம் தரும் நிறங்கள் ஆகும். நீங்கள் வெள்ளிக்கிழமைகளில் பச்சை அல்லது ஸ்கை ப்ளூ நிற ஆடையை அணிந்துகொண்டு புதிய முயற்சிகளில் ஈடுபட்டால் நல்ல பலனை தரும்.

காதல் பொருத்தம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

மீனம்:
meenamஅடுத்தவர்களிடம் எப்போதும் அன்பாக பழகும் மீன ராசி நண்பர்களே, பச்சை நிறமே உங்களுக்கு 2018 ஆண்டில் அதிஷ்டம் தரும் நிறம் ஆகும். வியாழ கிழமைகளில் நீங்கள் பச்சை நிற ஆடையை அணிந்துகொண்டு புதிய முயற்சிகளில் ஈடுபடுவது சிறந்தது.